Posts

Showing posts from 2019

அவர் வீடுதிரும்பியது உண்மைதான்

Image
அவர் வீடுதிரும்பியது உண்மைதான் என்னுடைய நண்பர் ஒருவர் கொலைவழக்கு ஒன்றில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சட்டம்சாரா காவலில் காணாமல் ஆக்கப்பட்டார்.மனைவியின் உறுதியான போராட்டத்திற்குப் பின்னரும் அவர் எங்கே வைக்கப்பட்டார் என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை.எங்களிடம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.காரணம் தெளிவாக இருந்தது.கொலையுண்ட நபரின் மனைவி இவர் பெயரை மனுவிலேயே சந்தேகத்தின் பெயரில் இணைத்திருந்தார். இத்தனைக்கும் வீட்டில் வந்து இவரது மனைவியின் முன்னிலையில் அவரைப் போலீஸார் பிடித்துச் சென்றிருந்தார்கள்.அந்த வழக்கில் காணாமலாக்கப்படும் காவலில் ஆறுபேர் கைது செய்யப்பட்டிருந்தார்கள் உடனிருந்த ஆறுபேரும் ஏற்கனவே ஒன்டென் வழக்கு பதியப்பட்டிருப்பவர்கள்.பதினைந்து நாட்களுக்குப் பிறகு : காணாமலாக்கப்படும் காவலின் விருந்திற்கு எவ்வளவு நாட்கள் எந்த எந்த வைத்தியர்களிடம் வர்மம் எடுக்கவேண்டும் என்கிற அறிவுரையும் வழங்கப்பட்டு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.விடுவிக்கப்பட்டமைக்குக் உண்மையான குற்றவாளி பதினான்காவது நாளில் சரணடைந்திருந்ததே காரணம் .அவர் சரணடையவில்லை எனில் இந்த அறுவரில் பின்னணி குறைந்

எனக்கு அறிவு கிடையாது அதனால் தப்பித்தேன்

Image
எனக்கு அறிவு கிடையாது அதனால் தப்பித்தேன் எனக்கு ஐம்பதாவது வயது பிறந்திருக்கிறது.ஒவ்வொருவருக்கும் நாற்பத்தியைந்திற்கும் மேல் ஒரு கண்டம் வரும்.அது கடந்தால் பின்னர் கண்டம் திரும்பவும் வந்துகூட பத்தாண்டுகள் ஆகும்.அரசபணியில் இருப்பவர்களுக்கு ஓய்வில் கண்டம்.அதாவது ஓய்வு தொடங்குகையில் எப்படி? என்கிற திகைப்பிருக்கும்.சிலர் மனநல பிரச்சனைகளுக்கும் ஆளாவதுண்டு.அதுவரையில் அவர்கள் வாழ்ந்த வாழ்வு போதாது,போலியானது என்பது தெரிய வரும்.சிலர் அதனை குறுக்கு வழிகளில் கடக்காமல் நேர்வழிகளில் எதிர ்கொள்ள பழகிக் கொண்டார்கள் எனில் எண்பதுவரையில் தடங்காமல் செல்லமுடியும். நீள் ஆயுள் மீண்டும் பிறவாமைக்கு நல்மருந்து.ஏக்கங்கள் அனைத்தும் தணிந்து சாதல் நலம்.பூரண வாழ்வு அது.அதனால் நீள் ஆயுள் வாழ்பவரேல்லாம் பூரண வாழ்வு கொண்டவர்கள் என்றோ பூரணமாக வாழ்ந்தவர்கள் என்றோ சொல்ல முடியாது.வாழ்வினை ஒரு கப்பல் பயணம் போல சாதிப்பவர்களுக்கு அது விளங்கும். கவிஞர் தேவதச்சன் ஒரு சமயம் " நமக்கு புறத்தில் இருப்பவர்கள் நமக்கு வயது கூடிக் கொண்டிருப்பதை பார்க்கிறார்கள் ,அகத்தில் நமக்கு வயது கூடுவதில்லை " என்று சொன்னார். அது

மூட நம்பிக்கைகள் நுட்பமான மனதின் கண்டுபிடிப்புகள்

Image
மூட நம்பிக்கைகள் நுட்பமான மனதின் கண்டுபிடிப்புகள் போர்ஹே பின்னாட்களில் அவருடைய நேர்காணல் ஒன்றில் "தான் மூட நம்பிக்கையாளனாக மாறிக் கொண்டிருக்கிறேன் " என்று தெரிவிக்கிறார். போர்ஹே இந்திய தத்துவங்கள் குறித்தும் எழுதியவர்.கரடு முரடான முரட்டு மனதிற்கு எதுவும் தேவையில்லை.அதற்கு மதுரையில் பேருந்திலேறினால் நேரடியாக சென்னை சென்று சேரலாம் என்பதை மட்டும் தெரிந்து வைத்திருந்தால் போதுமானது. ஆனால் கலைஞன் அன்றாடம் பொருள் விளங்காத பல்வேறு விஷயங்களை பார்த்துக் கொண்டிருக்கிறான்.சாதாரணமான மக்களும் அப்படி காண்கிறார்கள்.அவற்றில் உண்மை இருப்பது விளங்குகிறது.ஏன் எப்படி என்பவை விளங்குவதில்லை.யாரேனும் அவற்றை விளக்குவார்கள் எனிலும் கூட அவை முறையாக விளங்குவதில்லை.கலைஞனுக்கும் கவிஞனுக்கும் இவையெல்லாம் மிகவும் முக்கியமானவை. பிரென்ச் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் இரண்டாம் நூற்றாண்டில் தான் தினந்தோறும் கண்ட கனவுகளை பதிவு செய்து வைத்திருக்கிறார்.அவற்றில் இந்திய சமூகத்திற்கு பொதுவான கனவுகள் கூட இருக்கின்றன. பூக்கோ தனது ஆய்வுக்காக இருபதாம் நூற்றாண்டில் அவன் கண்ட கனவுகளை எடுத்துக் கொள்கிறார்.ச

குழந்தை ரௌடி

Image
குழந்தை ரௌடி 1 ரௌடி கொல்லப்பட்ட ஊரில் அடக்கம் முடிந்ததும் அடங்கா பிணம் எல்லார் மனதிலும் மேலெழும்பியது என்னை ஆதரித்தோர் எதிர்த்தோர் எல்லாம் நீங்கள்தானே அல்லவா என்று கேட்டது உங்களிடம் எழும்புவதும் அடங்குவதுமாக நான் இருக்கிறேன் அல்லவா தெருமுனையில் நான் வெட்டிச் சாய்கையில் நீங்களும் உடன்சேர்ந்து சாய்ந்தீர்கள் அல்லவா பிறகு இப்போது எழும்பி நிற்கிறேன் அல்லவா மீண்டும் ஒருமுறை முதலில் தொடங்கி சடங்குகள் செய்து அடக்குங்கள் மீண்டும் மேலெழும்ப இயலாவண்ணம் என்னை மீண்டும் ஒருவன் எடுத்து அணிந்து கொள்ளல் ஆகாது மீண்டும் ஒருவனுக்கு நீங்கள் அணிவித்து விடுவதும் கூடாது கோரிக்கை செய்தது பிணம் என்னை நானாக எடுத்து அடக்கம் செய்ய இயலாது மீண்டும் ஒருமுறை அடக்கம் செய்யுங்கள் தேவைப்பட்டால் என்னுடைய குழந்தைகள் அறியாமல் மனைவிக்குத் தெரியாமல் மீண்டும் மீண்டும் அடக்கம் செய்து கொண்டிருங்கள் நீங்களோ நானோ அடங்குவதுவரை 2 வெட்டிச் சாய்ந்ததும் தேனாய் இனித்து குருதியை வற்றக் குடித்தது நிலம் சுற்றிலும் வட்டக்கறைகள் 3 பிணச்சோறு தின்றவர்கள் விட்டுச்

அமைதி தனித்திருக்கிறது

Image
அமைதி தனித்திருக்கிறது 1 போற்றப்படுவதெல்லாம் வளர்வதை போலவே தூற்றப்படுவதெல்லாமும் வளர்கிறது தனக்குள் தானாக 2 புறத்தில் இருந்து காரணங்கள் வந்தால் உள்ளம் சிதைகிறது உள்ளத்தின் காரணம் புறத்தை அழிக்கிறது புறத்தை அழிக்கும் அகம் அகோரம் 3 எல்லாம் ஒரே வகை விதவையர் ஒரே வகையாக இருக்கிறார்கள் விடோவர் ஒரே வகையாக இருக்கிறார்கள் விவாகரத்து பெறுவோர் ஒரே வகையாக இருக்கிறார்கள் திருமணம் ஆனவர்கள் ஒரு வகை ஆகாதவரெல்லாம் ஒரே வகை ஆகவே முடியாதவர்கள் ஒரு வகை முரண்படுவோர் ஒரே வகையாக இருக்கிறார்கள் நிம்மதியற்றோர் ஒரே வகையாக இருக்கிறார்கள் எதிர்வாது செய்வோர் ஒரே வகையாக இருக்கிறார்கள் சகிப்பற்றோர் ஒரே வகையாக இருக்கிறார்கள் சண்டையிடுவோர் ஒரே வகையாக இருக்கிறார்கள் சண்டையிடத் தூண்டுவோர் ஒரே வகையாக இருக்கிறார்கள் சச்சரவிடுவோர் ஒரே வகையாக இருக்கிறார்கள் பொது மண்டபம் இடிப்போர் ஒரே வகையாக இருக்கிறார்கள் ஏன் ஒரே வகையாக இருக்கிறார்கள் என்பது தெரியாததால் ஒரே வகையாக இருக்கிறார்கள் ### அமைதி தனித்திருக்கிறது 4 அமைதிக்கும் நமக்குமிடையில் தான் எவ்வளவு பெரிய பேருந்து நெரிசல

வரவழைக்கப்பட்டவன் வந்து சேர்ந்திருக்கிறான்

Image
உருவமற்றது மிஞ்சும் 1 எல்லோருக்கும் ஒரு உருவம் கிடைத்ததைப் போலவே எனக்கொரு உருவம் கிடைத்தது குள்ளம் சராசரி மாநிறம் உருவம் உருவத்திற்கான வேலைகளையெல்லாம் செய்து கொண்டிருக்கிறது நான் எனக்குரியவற்றை செய்து கொண்டிருக்கிறேன் உருவம் கைவிட்டுச் செல்லும் உருவமற்றது மிஞ்சும் 2 உருவம் தானமாக வந்தது தானமாக வந்தது ; அது உருவமற்றத்தை உற்றுப் பார்த்து கொண்டிருக்கிறது 3 உருவம் சின்ன உருவமானாலும் அது பார்த்துக் கொண்டிருப்பது பேருருவம் 4 உருவத்தைக் கொண்டே உருவமற்றதை செய்து கொண்டிருக்கிறோம் 5 பேயுருவம் உருவத்தின் உச்சம் பேருருவம் உருவமற்றதின் உயரம் 6 உருவம் தரப்பட்ட போதே எடுத்துக் கொள்ளவும் பட்டது இடையில் ஏராளம் செய்கிறோம் செய்யாமலும் விடுகிறோம் 7 உருவத்திற்கு உருவமில்லை 8 ஒவ்வொரு உருவத்திலிருந்தும் உருவமற்றதே எஞ்சும் எஞ்சாவிடில் உருவம் வாழ்ந்திருக்கிறது விழுந்திருக்கிறது 9 உருவத்திற்காக உண்ட உணவு செய்த பிரார்த்தனை கண்ட கனவு செய்த செயல் எல்லாம் வீணாயிற்றே 10 உருவமல்லாததற்கு உருவம் செய்து கொண்டான் பேரலங்காரப் பிரியன் 11

கிறிஸ்தவ அரசியல் என்பது என்ன ?

Image
கிறிஸ்தவ அரசியல் என்பது என்ன ? கிறிஸ்தவ அரசியல் என்ற ஒன்று இருக்கிறது.இருக்கவும் வேண்டும்.அதுபோல நாடார் அரசியல்,தேவர் அரசியல் ,வன்னியர் அரசியல் , தலித் அரசியல் எல்லாம் இங்கே உண்டு.இவற்றிலும் கிறிஸ்தவ நாடார் அரசியல் வேறு.இந்து நாடார் அரசியல் என்பது வேறு.இந்து வெள்ளாளர்களின் அரசியலும் கிறிஸ்தவ வெள்ளாளர்களின் அரசியலும் ஒன்றல்ல.பிராமண அரசியல் தனிவகை.இன்று பா.ஜ.க ; ஆர்.எஸ் .எஸ் சக்திகளால் முன்வைக்கப்படுகிற இந்து அரசியல் என்பது இந்துக்களின் அரசியல் அல்ல.அது ஒற்றை இந்துத்துவாவின் அரசியல் .பன்முகத்தன்மையை ஏற்காத அரசியல் அது. இவை ஒவ்வொன்றும் என்னென்ன ,இவற்றின் சமூகவியல்,உளவியல் நாட்டமென்ன ? என்பதை புரிந்து கொள்ள விரிவான கண்ணோட்டம் அவசியம்.இதில் எது ஒன்றிற்கும் அர்த்தமில்லை,முக்கியத்துவம் இல்லை என்று விவாதிக்கும் குரல்கள் அனைத்துமே தங்கள் குழுவினரின் அரசியலுக்கு அப்பால் உள்ளவற்றை மறுதலிக்கும் குறுகிய தன்மை கொண்டவை.வன்னியர் அரசியல் மிகவும் பின்தங்கியது .நவீனமடையாதது. இந்த அரசியல் அனைத்திற்குமே சமூகத்தில் இடமுண்டு.குழு குழுவாக வாழ்கிற ஒரு சமூகத்தில் இவையெதுவுமே புறக்கணிக்கத்

கண்டடைதலின் கவிதை

கண்டடைதலின் கவிதை லக்ஷ்மி மணிவண்ணனின் இக்கவிதைகள் புதுக்கவிதையின் பழகிப்போன தேடல் ,சலிப்பு ஆகியவற்றுக்குப் பதிலாக கண்டடைதலை, அதில் உளம் அமைதலை காட்டுகின்றன. அதற்குரிய ஒரு ‘ நெஞ்சோடு கிளத்தல்’ மொழி அமைந்துள்ளது. இது இக்கவிதைகளை வீரசைவ வசன கவிதைகளை நினைவூட்டுவதாக ஆக்குகிறது. அக்கமாதேவியின் குகேஸ்வரன் நெஞ்சக்குகையில் வாழ்பவன் தானே ? கண்டடைதலின் கவிதை இக்கவிதைகளை வகுப்பேன். இவற்றை கருத்துக்கள், அறிவுறுத்தல்கள் என்று கொள்வது கவிதை வாசிப்பாகாது. அவ்வெளிப்பாடுகளினூடாக அவை நிகழ்ந்த அந்தத் தருணத்து உள நிலையை, அகஎழுச்சியை சென்றடைய முடியும் என்றால் வாசகனும் அக் கவிதையைப் பெற்றுக் கொள்கிறான் ### வெவ்வேறு தனிவெளிப்பாடுகள். ஒவ்வொன்றும் தனித்தவை. ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையும்கூட. அவை இணைந்து உருவாகும் அந்த உளநிலையின் உச்சம் அச்சருகு. ஒரு காலால் விண்ணுக்கு எற்றப்பட்டு பறவையாகும் தருணத்தை அடைந்தது. அது காலனின், தருமனின் கால். - ஜெயமோகன் [ ஜெயமோகன் நமது படைப்புகள் பற்றி சொல்லும் போது பிறர் எவர் சொன்னாலும் ஏற்படாத மகிழ்ச்சி மனதிற்கு கிடைக்கிறது.தொடர்ந்து எழுதும் உத்வேகத்தை பெறுகிறோம்

நாளை வந்துருச்சுப்பா எழும்பு

Image
நாளை வந்துருச்சுப்பா எழும்பு 1  அம்மன் இன்று புன்னகை பூத்தாள் நேற்று புன் முறுவல் அதன் முன்பு மென் நகை அதன் முன்பு கோபம் அதன் முன்பு தாபம் அதன் முன்பு சோகம் அதன் முன்பு காதல் அதன் முன்பு வாய்விட்டுச் சிரித்தாள் தினந்தோறும் நானும் பார்த்து வருகிறேன் அம்மன் ஒருபோதும் ஒருபோல இருந்தததில்லை கல்லென்றாலும் காணும் கண்களில் வேறொன்று செய்கிறாள் நீல வேணி 2 காலைப் பொன்நிறத்தின் சாரல் மின்மினிகள் ஒழுகுவது போலும் நிலம் நோக்கி இறங்குகிறது மழையைப் பார்க்க வேண்டுமெனில் முதலில் மழை என்ற சொல்லை மறக்க வேண்டியிருக்கிறது அல்லாமல் காணும் மழை மழை என்கிற அர்த்தம் மழை அதற்கு வெளியில் பெய்து கொண்டிருப்பது 3 இன்று காலையில் ஆகஸ்ட் மாதத்திற்கு முப்பத்தியொரு நாட்கள் என தெரிந்து கொண்டேன் இருந்தாலும் எத்தனை நாட்களுக்கு இது வரும் என்பது தெரியாது தமிழ் மாதத்தில் முப்பத்திரண்டு நாட்கள் கூட இருக்கின்றன முன்பெல்லாம் மூட்டை மடக்கி பள்ளம் மேடு என அறியும் வழி ஒன்றினைத் தெரிந்து வைத்திருந்தேன் எப்படியோ அது கை நழுவிப் போய்விட்டது எதிர்பாராமல் ஒருமுறை வாரத்திற்கு எத்தன

வண்ணதாசன் என்ற கல்யாண்ஜி

Image
வண்ணதாசன் என்ற கல்யாண்ஜி ; மனதால் எழுந்து வந்த பாதை பெரும்பாலானவர்களை பாதித்தவர் கல்யாண்ஜி . கவிதை எழுத விரும்பும் ஒருவர் அவரால் பாதிப்படையவில்லையெனின் இனி பாதிப்படைவார் .இரண்டு வகையினர் இங்கே இருக்க முடியும் .ஒன்று அவரால் ஏற்கனவே பாதிப்படைந்தவர் இல்லையெனில் இனி பாதிப்படையவிருக்கிறவர்.அன்றாடத்தின் பல நுட்பங்களை அவர் வாசகனுக்கும் கடத்திவிடக் கூடியவர்.சீண்டும் பண்பும் கொண்டவர்தான் என்றாலும் அது அவரில் மிகவும் சிறிய பகுதி.அன்பால் மூடியிருக்கும் பகுதி அது.தமிழில் வாசகர்கள் அதிகம் உள்ள கவிஞரும் அவரே. கவிஞர்களில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படையாகப் பேசியவர்கள் மிகவும் குறைவு.நவீனத்துவ விமர்சகர்கள் அவரை பொருட்படுத்தி பலமாக நிராகரித்தார்கள்.அதற்கு அது ஒரு காரணமாக இருக்கலாம்.இந்த நிராகரிப்பையும் மீறி அவர் ,தான் என்ன செய்ய வேண்டுமோ அதனை தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தார். தமிழ் சூழலில் இதழியல்,விமர்சனம் கலையிலக்கியம் எல்லாவற்றிலுமே ஏராளமான பாரபட்சங்கள் உண்டு.அவற்றில் பல கண்களுக்கு புலப்படாதவை.சாதி,மதம் ,கருத்தியல்,கொள்கை ,கட்சி என நிறைய . இவற்றையெல்லாம் ஒருவர் எதனால் எதனால் ? என்

இந்தியாவில் இடதுசாரிகள் வீழ்ச்சியடையக் கூடாது

Image
இந்தியாவில் இடதுசாரிகள் வீழ்ச்சியடையக் கூடாது அவர்கள் அதிகாரத்தில் இருக்கத் தேவையில்லை.இருக்கலாம் இல்லாமல் போகலாம்,அது பிரச்சனையில்லை. கருத்தியல் ரீதியில் அவர்கள் வீழ்ச்சியடையக் கூடாது.மக்களை புரிந்து கொள்வதில் பிழை செய்யக் கூடாது.அப்படி ஏற்படும் பிழைகள் இந்தியாவில் காங்கிரசை வீழ்த்தும். வடிகட்டிய இடதுசாரித்தனத்தை கொண்டதுதான் இந்தியாவில் காங்கிரஸ் கட்சி.நேருவிடம் இருந்து இது உருவாகிறது,இந்திரா காந்தியிடம் தொடர்கிறது.நரசிம்ம ராவ் ,மன்மோகன் என அதற்கு நெடிய மரபு இருக்கிறது.முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் பலர் பேசுகிற குரல் கொஞ்சம் வடிகட்டிய இடதுசாரி குரல் அவ்வளவுதான் .எனவே இடதுசாரிகள் இந்தியாவில் ஜீவனை விட்டால் காங்கிரசும் உடன் சேர்ந்து மரிக்கும் .இந்தியாவில் காங்கிரஸ் கட்சி துவழக் கூடாது .அதற்காகவேனும் இடதுசாரிகள் இன்றியமையாதவர்கள்.உலகளாவிய விதத்தில் இடதுசாரிகளை காங்கிரஸ் உள்வாங்கிய விதமே அவர்களில் பெரும்பாலானோரை மக்களை நோக்கி சிந்திப்பவர்களாக வைத்திருக்கிறது. கொஞ்சம் ஆழ்ந்து கவனிப்பீர்களேயாயின் உங்களுக்கு ஒரு விஷயம் புலப்படும்.மம்தா வங்கத்தில் இடதுசாரிகளுக்கு எதிரானவரே.ஆனால் மம்தா

ஏதேனும் அழியுமென்று நினைக்கிறீர்கள் ?

Image
ஏதேனும் அழியுமென்று நினைக்கிறீர்கள் ? 1 சாலையின் மத்தியில் ஆலிலை ஒன்று சற்றே பழுப்பு சற்றே பச்சை நிமிர்ந்து நிற்கிறது அந்த பக்கமாக வாகனம் செல்கையில் இந்த பக்கமாக சுழன்று திரும்புகிறது இந்த பக்கம் வாகனத்திற்கு அந்த பக்கம் ஒற்றைக்கால் நடனம் என்ன நினைத்தானோ சிறுவன் ஊடே புகுந்து இலையை ஓரத்திற்கு உயரே எறிந்தான் நடனம் இப்போது மேலே பறக்கிறது. 2 ஒன்பது மகன்களை பெற்ற அப்பாவின் இளைய மகன் அப்பாவின் ஒரு கைமட்டும் பறந்து செல்வது போல வாகனத்தில் விரைகிறான் அப்போதுதான் கவனித்தேன் மீதமுள்ளோர் மீதமுள்ள அவயங்களாயிருப்பதை ஒன்பது அவயங்கள் பதினெட்டு கைகள் கால்கள் கண்கள் செவிகள் ஒரே புருஷன் 3 ஏதேனும் அழியுமென்று நினைக்கிறீர்கள் ? மிச்சம் வைத்த ஆசைகள் மிச்சம் வைத்த தகிப்புகள் மீதமிருக்கும் தாகங்கள் மீதமிருக்கும் வஞ்சம் உறுப்பு தேடித் கொண்டிருக்கின்றன ஒவ்வொன்றும் 4 சரியாகவே வாழ்ந்ததாகச் சொல்லி ஒரு பிழை விட்டீர்கள் அந்த பிழையே நானாக வளர்ந்து பெரிதானது இந்த பிழையைக் கொண்டு போய் அந்த இடத்தில் நட்டு வைக்க வேண்டும் இல்லாமல் தர்க்கம் பண்ணுவதில் ஒரு பலனும் இல