Posts

Showing posts from June, 2019

எழுத்தாளனுக்கு வாசகனே உறவு

Image
எழுத்தாளனுக்கு வாசகனே உறவு எழுத்தாளனுக்கு வாசகனே உறவு தென்காசியில் சில கோயில்களை பார்த்து விட்டு திரும்பும் வழியில் விக்ரமாதித்தன் அண்ணாச்சி "நானோ நீயோ பத்துப் பதினைந்து வாசகர்களேனும் அமையாமற் போயிருந்தால் இந்நேரம் இருந்திருக்க முடியாது இல்லையா ? என்று கேட்டார்.பெருந்துர்க்கையை கண்டு திரும்பும் வழி அது.அவருடன் செல்கையில் வினோதமான கடவுள்களையெல்லாம் கண்டிருக்கிறேன்.பிறர் கண்டிருக்கிறார்களா தெரியாது.ஒருவேளையில் நானும் அவரும் இணைகையில் காணும் தெய்வங்கள் தாமோ அவை ! வெறி கொண்ட கோலம் .விஸ்வரூபம்.பெண் சாதாரணமாக இருக்கையிலும் விஸ்வரூபமே.இதில் விஸ்வரூபத்தில் நின்று கொண்டிருந்தால் எப்படியிருக்கும்? தமிழின் பெருங்கவிஞன் ஒருவன் ,தனது வாழ்வின் அநேக காலத்தை தெருவிலேயே முடித்தவன்,பெருந்துர்க்கை கண்ணிலேயே நின்று கொண்டிருக்கும் போதே கேட்ட கேள்வி இது.ஒரு சில வாசகர்கள் தான்.இந்த பிறவிப் பெருங்கடலை கடக்க உடன் வந்து கொண்டேயிருக்கிறார்கள்.ஒருவன் அலுக்கும் வேளையில் மற்றொருவன் பிறந்து விடுகிறான்.செய்ய நினைப்பவை எதுவாயினும் எந்த தடங்கலும் ஏற்பட்டதில்லை.குறையில்லை. எப்படி தமிழில் எழுதுகிற கலைஞன் ஒ

ஜெயமோகன் மீதான தாக்குதல் உணர்த்தும் பாடங்கள் - 1

Image
ஜெயமோகன் மீதான தாக்குதல் உணர்த்தும் பாடங்கள் - 1 சுந்தர ராமசாமி மீதோ ,அல்லது ஒருவேளை நாம் அருகிருக்கும் போதே வைக்கம் முகம்மது பஷீர் மீதோ இப்படியானதொரு தாக்குதல் நடந்திருக்குமாயின் எப்படியானதொரு நிலை குலைவு ஏற்பட்டிருக்குமோ அப்படியானதொரு நிலைகுலைவே எனக்கு ஏற்பட்டது.ஆனால் ஜெயமோகனின் இடம் என்பது அவர்களிலும் மேலானதொரு இடம் என்பதே என்னுடைய மதிப்பீடு.அவர்களின் தொடர்ச்சியிலிருந்து எழுந்து வந்த வேறொரு காலகட்டத்தின் இடம் ஜெயமோகனுடையது.புதுமைப் பித்தனிலும் சிறப்பானது.தொடர்ச்சியாக அவரை வாசிக்கும்தோறும் இந்த எண்ணம் வலிமையடையவே செய்கிறது.அவர் முகத்திலும் கழுத்திலும் உடலின் பிற பாகங்களிலும் காயங்களை காண மிகவும் கடினமாக உணர்ந்தேன் .சொற்கள் விக்கின. தமிழ்நாட்டில் கிராமப்புற பகுதிகளில் ,புற நகர்களில் தலித்தாக வாழ்வது எவ்வளவு சிரமானதோ,அதே அளவிற்கு தனி மனிதனாக வாழ்வதும் சிரமமானது.தலித்தாக ஒருவர் இருந்தால் அவர் தலித் என்பதற்காகவும் ,தனிமனிதனாக இருந்தால் அவன் பிறரில் இருந்து ஒதுங்கியிருக்கிறான் என்பதாகவும் சமூகம் தொந்தரவிற்குள்ளாக்கும்.தனி மனித வாழ்வை மேற்கொள்ளும் பலரும் தங்கள் சொந்த சாதியினருக்கு க

ஆதிக்கப்படுத்திக் கொள்ளும் சப்தத்தை நிறுத்தப் பாருங்கள்

Image
  உங்களை ஆதிக்கப்படுத்திக் கொள்ளும் சப்தத்தை கொஞ்சம் நிறுத்தப் பாருங்கள் அதுவே உடல் நலனுக்கும் மன நலனுக்கும் உகந்தது. தொடர்ந்து அரசியல் பதிவுகளை மட்டுமே செய்து கொண்டிருப்பவர்களிடம் அறிந்தோ அறியாமலோ கசப்பு உள்ளிறங்கி விடுகிறது.பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மனநலப் பிரச்சனையாக உளவியல் பிரச்சனையாக மாறிவிடுகிறது.உடலில் வியாதி குடியேறத் தொடங்குகிறது.எப்படியாக இங்கு வந்து சேர்ந்தோம் என்பதே பிறகு யோசித்தாலும் பிடிபடுவதில்லை.வந்து சேர்ந்திருக்கும் இடம் எப்படியானது என்பதை சுயபரிசீலனை செய்யவும் இறுதியில் இயலுவதில்லை.ஆமோதித்தவர்களும் கூட விட்டுச் சென்று விட்டார்களே என்று தோன்றும்.வாழ்வென்பது இழுத்து ஓடுகிற ஆறு.அது ஒரேயிடத்தில் நின்று கொண்டிருப்பதற்கானது அல்ல. ஒருவர் கவிஞர் .சில நல்ல கவிதைகளும் எழுதியிருக்கிறார்.அப்போது டிரண்டியாக இருந்த அரசியல் கருதுகோளை வாரி தன் மடியில் போட்டு வளர்த்துக் கொண்டிருந்தார்.கொள்கையை ஏற்காதோர் அத்தனை பேரையும் மானந்தானம் இல்லாமல் தாக்கினர்.பதினைந்து வருடங்களுக்கு முற்பட்ட கதை இது.கொள்கையையும் அவரையும் அவருடைய மனம் ஒன்றாக்கி விட்டது.கொள்கை குறித

நானென்பதற்குள் எவ்வளவு அர்த்தங்கள்...

Image
செயல் வேதத்திலிருந்து வருகிறது 1 பறக்கைக்கு வடகிழக்கு ஆசாரிமார் தெருவிற்கு தெற்குப்பக்கம் செட்டியாரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டேன் தாகமாக இருக்கிறது கொஞ்சம் தண்ணீர் தா ... என நேற்று கேட்டு வந்தவள் இசக்கி என்பது விளங்க எனக்கு இன்று இந்நேரம் வரையில் ஆகியிருக்கிறது 2 நான் மாரியம்மனாக்கும் என்று தாணுமாலயன் சன்னதி முன்னின்று ஒருத்தி சொன்னாள் இல்லையென்று நினைத்து திரும்பி விட்டீர்கள் அழுதரற்றி சொன்ன கணத்தில் அவள் அம்மனாகத்தானிருந்தாள் 3 வேறொரு இடத்தில் வேறொருவருக்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறேன் என்னையே நினைத்துக் கொண்டிராதே என்கிறாள் பாருங்கள் அது தேவ பாஷை 4 பகவான் பிச்சைக்காரன் வேஷத்தில் வருவாரா என்று நினைப்பதற்குள் அவர் படியிறங்கிப் போய்விட்டார் 5 செயல் வேதத்திலிருந்து வருகிறது வேதம் பரம் பொருளிலிருந்து வருகிறது நீயோ நானோ பொறுப்புதாரி ஆவது விளைவிற்கு மட்டுமே ### நேற்றிருந்தவன் இன்றில்லை - லக்ஷ்மி மணிவண்ணன் 1 நேற்று எனக்குள்ளிருந்தவன் முசுடாக இருந்தான் அவனுக்கு என்ன பிரச்சனை என்பதே விளங்கவில்லை தூக்கமின்மையை பிராண்டிக் கொ