Posts

Showing posts from September, 2019

கிறிஸ்தவ அரசியல் என்பது என்ன ?

Image
கிறிஸ்தவ அரசியல் என்பது என்ன ? கிறிஸ்தவ அரசியல் என்ற ஒன்று இருக்கிறது.இருக்கவும் வேண்டும்.அதுபோல நாடார் அரசியல்,தேவர் அரசியல் ,வன்னியர் அரசியல் , தலித் அரசியல் எல்லாம் இங்கே உண்டு.இவற்றிலும் கிறிஸ்தவ நாடார் அரசியல் வேறு.இந்து நாடார் அரசியல் என்பது வேறு.இந்து வெள்ளாளர்களின் அரசியலும் கிறிஸ்தவ வெள்ளாளர்களின் அரசியலும் ஒன்றல்ல.பிராமண அரசியல் தனிவகை.இன்று பா.ஜ.க ; ஆர்.எஸ் .எஸ் சக்திகளால் முன்வைக்கப்படுகிற இந்து அரசியல் என்பது இந்துக்களின் அரசியல் அல்ல.அது ஒற்றை இந்துத்துவாவின் அரசியல் .பன்முகத்தன்மையை ஏற்காத அரசியல் அது. இவை ஒவ்வொன்றும் என்னென்ன ,இவற்றின் சமூகவியல்,உளவியல் நாட்டமென்ன ? என்பதை புரிந்து கொள்ள விரிவான கண்ணோட்டம் அவசியம்.இதில் எது ஒன்றிற்கும் அர்த்தமில்லை,முக்கியத்துவம் இல்லை என்று விவாதிக்கும் குரல்கள் அனைத்துமே தங்கள் குழுவினரின் அரசியலுக்கு அப்பால் உள்ளவற்றை மறுதலிக்கும் குறுகிய தன்மை கொண்டவை.வன்னியர் அரசியல் மிகவும் பின்தங்கியது .நவீனமடையாதது. இந்த அரசியல் அனைத்திற்குமே சமூகத்தில் இடமுண்டு.குழு குழுவாக வாழ்கிற ஒரு சமூகத்தில் இவையெதுவுமே புறக்கணிக்கத்

கண்டடைதலின் கவிதை

கண்டடைதலின் கவிதை லக்ஷ்மி மணிவண்ணனின் இக்கவிதைகள் புதுக்கவிதையின் பழகிப்போன தேடல் ,சலிப்பு ஆகியவற்றுக்குப் பதிலாக கண்டடைதலை, அதில் உளம் அமைதலை காட்டுகின்றன. அதற்குரிய ஒரு ‘ நெஞ்சோடு கிளத்தல்’ மொழி அமைந்துள்ளது. இது இக்கவிதைகளை வீரசைவ வசன கவிதைகளை நினைவூட்டுவதாக ஆக்குகிறது. அக்கமாதேவியின் குகேஸ்வரன் நெஞ்சக்குகையில் வாழ்பவன் தானே ? கண்டடைதலின் கவிதை இக்கவிதைகளை வகுப்பேன். இவற்றை கருத்துக்கள், அறிவுறுத்தல்கள் என்று கொள்வது கவிதை வாசிப்பாகாது. அவ்வெளிப்பாடுகளினூடாக அவை நிகழ்ந்த அந்தத் தருணத்து உள நிலையை, அகஎழுச்சியை சென்றடைய முடியும் என்றால் வாசகனும் அக் கவிதையைப் பெற்றுக் கொள்கிறான் ### வெவ்வேறு தனிவெளிப்பாடுகள். ஒவ்வொன்றும் தனித்தவை. ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையும்கூட. அவை இணைந்து உருவாகும் அந்த உளநிலையின் உச்சம் அச்சருகு. ஒரு காலால் விண்ணுக்கு எற்றப்பட்டு பறவையாகும் தருணத்தை அடைந்தது. அது காலனின், தருமனின் கால். - ஜெயமோகன் [ ஜெயமோகன் நமது படைப்புகள் பற்றி சொல்லும் போது பிறர் எவர் சொன்னாலும் ஏற்படாத மகிழ்ச்சி மனதிற்கு கிடைக்கிறது.தொடர்ந்து எழுதும் உத்வேகத்தை பெறுகிறோம்

நாளை வந்துருச்சுப்பா எழும்பு

Image
நாளை வந்துருச்சுப்பா எழும்பு 1  அம்மன் இன்று புன்னகை பூத்தாள் நேற்று புன் முறுவல் அதன் முன்பு மென் நகை அதன் முன்பு கோபம் அதன் முன்பு தாபம் அதன் முன்பு சோகம் அதன் முன்பு காதல் அதன் முன்பு வாய்விட்டுச் சிரித்தாள் தினந்தோறும் நானும் பார்த்து வருகிறேன் அம்மன் ஒருபோதும் ஒருபோல இருந்தததில்லை கல்லென்றாலும் காணும் கண்களில் வேறொன்று செய்கிறாள் நீல வேணி 2 காலைப் பொன்நிறத்தின் சாரல் மின்மினிகள் ஒழுகுவது போலும் நிலம் நோக்கி இறங்குகிறது மழையைப் பார்க்க வேண்டுமெனில் முதலில் மழை என்ற சொல்லை மறக்க வேண்டியிருக்கிறது அல்லாமல் காணும் மழை மழை என்கிற அர்த்தம் மழை அதற்கு வெளியில் பெய்து கொண்டிருப்பது 3 இன்று காலையில் ஆகஸ்ட் மாதத்திற்கு முப்பத்தியொரு நாட்கள் என தெரிந்து கொண்டேன் இருந்தாலும் எத்தனை நாட்களுக்கு இது வரும் என்பது தெரியாது தமிழ் மாதத்தில் முப்பத்திரண்டு நாட்கள் கூட இருக்கின்றன முன்பெல்லாம் மூட்டை மடக்கி பள்ளம் மேடு என அறியும் வழி ஒன்றினைத் தெரிந்து வைத்திருந்தேன் எப்படியோ அது கை நழுவிப் போய்விட்டது எதிர்பாராமல் ஒருமுறை வாரத்திற்கு எத்தன