Posts

Showing posts from 2020

பண்பாடு என்பதே கலப்பது

Image
                                                 பண்பாடு என்பதே கலப்பது ஒவ்வொரு பண்பாடும் மற்றொன்றுடன் கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் கணம் தோறும் கலந்தபடியே இருக்கிறது.தவிர்க்கவே இயலாத இயக்கம் இது.அது எப்படி கலக்கிறது ? தாழ்வு மனப்பான்மையால் கலக்கிறதா, மேலாதிக்கத்தின் விளைவாக கலக்கிறதா, மோஸ்தரின் விளைவாகக் கலக்கிறதா ,மேலோட்டமாகக் கலக்கிறதா ,இயல்பாகக் கலக்கிறதா ? இவையெல்லாம் பின்னர் எழுகிற விவாதங்கள்,அறிந்து கொள்ள விளையும் ஆண்களின் முயற்சிகள். ஆர்வங்கள். பெண்மையும் அதன் மனவெளியும் எப்போதும் பிறவற்றுடன் பிற பண்பாடுகளுடன் கலந்து கொண்டேயிருப்பது.சந்தேப்பது அதே அளவிற்குக் கலக்கவும் முயல்வது.கலப்பதில் மகிழ்ச்சி கொண்டது.கலப்பை முன்னெடுப்பது.அதன் இயல்பு அதுவே.இதனை புரிந்து கொண்டால் பல விஷயங்களும் எளிமையாகும்.கலக்காத மனமும் அறிவும் பாழ் .கலக்காத சமூகம் உருப்படாது. எவ்வளவு தூரத்திற்கு நாம் குளோபல் ஆகி கொண்டிருக்கிறோமோ, அதேயளவிற்கு நமது தொல்குடியின் ஆழங்களுக்குள்ளும் ஒரேநேரத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்.வாழ்க்கை விரிவடையுந்தோறும் வேர்களில் ஆழம் அதிகப்பட வேண்டும்.ஏன் ? தேக்கு மரம் தட்டையான

அளத்தங்கரை "கோயில் வீடு" இந்து நாடார் குடும்பம்

Image
  அளத்தங்கரை "கோயில் வீடு" இந்து நாடார் குடும்பம் எட்டு தலைமுறைக் குடும்பம். எட்டாவது தலைமுறையில் பேரன் பேத்திகளுடன் மரகதம்மாள்.நிறைந்த தேஜஸ் .எட்டு தலைமுறை கடந் து செல்வதென்பது சாதாரணமான காரியமில்லை.மூன்றாவது தலைமுறையே பெரும்பாலும் கசந்து விடும்.நாலில் ஷீணம் உண்டாகும் .முரண்படும்.மன சஞ்சலங்கள் தோன்றும். அதனையெல்லாம் ஒரு குடும்பம் கடந்து செல்வதென்பது தெய்வ காரியமின்றி வேறில்லை.ஐந்து தலைமுறை கடந்தாலே அரசியல் அதிகாரம் ஏற்பட்டு விடும்.முதல் தலைமுறையிலேயே ஏற்படுகிற அரசியல் அதிகாரத்திற்கும் இதற்கும் அநேக வித்தியாசங்கள் உண்டும்.மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த குடும்பத்தைச் சார்ந்தவர். எட்டு தலைமுறை என்பது கிளைகிளையாக மொத்த சமூகத்திலும் ஊடுருவி இருக்கக் கூடியது . அளத்தங்கரை குடும்பம் இதற்கு உதாரணம்.இந்த குடும்பத்திற்கு கிழக்கு வடக்காக ஏராளமான கிளைகள்.முகிலன் குடியிருப்பு,ஈச்சன் விளை,மணிகெட்டிப்பொட்டல் என்றும் அதிகமாகவும்.இன்று இந்தியா முழுவதிலும் இருக்கிறார்கள்.உள்ளூரிலும் மருத்துவர்கள் , வழக்கறிஞர்கள் ,பொறியாளர்கள் என்று பலவாறாக.அளத்தங்கரை குடும்பம் என்றால் இன்றும் பெரியவர்

தப்பித்தலுக்கான ஒற்றைச் சாத்தியம்

Image
  உறுதித்தன்மையற்ற அதிகாரம்                           " தப்பித்தலுக்கான ஒற்றைச் சாத்தியம்" நிரந்தர அரசியல். அப்படியொரு காலகட்டம் இருந்தது.இப்போது அது பழமையானது. எல்லாவற்றிற்கும் வக்காலத்து வாங்கி கொண்டு ஒரே தரப்பிலிருந்து உயிர் மூச்சு விடுவது அந்த பழைய முறை.பழைய காங்கிரஸ்காரர்கள் ,தி.மு.கவினர் இப்படி. கம்யூனிஸ்டுகள் தலைமுறை தலைமுறைக்கு இருந்த இடம் விட்டு மாறமாட்டார்கள்.ஆனால் மாற்றம் பற்றி பேசவும் செய்வார்கள்.இன்றைய அரசியலில் அது பழமைவாத முறை . பிரச்சனைகளை அடைப்படையாகக் கொண்டு மட்டுமே நிலைப்பாடுகள் எடுக்கப்பட வேண்டும். ஒருநாள் தி.மு.கவிற்கு ஆதரவாக ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டி வரலாம்.மறுநாளில் அ.தி.மு.கவை ஆதரிக்க நேரலாம்.கெஜ்ரிவாலை ஆதரித்து அரை நொடிக்குள் பி.ஜெ.பியை ஆதரிக்கும் அவசியம் ஏற்படலாம்.மாயாவதியின் ஒரு விஷயம் கவர்ந்த மறுநிமிடத்தில் மம்தாவை எதிர்க்க வேண்டி வரலாம்.பி.ஜெ.பியின் ஒரு கொள்கையை எதிர்த்துக் கொண்டே மற்றொன்றில் ஆதரிப்பதும் சாத்தியமே . ஒரு விஷயத்தில் ஒரு நல்ல முடிவை எட்டும் கட்சி மற்றொன்றில் தலை கவிழ்ந்து விழலாம்.அதற்கான சாத்தியப்பாடுகள் இன்று எல்லா கட்சிகளிலும் உ

எதையேனும் விட்டால் எதுவேனும் வருகிறது

Image
  எதையேனும் விட்டால் எதுவேனும் வருகிறது அடிப்படைப் பண்புகளில் ஒவ்வொன்றைக் கைவிடும்போதும் அதற்கே இணையான அதனினும் மேலான ஒன்று வந்து சேருகிறது.குடியும் காமமும் வேறல்ல.பொய்யும் களவும் வேறல்ல.சுயநலனும் ஊழலும் வேறல்ல.இவை ஒட்டிப் பிறந்தவை உடன் பிறந்தவை கவிஞர் ஷங்கர்ராம்சுப்ரமணியனும் நானும் தெருவில் ஒன்றாகச் சுற்றித் திரிந்த காலங்கள் உண்டு.தெருவில் என்னோடு அதிகம் சுற்றித் திரிந்த நபர் அவர்தாம்.வயிற்றுப் பசிக்காக திருஷ்டித் தேங்காயை எடுத்து உண்ணும் பழக்கம் எனக்கு போதாத காலங்களிலும் கூட இருந்ததில்லை.பசிக்கு உணவு தான் சாப்பிட்டாக வேண்டும்.இரந்தென்றாலும் உண்பதே நல்லது.எடுத்தென்றாலும் உண்பதே நல்லது.பறித்தென்றாலும் உண்பதே நல்லது.பசிக்கு அன்னம்.திருஷ்டித் தேங்காய் அல்ல. திருவல்லிகேணியின் இரவுத் தெருக்களில் அலைந்து கொண்டிருந்த போது ஒருமுறை அவர் சொன்னார்.திருஷ்டித் தேங்காயை எடுத்து தின்னவே கூடாது.அது மிகவும் ஆபத்து என்று.சத்திய வாக்கு அது.வயிற்றுக்கு எடுத்து கொள்ளத் தகாத பொருட்களில் அது ஒன்று.நான் ஆமாம் என்று சொன்னேன்.சென்னையில் வணிகர்கள் நிறையபேர் திருஷ்டித் தேங்காய் உடைத்து கடை சாற்றுவது வழக்கம்.தின்

குரோதத்திற்கு இயற்பெயர் இல்லை

Image
  குரோதத்திற்கு இயற்பெயர் இல்லை ஏனெனில் அது உடன்பிறந்தது,ஒட்டிப் பிறந்தது.ஒடுக்க முடியாதது,எடுக்க முடியாதது,ஒன்றுமே செய்ய முடியாதது.பங்காளிப் பகைகளை ஒன்றும் இயலாமல் போவதற்கு இதுவே காரணம்.யோசித்துப்பார்த்தால் உண்மையில் அது வெளியில் இல்லை.நம்முடைய உள்ளில் இருந்து பிறந்து வெளியில் நடமாடிக் கொண்டிருக்கிறது.நமக்கு அதன் அடையாளம் தெரிவது போலவே அதற்கும் நமதடையாளம் நன்கு தெரியும் குரோதம் பெரும்பாலும் அதனை விட்டுவிட்டு நாம் தனித்து மேலெழுவதால் மேலெழுகிறது.நாம் விட்டுவிட்டா மேலெழுந்தோம் என்று யோசித்துப்பார்த்தால் "ஆம்" என்கிற விடையே வரும்.இல்லை என்று பதில் வருமானால் அது குரோதம் அல்ல.வேறுவகைப் பகை .எதிர்கொள்ள இயலும் பகை.வெறுப்பு.குரோதத்தை எதிர்கொள்ளவே இயலாது.விட்டு அகலாமல் மேலெழுந்திருக்க முடியுமா என்றால் ,முடியாது என்பதே பதில்.அப்படியானால் என்னதான் செய்வது ? வேறுவகைப்பகைகளில் ,வெறுப்புகளில் நீங்கள் அதில் விலகிச் சென்றால் கடந்துவிடலாம்.முகம் நோக்குவதைக் கைவிடலாம்.அதை சிந்திப்பதை நிறுத்தினால் அது அணைந்து போகும்.நீங்கள் அதனைப் பற்றி சிந்திக்கின்றவரையில் அது இருக்கும்.போதுவாகவே பகையெல்லாமே

கொலையாளி விட்டுச்சென்ற சட்டை

Image
 [ சிறுகதை] கொலையாளி விட்டுச்சென்ற சட்டை  அன்று எதற்காக அந்தச் சட்டையை முடிவு செய்தேன் என்பது சரியாக விளங்கவில்லை.எனது உடல்வாகுக்கு அது ஏற்றதாகவும் இல்லை .சற்று பெரியது .பச்சை வண்ணத்தில் தங்க நிறக் கோடுகள் குறுக்கு நெடுக்காக பதிக்கப்பட்ட சட்டை அது .தோளின் இருபுறமும் பட்டைகள் தைக்கப்பட்டிருந்தன .அதுபோல முழுக்கையை மடக்கி பொத்தான்களில் இணைத்துக்கொள்ளும் வண்ணம் ஒரு சிறப்பு அமைப்பும் இருந்தது .பச்சை வண்ணத்தில் தங்கக் கோடுகளின் பளபளப்பு அந்த சட்டைக்கு ஒரு வசீகரத்தை வீசிற்று .எப்படிப் பார்த்தாலும் அது வழக்கமான சட்டையாக இல்லை .தையல்காரர் அச்சட்டையில் தனது செயலை ஏற்றியிருந்தார் .தனது காதலியைப் பழிவாங்கும் நோக்கம் ;அவர் இந்த சட்டையை உருவாக்கும்போது ;அவரது மனதில் ஓடிற்று என்பதை சட்டை வெளிப்படுத்திற்று .பேரலன்காரம் என்றெல்லாம் சொல்ல முடியாது .எனினும் சட்டைக்கு தனிச்சிறப்பு இருந்தது .ஆனால் நீங்கள் நினைத்துக்கொள்வதைப் போன்று சட்டை தோல் போன்று விறைப்புத் தன்மை கொண்டதில்லை .மாறாக மிருதுவானது . சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு நள்ளிரவில் இளம் கொலையாளியொருவன் என்னிடம் இந்த சட்டையை விட்டுச் சென்றான்

கவிதைக்கு இரண்டு ரூபாய் என்று விலை

Image
  என் பணி செய்வது... என்னுடைய கவிதைகளை நானே தொகுத்து சின்ன சின்ன தொகுப்புகளாக நானே வெளியிட்டு விடுவது என முடிவு செய்திருக்கிறேன். கவிதைகளைப் பொறுத்தவரையில் கடந்த ஐந்து வருடங்களில் ஏராளமாக எழுதியிருக்கிறேன்.பின்னுக்கு கிளறிச் செல்லச்செல்ல ஏராளம் புறப்பட்டு வருகின்றன.பல கவிதைகள் மனதில் மறந்தவை.யாரோ எழுதியவை என்பது போல வாசிக்க ...ஓ நீ தான் எழுதினாயா ..என்பது போலும் இருக்கின்றன.முற்றிலும் வேறொரு மனம் கொண்டு எழுதபட்டவையாக இவை உள்ளன.கடந்த கால முன்தொகுப்புகளில் இருந்து இவை முற்றிலும்  வேறுபட்டு இருக்கின்றன.ஆனால் முன்தொகுப்புகளின் வழியே ,அவற்றின் மீது ஏறி அமர்ந்தே இன்று இந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறேன்.அவற்றின் முதுகில் ஏறாமல் இவ்விடத்திற்கு வந்து சேர்ந்திருக்க நியாயமில்லை. ஐம்பது ஐம்பது கவிதைகளாக பின்னிருந்து தொகுத்து வெளியிட வேண்டும்.அதுவே எளிமையானது.ஐநூற்றுக்கும் அதிகமாக எழுதியிருப்பேன் என நினைக்கிறேன்.பின்னால் செல்லச் செல்ல குகை போல நீண்டு செல்கிறது.ஞானக்கூத்தன், ஒரு கவிஞன் இருநூற்றம்பது கவிதைகளுக்கு மேல் எழுத முடியாது என்று சொல்லியிருப்பார்.அது என்ன கணக்கு என்று தெரியவில்லை.ஒருவேள

10 கவிதைகள்

Image
 10 கவிதைகள் 1 பூங்கொடி மருத்துவமனையில் இருந்தாள் மகனுக்கு சர்ஜரி ஐந்து வயது இதயத்தைக் கீறிப் பிளந்து படுத்துக் கிடந்தான் பாலகன் பூங்கொடி கருதியவர்கள் எல்லோருமே மருத்துவமனைக்குக் காண வந்தார்கள் இல்லையென்று சொல்லமுடியாது இருந்தாலும் பூங்கொடி எதிர்பார்த்த அளவிற்கு கனியவில்லை அவர்கள் எதிர்பார்க்காத ஏதோ போல வந்தார்கள் அவள் எதிர்பார்த்த ஏதோ போல வரவில்லை முக்கியமாக பூங்கொடி வெறுத்து ஒதுக்கி வழிவிட்டோடியவன் இந்த பரிதவிப்பில் வந்து விடுவான் என எதிர்ப்பார்த்தாள் வரவில்லை மொத்ததில் பூங்கொடிக்கு சர்ஜரியில் திருப்தியில்லை இரண்டி வாட்டி ஆயிருச்சும்மா இப்படில்லாம் பண்ணா அப்பா வர மாட்டாருமா இனி தாங்க மாட்டேம்ம்மா.. என்று மெல்ல முனகினான் பையன் "சபாஷ் பேச்சு வந்துருச்சு பையனுக்கு தப்பிச்சிருவான் " தற்செயலான தாதி கடவுளின் பாஷையை பேசிக் கடக்கிறாள் 2 மழை பார்க்க வேண்டுமா அச்சு அசலாக மழை மட்டும் பார்க்க வேண்டும் மழை பற்றின நினைவுகள் நீக்கி மழை பற்றின கவிதைகள் நீக்கி குறிப்பாக காதல் நீக்கி மழை பற்றி சொல்லப்பட்டனவெல்லாம் நீக்கி நீக்கி நின்று மழை பார்க்க வேண்டும் நனையக் கூடாது நனைந்தவன் காண்பது மழை

லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள்

Image
  லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள் 1 அதோ என் சித்தப்பா இப்போது விலகிச் சென்று விட்டார் நீயும் விலகு இன்னும் இடைவெளி தேவை அதோ என் மாமா இன்னும் விலகு இடைவெளி தேவை அப்பா இல்லை என்பது போலவே போய்க்கொண்டிருக்கிறாரே அவர் தான் அப்பா ஓ அவள் என் மனைவி அவன் என் கணவன் அவர்கள் என் குழந்தைகள் விலகு எனக்கும் உனக்குமே இப்போது இடைவெளி தேவை எனக்கு யாருமே இல்லை அண்ணா விலகு இப்போது உனக்கும் உனக்குமே இடைவெளி தேவை 2 தாலத்தை எடுத்து வையுங்கள் அம்மா பசிக்கிறது தாலத்தில் சோறினை போடுங்கள் அம்மா பசிக்கிறது பிறக்கும் முன்பிருந்தே பசிக்கும் பசி 3 ஹெல்மெற்றுக்குள் இருக்கும் நண்பனுக்கு பல சௌகரியங்கள் முகம் தெரியாது என நினைத்துக் கடந்துவிடலாம் இந்த சனியனா வருகிறான் என ஒதுங்கி விரைந்து விடலாம் தெரியவா போகிறது தெரிந்தால் தெரியட்டுமே காறியுமிழ்ந்து கடக்கலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஹெல்மற்றுக்குள் நண்பனின் தலை வேறொன்றாக இருக்கிறது நாம் பொதுவாக அறியாத வேறொரு தலை அது எல்லா வசதியும் இருந்தும் நெளிந்து வளைந்து இறங்கி நான்தான் என்று ஹெல்மற்றை இறக்கி நின்று கொண்டிருக்கிறான் பாருங்கள் ஒரு நண்பன் அவன்முகத்தில் அவனிங்கே பிழைக்க