Posts

Showing posts from April, 2019

"பொன்பரப்பி "அனைவருக்கும் என்னுடைய நன்றி நன்றி

Image
"பொன்பரப்பி " கண்டனக் கூட்டத்திற்கு வந்து எதிர்ப்புக்குரலை வலிமைப்படுத்திய அனைவருக்கும் நன்றி "இது இரு இரு அரசியல் தரப்பினருக்கு இடையேயான பூசல் அல்ல. இது ஆதிக்கம் கொண்ட ஒரு சாதியால் தலித் மக்களை ஒடுக்கி தாக்கி அச்சுறுத்தி வைத்திருப்பதைக் காட்டும் நிகழ்வு. அந்த ஒடுக்குமுறைக்கு எதிரானது இக்குரல். உண்மையான பிரச்சினை இந்தத் தாக்குதல் அல்ல . இப்படி தாக்கும் நிலையில், கைவிடப்பட்ட சூழலில் அந்த மக்கள் வைக்கப்பட்டிருப்பதே" - ஜெயமோகன் ஒருவார கால அவகாசத்திற்குள் நண்பர்களை ,கவிஞர்களை , எழுத்தாளர்களை ஒழுங்குபடுத்தி ஒருங்கிணைப்பது கடினமான பணி.எனினும் இத்தகைய பணிகளை அவகாசம் எடுத்து தள்ளிப் போடவும் முடியாது அழைத்த நண்பர்களில் பலர் இக்கட்டான வேலைகளில் இருந்தார்கள் .லீனா மணிமேகலை ஒரு படத்திற்காக சிறைக்காட்சிகளை படம் பிடிக்க குறிப்பிட்ட தினத்தில் நேரம் ஒதுக்கியிருந்தார். தமிழச்சி தங்கபாண்டியன் தேர்தல் வேலைகளால் உடல்நலம் பாதிப்புற்றிருந்தார்.சோ.தர்மன் ,கோணங்கி ஒவ்வொருக்கும் வேறு வேறு பணிகள் இருந்திருக்கும் நிச்சயமாக .ஜெயமோகன் ஊட்டி முகாமிற்கான வேலைகளில் இருந்தார்.குறிப்ப

"பொன்பரப்பி"எழுத்தாளர்கள் -கலைஞர்கள் கூட்டறிக்கை

Image
எதற்காக பொன்பரப்பி தலித்துகள் மீதான தாக்குதலைக்  கண்டனம் செய்கிறோம்  ? [ இவைதான் காரணங்கள்.உங்களுக்கும் இதில் ஒப்புதல் இருக்குமெனில் நீங்கள் பொன்பரப்பி தலித்துகள் மீதான தாக்குதல்கள் கண்டன கூட்டத்திற்கு வர இயலாத சூழ்நிலையில் நீங்கள் இருப்பினும் கூட ; இப்பதிவின் கீழே உங்கள் பெயரினை கருத்தில் தெரியப்படுத்துங்கள்.வேறு எதுவும் சொல்ல தேவையில்லை. கூட்டறிக்கையில் உங்களையும் சேர்த்துக் கொள்கிறோம் ] பொன்பரப்பி  தலித் குடியிருப்புகள் மீதான தாக்குதலை கண்டித்து எழுத்தாளர்கள் -கலைஞர்கள் கூட்டறிக்கை நடந்து முடிந்த பாராளுமன்ற  தேர்தலை ஒட்டி தமிழ்நாட்டிலுள்ள பொன்பரப்பி என்கிற கிராமத்தில் இரு கட்சிகளுக்கிடையிலான மோதல் ;தலித் குடியிருப்புகளை கூட்டமாகச் சென்று தாக்குவதில் சென்று முடிந்தது.தாக்குதல் நடைபெற்ற சமயத்தில் குழந்தைகள்,முதியவர்கள் செய்வதறியாது பரிதவித்தனர் . கூட்டமாக சென்று குடியிருப்புகளை தாக்குவது என்பது வெறும் தேர்தல் கலவரமாகக் கொள்ளத் தக்கதன்று.மேலாதிக்க சாதியினர் தங்கள் சாதி மேலாதிக்கத்தை நிறுவி தலித்துகளை அச்சத்தில் உறைய வைக்க காலம்காலமாக மேற்கொள்ளும் கீழ்த்தரமான முறை இது.

சித்ரா பௌர்ணமியை என்னதான் செய்து விட முடியும் ?

Image
சித்ரா பௌர்ணமியை என்னதான்  செய்து விட முடியும் ? 1 வாழ்வென்பது போர்  என்பதை அறிந்த வினாடியில்  ஆயுதங்கள் அனைத்தையும்  கீழே போட்டேன் ஏனெனில் இந்த போருக்கு  தனியாக  சென்றாக வேண்டும்  ஆயுதங்களோடு அல்ல 2 அகந்தைதான்  அனைத்து ஆயுதங்களாகவும்  இருந்தது 3 நீயெடுக்கும்  அனைத்து ஆயுதங்களும்  என்னிடமும்  இருந்தவைதான் 4 ஆயுதங்களை  கீழே போடுவதற்கு முன்னர் ஒரு  நானிருந்தான்  அவன்  அகந்தையின்  நான் ஆயுதங்களை கைவிட்ட பிறகு  ஒரு நானிருக்கிறான் அவன் தன்னுடைய  நான் 5 ஆயுதம் பிரயோகிக்கத் தெரியாதவனுக்கு  ஆயுதக் கவர்ச்சி  அதிகம் 6 ஆயுதங்கள் ஒருபோதும்  அடுத்தவனைக் கொல்வதில்லை 7 கத்தியிருக்கிறது என்று  நினைத்துக் கொண்டிருப்பது வரையில்  கத்தி இருக்கும்  நீ இருப்பதில்லை 8 ஒருவரையும் நீ ஒன்றுமே  செய்ய முடியாது 9 அகந்தையால் செய்வதெல்லாம்  பாவமாக பின் வந்து நிற்கும்  கதறியழுதாலும் கரையாமல் 10 சூதில் பெற்ற வெற்றி எதிராளிக்கு  எல்லா காலத்திலும்  பகவானைப்  பரிசா

"பொன்பரப்பி"எழுத்தாளர்கள்,கலைஞர்கள் கண்டனக்கூட்டம்

Image
பொன்பரப்பி தலித்துகள் மீதான தாக்குதலை கண்டித்து எழுத்தாளர்கள் ,கவிஞர்கள் ,ஓவியர்கள் கண்டனக்கூட்டம் வருகிற சனிக்கிழமை 27  - 04  -2019  சென்னை தமிழர் திடலில் தலித்துகள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து எழுத்தாளர்கள்,ஓவியர்கள் ,கவிஞர்கள் பங்கேற்கிற கண்டனக் கூட்டம் நடைபெற உள்ளது.அனைத்து தரப்பு எழுத்தாளர்களும்,கலைஞர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று இது போன்ற நாகரீகமற்ற தாக்குதல்கள் ,மேலும் நடைபெறா வண்ணம் இருக்க தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.இதுபோன்ற மனித விரோத தாக்குதல்களுக்கு துணை நிற்கும் அரசு அமைப்புகள்,காவல் துறை ஆகியவற்றின் காதுகளில் நமது ஒருமித்த குரல் சென்று சேர இந்நிகழ்வு உதவும்.இந்த நிகழ்வு நம்முடைய மனச்சாட்சியின் குரலே அன்றி யாதொரு நிறுவன பின்புலமும் இல்லாதது.தன்னிச்சையானது.தன்னிச்சையான எழுத்தாளர்களுடைய குரல்கள் ,கலைஞர்களின் வெளிப்பாடுகள் இது போன்ற இக்கட்டான தருணங்களில் முக்கியமானது.நமக்குள் உள்ள வேறுபாடுகளை கைவிட்டு இது போன்ற சந்தர்ப்பங்களில் உடன் நிற்கும் தேவை தற்போது அதிகரித்து வருகிறது.தன்னிச்சையான சார்பு நிலையற்ற குரல்களை இதனை முன்னிட்டு ஒ

நவீன யுகத்தின் மாபெரும் தீர்க்கதரிசி சார்லி சாப்ளின்

Image
நவீன யுகத்தின் மாபெரும் தீர்க்கதரிசி சார்லி சாப்ளின் நவீன யுகத்தில் ஏராளமான மறை ஞானிகள் வந்து சென்றிருக்கிறார்கள்.அவர்கள் பங்களிப்பு எதுவும் செய்யவில்லை  என்று சொல்ல இயலாது. மனிதனைப் பற்றி, பிரபஞ்சம் பற்றி எல்லாம் அவர்களும் புரிந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறார்கள் . கவிகள்,ஓவியர்கள்,மாபெரும் படைப்பாளிகள் ,கலைஞர்கள் எல்லோருக்கும் மத்தியில் சாப்ளின் உருவாக்கியிருக்கும் தளம் மாபெரும் தீர்க்கதரிசனங்கள் நிறைந்தது.மறை ஞானியர்களுக்கு அகப்படாத விந்தை இது.மறை ஞானியர்களுக்கு புலப்படாத தொலைவு இது. படைப்பு என்னதான் செய்துவிடும்?என்ற கேள்வியை தன்னிலை அச்சத்தின் நீட்சியாகத் தொடர்வோருக்கு எளிமையான ஆனால் கடுமை நிறைந்த பதிலாக "சாப்ளின் செய்ததை செய்யும்" எனக் கூறிவிட முடியும்.உண்மையிலேயே அக்கறை கொண்ட கேள்வியாக அது இருக்குமானால் சாப்ளினில் இருந்து அது மீட்சி பெற வாய்ப்புக்கள் உண்டு.வேடிக்கை மனிதரைப் போன்ற வெளித்தோற்றத்தை ஏற்படுத்தும் அவர்: மனித மனப்பரப்பிற்குள் ஏற்றியிருக்கும் விந்தையும் ,தீவிரமும் இன்னும் பல தலைமுறைகளைத் தாண்டும் வல்லமை கொண்டது.கலகக்குரல் என்பதை நவீன காலத்தின் முன்பா

தேர்தலில் நான் ஆதரவு தெரிவிக்கும் ஆறு வேட்பாளர்கள்

Image
தேர்தலில் நான் ஆதரவு தெரிவிக்கும் ஆறு வேட்பாளர்கள்  1  கன்னியாகுமரி - பொன் ராதாகிருஷ்ணன் - பா.ஜ.க  2  தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன் - தி.மு.க  3  சிதம்பரம் - தொல் திருமாவளவன் - விடுதலை சிறுத்தைகள்  4   கரூர் - ஜோதிமணி - காங்கிரஸ்  5  விழுப்புரம் - ரவிக்குமார் - விடுதலை சிறுத்தைகள்   6  மதுரை - சு.வெங்கடேசன் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்   1  கன்னியாகுமரி தொகுதியில் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரிக்கிறேன் கழிந்த முப்பது வருடங்களில் அல்லது அதற்கும் மேலாக இந்த தொகுதியில் நடைபெற்ற ஆக்கப் பணிகளில் பொன் ராதாகிருஷ்ணனின் ஐந்தாண்டுகள் மிகவும் குறிப்பிடத் தகுந்தவை.சாலைகள், பாலங்கள் என ஏராளம் பணிகள் நடைபெற்றிருக்கின்றன.உள்ளம் வெளிப்டையானதாக இருக்குமாயின் இதனை மறுக்கவே முடியாது.அவர் மிகவும் உத்வேகத்துடன் இந்த காரியங்களை செய்து கொண்டிருக்கிறார். உள்ளார்ந்த ஈடுபாடு கொண்டு இவற்றைச் செய்து கொண்டிருக்கிறார்.ஒருவர் நினைத்தால் இவ்வளவு காரியங்களை தனது தொகுதிக்குச் செய்து விட முடியும் என்பதற்கு அவர் ஒரு முன் மாதிரி.இனி எவர் இந்த தொகுதியில் வந்தாலும்