Posts

Showing posts from July, 2020

அய்யா வைகுண்டர் இதிகாசம் -24 அய்யா மனிதப் பிறப்பு

Image
அய்யா வைகுண்டர் இதிகாசம் -24 அய்யா மனிதப் பிறப்பு -4 ஊர் குடிமகள் மாலையில் வந்தாள்.தகவல் சொல்லியிருந்தார்கள்.நாள் வேலைக்கு சென்று திரும்பி அவள் வந்து சேர வேண்டும்.நாவிடிச்சி,வைத்திச்சி,ஊர் குடிமகள் என்பதெல்லாம் அவள் பெயர்களே.வெளியில் வைக்கப்பட்டிருந்த சாய்ந்த மண் குடத்தில் நீரலம்பி விட்டு குனிந்தே குடிலுனுள் நுழைந்தாள்.அவளுக்கு வலியின் கறுப்பு நிறம்,வலியின் உருவம்,அவள் வருகை வலி நிறைந்ததாக எப்போதும் காணப்பட்டது.கிராமத்தின் அனைத்து வலியுணர்ச்சிகளிலும் அவள் சம்பந்தபட்டிருந்தாள்.வலியற்ற ஒரிடத்திலும் அவள் காணப்படுவதே இல்லை.ஒருவேளை வலியில்லாத இடங்களில் அவள் காணபட்டாலும் கூட அவள்தான் இவள் என்று உணரப்படுவதில்லை.வலி நிரம்பிய இடகளில் அவள் உருவம் பெரிதாக இருந்தது. வலியுணர்ச்சி அந்த காலத்தில் மிகவும் அதிகம்.வலி உண்மையே.அது அதிகமாகத் தோன்றும் காலம்.ஏனெனில் எல்லாவிதமான வலி உணர்வுகளும் மரணத்தின் சாயலில் வந்தன.ஊர் குடிமகளுக்கும் அந்த சாயல் இருந்தது.ஏற்படும் வலியிலிருந்து மரணத்தைப் பகுத்து வைக்க அவளுக்குத் தெரியும்.விருப்பும் வெறுப்பும் இல்லாதவள்.இனிமையாக பேசியபடியே கடுமையாக நடந்து கொள்வாள்.எனவே அவள்

அய்யா வைகுண்டர் இதிகாசம் -23 அய்யா மனிதப் பிறப்பு

Image
அய்யா வைகுண்டர் இதிகாசம் -23 அய்யா மனிதப் பிறப்பு 3 வெள்ளாங்குடிகளில் போய் வேலை செய்யலாம்.அப்படித்தான் செய்து வந்தார்கள்.வடக்கு தாமரைக்குளத்திற்கு அந்தப்பக்கம் தொடங்கி சுசீந்திரம் கடந்து மருங்கூர் வரையில் வேலையுண்டு.அந்த பகுதி முழுவதுமே பத்துப்பதினைந்து விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய வெள்ளாள குடும்பங்களுகுரியவைதான்.ஆட்சியாளர்களைக் காட்டிலும் அதிகமாக ஆண்டார்கள்.மருங்கூர் முருகன் கோயில் ,வடக்குத்தாமரைக் குளம் சிவன் கோயில்,பறக்கை மதுசூதன பெருமாள் கோயில், தெங்கம்புதூர் தாணுமாலையன் சிவன் கோயில் இவர்களுக்கு வகைப்பட்டவை.சாதிய ஒழுங்குகளை இறுக்கமாக கடைபிடித்த ஊர்கள் இவை.நெல்லுக்கு வேலை உண்டு.பருவம் முழுக்க வேலை செய்து அறுப்புக்குக் கூலி.பட்டினி வராது.ஆனால் குனிந்து நின்று கூலி வாங்கி வரவேண்டியிருக்கும்.அவர்களின் பேச்சே நளி கொண்டு வினோதமாக இருக்கும்.பிறரும் சிந்திப்பார்கள்,தங்களைக் காட்டிலும் பிறருக்கு அதிகம் தெரிந்திருக்கலாம் என்றெல்லாம் தெரியவே தெரியாது அவர்களுக்கு.சட்ட திட்டங்களையும் ,அரசையும் கண்மறைத்து ஐந்தாறு நூற்றாண்டுகளை வாழ்ந்தவர்கள்.பிராமணர்களுடைய நஞ்சை நிலங்களை பாட்டத்திற்கும் எடுக்கலா

அய்யா வைகுண்டர் இதிகாசம் -22 அய்யா மனிதப் பிறப்பு

Image
அய்யா வைகுண்டர் இதிகாசம் -22 அய்யா மனிதப் பிறப்பு 2 பொன்னு நாடார் காலையில் பெரும்பாலும் அதிபுலரியில் களிமாருக்குக் கிளம்பி விடுவார்.குடிலுக்கு வெளியில் ஒருஅடி உயரம் கொண்ட மேடு அமைக்கப்பட்டிருந்தது,அதனைக் கடந்தே குடிலுக்குள் செல்லமுடியும்.அதில் சாணி மெழுகப்பட்டிருக்கும்.அதில் ஒய்வின் போது அமர்ந்து பேசிக் கொண்டிருக்கலாம்.அதன் ஓரத்தில் பிச்சிக் கொடி படர்ந்து மேலே கூரைக்குச் சென்றது.அதன் மூட்டில் உமிக்கரியும் ,செம்பில் தண்ணீரும் கொண்டு வைத்திருப்பாள் வெயிலாள்.தள்ளி ஒரு எட்டில் நின்றது பூவரசு.செம்பை கையிலெடுத்ததும் பூவரசு மூட்டிற்கு நகர்வார் பொன்னு.பூவரசுக்கு அரச வரி இல்லை.விளைந்த பூவரசு அமிர்தம்.சாய்வு நாற்காலிகள்,குறுங்கட்டி போன்றவற்றுக்கு ரத்தச் சிவப்பில் வரும்.பழகப் பழகக் கறுத்து வைரமாகி விடும்.ஒரே அரியண்டம் அதில் மைகுட்டிகள் வைகாசி,ஆனிமாசத்தில் வரும்.ஆனி முடிவில் எல்லாம் வண்ணத்துப் பூச்சிகளாக பறந்து விடும்.வண்ணத்துப் பூச்சிகளின் சிறு பருவம் பெரிய அரியண்டம்.செஞ்செட்டிச் செடி தாவரத்தில் பூச்சிகளில் இந்த மைகுட்டி.தீமூட்டி எரிப்பார்கள் இல்லையெனில் உடல் முழுக்க ஊரும்.செஞ்செட்டி செடியை எடுத்

அய்யா வைகுண்டர் இதிகாசம் -21 அய்யா மனிதப் பிறப்பு

Image
அய்யா வைகுண்டர் இதிகாசம் -21 அய்யா மனிதப் பிறப்பு 1 வெயிலாள் அம்மை முந்தின நாளே நிறைய புதிய ஒலிகளைக் கேட்டாள்.அணிபிள்ளைகள் காலை முதலே சத்தமிட்டுக் கொண்டிருந்தன.பறவை கீசல் ஒலிகள் .அவை இன்றுதான் முதல் முதலாகக் கேட்பவை போன்று புத்தம் புதியவையாக இருந்தன.பக்கத்து மரங்களிலிருந்து வானளாவ அவை கீசிக் கொண்டிருந்தன.மதுரம் தொழிந்து பரவுவது போல குடிலை விட்டு வெளியேறி வந்தாள் இந்த புள்கள் மட்டும்தான் இந்த முழு பிரபஞ்சமாக விரிந்து நிற்கிறதோ என்று தன்னையே விசாரித்துக் கொண்டாள். " அங்கன என்னட்டி செய்யுக..வெயிலாளின் அம்மையின் குரல் உள்ளிருந்து கேட்டது.அவள் ஒருவாரமாக இங்கிருந்து வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறாள்.ஒரு முழு ஆளுக்கு அடுக்களை வேலையுள்ள குடில் அவளுடையது. இவிய எங்க இருக்காவன்னு பாக்கேன்.இங்கன தான் நின்னாவ ,நின்னது போல இருக்கும்.காணாது அவியள ,திரும்பாமலே பதில் சொன்னாள் வெயிலாள்.மூத்தவன் திரு நாம மணி.அய்யாவு என்று அழைப்பாள்.எல்லோரும் அய்யாவு என்றே அழைத்தார்கள் .வைப்பது ஒருபெயராகவும் அழைப்பது வேரொரு பெயராகவும் பழக்கமாகியிருந்தது.இல்லையெனில் அரசில் வரிகேட்பார்கள்.வரி கேட்டு அரசபடைகள் வருவதையே

அய்யா வைகுண்டர் இதிகாசம் -20 நாராயணர் வழிபாடு

Image
அய்யா வைகுண்டர் இதிகாசம் -20 நாராயணர் வழிபாடு தொல் நெடுங்காலமாகவே நாராயணர் வழிபாடு இந்து நாடார்களிடம் உண்டு.பெரிய சாமி,கிருஷ்ணன்,நாராயணர்,அய்யா வைகுண்டர் ஆகிய பெயர்களில் அவர் இந்த வழிபாடுகளில் அழைக்கப்படுகிறார்.வைணவத்தின் கிளை போன்ற வழிபாட்டு முறை அல்ல இது.கிராம தேவதைகளுடன் நாராயணரையோ ,கிருஷ்ணரையோ,அய்யா வைகுண்டரையோ இருத்தி வழிபடும் முறை.கிராமதேவதைகள் வழிபாடுகளில் பெரியசாமி என்று அழைக்கப்படுகிற பீடம் நாராயணர்குரியது.இதில் ஆர்வமூட்டும் செய்தி என்னவெனில் இசக்கியோடு நாராயணர் அமர்ந்திருந்தால் இசக்கி பிரதானமாகவும் துணைக்கு சுடலை ஒருபக்கமாகவும் நாராயணர் ஒருபக்கமாகவும் இருக்கிறார்கள்.ஆராதனைகள் நாராயணருக்கே முதலில் நடைபெறும்.ஆனால் இசக்கியே பிரதான தெய்வம்.இது முற்றிலும் வேறு வகையான அடுக்குதல் முறை.மேலிருந்து கீழாக பண்பாட்டு அடுக்குமுறை ஒன்று இருப்பது போலவே,இது கீழிருந்து மேலாக செல்லும் அமைப்பு முறை.நாராயணர் பெரியவர் தான்.அவருக்கு அதனாலேயே முதல் பூசை அளித்துவிடுகிறோம்.ஆனால் நாராயணரின் விஸ்வரூபம் இங்கில்லை.அவர் சுருக்கப்பட்டு ஒன்றோடு ஒன்றாக அமர்ந்திருக்கிறார்.நாராயண குரு இது எங்களுடைய சிவன் என்கிற

அய்யா வைகுண்டர் இதிகாசம் -19 முத்தாரம்மன் கதை முடிவு

Image
அய்யா வைகுண்டர் இதிகாசம் -19 முத்தாரம்மன் கதை முடிவு எங்கள் அப்பய்யா முத்தாரம்மன் கோயிலில் கொடை நடக்கும் காலங்களில் வீட்டில் இருப்பார்.குழந்தைகள் அப்போதுதான் அவரை முழுமையாகப் பார்ப்போம்.மனம் தொந்தரவு பட்டு நிற்பார்.இதெல்லாம் வேண்டியதில்லை,அய்யா இது எதுவும் தேவையில்லை என்றுதான் சொல்லியிருக்கிறார்.வைகுண்டசாமியை அறிந்தவனுக்கு இது அவசியமில்லை எப்படியாக பேசிக் கொண்டிருப்பார்.இத்தனைக்கும் அவர் கைகளாலேயே மண் பிசைந்து,செங்கல் அறுத்து ,பனைமரம் செதுக்கி அமைத்த அய்யா வைகுண்டரின் நிழற்தாங்கலிலிருந்தே அம்மனுக்கு மின்சாரம் செல்லும்,அதற்கு அவர் அனுமதி மறுப்பதில்லை.மேளக் காரர்கள் கொடைக்கு வந்தவர்கள் நிழற்தாங்கலில் தங்குவதே வழக்கம்.அதற்கும் மறுப்பு சொன்னவரில்லை.சமயங்களில் அவர்களுக்குத் தேவையானவற்றை அவரே நேரடியாக செய்து கொடுப்பதும் உண்டு.ஆனால் எங்களிடம் பேசிக் கொண்டேயிருப்பார்.சாமியாடுவது பொய் என்பார்.ஒருவேளை குழந்தைகள் கொடையின் போது ஏற்படக் கூடிய திருவிழா தன்மையால் ஈர்க்கப்படுவோம் என்று எண்ணம் கொண்டிருக்கலாம்.அது உண்மையும் கூட.பெரியவர்கள் அனுமதி இல்லை என்பதால் மட்டுமே குழந்தைகள் இந்த விளைக்குள் அடங்கிக

அய்யா வைகுண்டர் இதிகாசம் -18 முத்தாரம்மன் கோயில் வகையறா-4

Image
அய்யா வைகுண்டர் இதிகாசம் -18 முத்தாரம்மன் கோயில் வகையறா-4 பெரும்பாலும் நாடார்கள் கண்டடைந்த சமய நெறிகள் காட்டிலிருந்து பெற்ற ஞானத்தின் நீட்சியாக எழக் கூடியவை.கீழிருந்து மேலாக எழக் கூடியவை.பெருந்தெய்வங்களும் பெரு நெறிகளும் பின்னர் வந்து இதில் இணையும் .அதில் எந்த நெறி வேண்டுமாயினும் வரலாம்.சிவனாக,விஷ்ணுவாக ,அய்யா வைகுண்டராக யார் வேண்டுமாயினும் வரலாம்.கிறிஸ்தவமும் மேல் நெறியாகவே வந்தது.அப்படி வருவதற்காகவே அது இந்து உயர் நெறிகளைத் தாக்கிற்று. ஆனால் இந்து நாடார்கள் காட்டிலிருந்து பெற்ற அறிவில் உரசியே எதன் உள்ளேயும் செல்வார்கள்.அல்லது வெளியில் நிற்பார்கள்.ஆரம்பகால கிறிஸ்தவம் இந்த தொடர்ச்சியில் இருந்து வெளியேற கடுமையான விரதமும் பயிற்சியும் மேற்கொள்ள வேண்டியிருந்தது.. அய்யா வைகுண்டரின் உயர் நெறியும் உயர் சமயமும் இவர்களுக்கு உகந்ததாக இருப்பதற்கு தொடர்ச்சியே முக்கியமான காரணம். சைவம்,வைணவம் இரண்டிலும் கூட இதற்கான தொடர்ச்சி இல்லை.அந்த நெறி காட்டிலிருந்தே பெற்ற ஞானத்துடன் சரியாக பொருந்த வேண்டும்.இல்லையெனின் ஏற்பிற்கு வாய்பில்லை. சிவனை முழுமுதற்கடவுளாக வழிபடக் கூடியவர்கள் உண்டு.அவர்கள் சமயங்களில் முழ

அய்யா வைகுண்டர் இதிகாசம் -17 முத்தாரம்மன் கோயில் வகையறா-3

Image
அய்யா வைகுண்டர் இதிகாசம் -17 முத்தாரம்மன் கோயில் வகையறா-3 பங்குனியில் கொடைவரும்.தென்பகுதி கோயில்கள் அத்தனையிலும் கொடை நடக்கும்.ஒன்று முடிந்தால் ஒன்று,ஒன்று முடிந்தால் ஒன்று என முத்தாரம்மை ஒரு நடையில் ஏறியிறங்கி மற்றொன்று என அலைந்து திரிவாள்.நான்கு குறைப்பிள்ளைகளைப் பெற்ற தாய்,நான்கின் நடைகளுக்கும் ஏறி இறங்குவது போல .சித்திரை வரையில் இது தொடரும் முத்தாரம்மையிடம் தாய்மையே அதிகம்.பிற தன்மைகள் உண்டு.ஆனால் ஓங்கி நிற்பது தாய்மையே.தன் குழந்தையர்களின் பொருட்டு மன்னிப்பு கேட்கும் தாயின் அவஸ்தை நிரம்பியவள்.காப்பது மட்டுமே இலக்கு,எப்படியிருந்தாலும் காப்பதொன்றே குறி.உன் குழந்தையர் இன்னின்ன மாதிரி இருக்கிறார்களே ! நீ சொல்விளங்குவதில்லையா ?,என்று மஹா விஷ்ணுவே வந்து கேட்டாலும் என்ன செய்வது சாமி..குழந்தைகள் அப்படித்தான் இருக்கிறார்கள் என்று இரஞ்சுவாள்.பெருந்தெய்வங்களுக்கும் ஒரு தாயின் உண்மையான இரஞ்சுதலுக்கு முன்பாகப் பேச்சில்லை.தாய்மை அவ்வளவு குணம் கொண்டது. ஊரே கோடையில் சுட்டுக் கிடக்கும்.மங்கி இருள் சூழ்ந்து நெடு நேரம் ஆனபின்னாலும் கொதிக்கும்.மாலை வேளைக் குளங்கள் வென்னீர் குளியலுக்கு ஒப்பானவை.நள்ளிரவ

அய்யா வைகுண்டர் இதிகாசம் -16 முத்தாரம்மன் கோயில் வகையறா-2

Image
அய்யா வைகுண்டர் இதிகாசம் -16 முத்தாரம்மன் கோயில் வகையறா-2 ஒவ்வொரு தொன்மமும் ஏராளம் அகமடிப்புகளால் ஆனவை.இந்த அகமடிப்புகளெல்லாம் பல்வேறு காலங்களை உள்ளடக்கியவை.அதனால்தான் நாமதன் மடியில் மெய்மறக்கிறோம்.அவை நம்மைச் சுண்டி இழுக்கின்றன.நாம் இவற்றை அண்டவேண்டியதில்லை என நினைத்தாலும் சதா அவை நம்மை அண்டியே நிற்கின்றன.அவை உயிருள்ளவை என்பதை உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.நம்மிடமிருக்கும் அகம் இதன் சிறு துண்டு.இதனை வைத்து அதனை அளவிடமுடிவதில்லை.நான் அறிவதெல்லாம் நம்முடைய கற்பனைகளை மட்டுமே .இதுவொன்றே நமக்கு சாத்தியப்பட்டது.இது எவ்வளவு ஆழத்திற்கு செல்லும் ? தெரியாது.இறந்த காலத்திற்குள் எவ்வளவு செல்லும் என்பது தெரியாது,அதுபோல எதிர்காலத்திற்குள் எவ்வளவு செல்லும் என்பதும் தெரியாது.இந்த இறந்த காலம் நிகழ் காலம் எதிர்காலம் என்பதெல்லாம் என்ன ? நாம் வகுத்துக் கொண்டிருக்கிறோம்.இப்படி யாருமே ஒரு தார்ரோடு போட்டு வைக்கவில்லை.அது எங்கிருந்தோ தொடங்கி எங்கேயோ செல்வதுபோல.அதுவொரு அலை.காலமற்ற இருப்பு.சேகரமாகி சேகரமாகி ஒரு வற்றாத இடத்தில் சென்று நின்றுகொண்டிருக்கிறது. முத்தாரம்மன் வழிபாடு குமரிமாவட்ட நாடார்களிடம் உருவாகும

அய்யா வைகுண்டர் இதிகாசம் -15 முத்தாரம்மன் கோயில் வகையறா

Image
அய்யா வைகுண்டர் இதிகாசம் -15 முத்தாரம்மன் கோயில் வகையறா-1 குமரிமாவட்ட நாடார்கள் முத்தாரம்மன் கோயில்கள் வழியாகவே ஊர் நிர்வாகம் என்கிற அமைப்பைக் கண்டடைந்தார்கள்.ஏகதேசமாக ஊர் நிர்வாகமும் முத்தாரம்மன் வழிபாடும் ஒரே சமயத்தில் நாடார்களிடம் தோற்றம் கொண்டவை.எதுவானாலும் ஊர் கூடி முடிவெடுப்பது என்கிற முறை உருவானது.ஊர் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்படுவது என்று ஆனது.தனிமுடிவுகளுக்கும் கூடி எடுக்கிற முடிவுகளுக்கும் அதிசயயிக்கத் தக்கவிததில் எவ்வளவு வேறுபாடுகள் உண்டென்பது எகதேசம் அனைத்து நாடார்களும் அறிந்து வைத்திருக்கும் ரகசியம்.வேறு மாவட்டங்களில் கடைபிடிக்கப்பட்ட நாட்டாமை முறைகளுக்கும் இதற்கும் தொடர்பில்லை.ஒருவிதத்தில் சொன்னால் நாட்டாமை முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பு இது என்று சொல்லலாம்.பணம் ,அதிகாரம் போன்றவற்றின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு, மக்களில் பெரும்பான்மையினரின் விருப்பபடி ஊர் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். தொல்குடிச் சடங்குகள் மட்டுமே ஒரு சமுகத்திற்கு போதுமானதல்ல என்கிற கூட்டுணர்ச்சியின் விளைவாக அடுத்த கட்டத்திற்குள் நாடார்கள் ஊர் அம்மன் கோயில்கள் வாயிலாகவே கடந்து வந்து சேர்ந்

அய்யா வைகுண்டர் இதிகாசம் -14

Image
அய்யா வைகுண்டர் இதிகாசம் -14 அய்யா வைகுண்டசாமியின் காலம் 1809 முதல் 1851 வரையிலானது.வட இந்தியாவில் முன்னோடியாக வருபவர் ராஜா ராம் மோகன் ராய்.இவருடைய காலம் 1772 முதல் 1833 வரை.பிரம்மசமாஜத்தை ஏற்படுத்துகிறார்.அவரைத் தொடர்ந்து மும்பையில் ஆத்மராம் பாண்டுரங் 1867 ல் பிரார்த்தனை சமாஜம் உண்டாக்குகிறார். சாமி தயானந்த சரஸ்வதி காலம் 1824 முதல் தொடங்கி 1883 வரை.ஆரிய சமாஜம் இவரால் உருவாகிறது.ராமகிருஷ்ண பரமஹம்சர் 1826 முதல் 1886 வரையில் தன்னுடைய தரிசனங்களை மிகவும் எளிய முறையில் மேற்கு வங்க மக்களிடம் எடுத்துச் சென்றார்.இந்த காலம் இந்துசமய மறுமலர்ச்சி காலமாகக் கொள்ளத் தகுந்தது.இது இந்தியா முழுமைக்கும் யாரோ ஒருவரின் செல்வாக்கின் பேரிலோ அல்லது யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரிலோ நடைபெறவில்லை.இந்த காலகட்டத்தின் முக்கியத்துவம் இத்தகைய திட்டமிடல்கள் அற்ற தன்னிச்சையான எழுச்சிகளிலேயே அடங்கியிருக்கிறது. தென்னிந்தியாவில் நெல்லை,குமரி,தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அய்யா வைகுண்டரின் செல்வாக்கு உறுதியானது.இதனையொட்டி கேரளா முழுவதிலும் நாராயணகுருவின் செல்வாக்கு உறுதிப்பட்டிருக்கிறது.வட தமிழ்நாடு வள்ளலாருக்குரியது.கே

அய்யா வைகுண்டர் இதிகாசம் -13 சிவாய்மார் மேடை

Image
அய்யா வைகுண்டர் இதிகாசம் -13 சிவாய்மார் மேடை பூதகணங்கள் புடைசூழ இருந்தால் மட்டுமே அவை இந்துப் பெருந்தெய்வங்கள்.இது பிற மதங்களுக்கு இல்லை.பிறவற்றுக்கு ஏற்பில்லை என்பதே இதன் பொருள்.திருவட்டார் ஆதிகேசவபெருமாளுக்கு எத்தனையோ பூதகணங்கள் உண்டு.அது தவிர இரண்டு கேசிகள் மேலே பெருமாள் படுத்திருப்பதாக ஜெயமோகன் சொல்கிறார்.பேய்கள்,தெய்வங்கள்,தேவர்கள் நூலில் இந்த கேசியர் கதையும் வருகிறது.கேசிகளை பெருமாளே படைக்கிறார்.கட்டுகடங்காமல் போக அவரே அதன் மீது படுத்திறங்க வேண்டியிருக்கிறது.கேசியரின் கேசம் திருவட்டார் நிலத்தின் ஆழ்நிலை வரை நெடிது படர்ந்து அலையடிக்கிறது. அய்யா வைகுண்டர் நான் ஏற்கனவே சொல்லியிருக்கும் அத்தனைத் தேவதைகள் புடை சூழ இருக்கிறார்.அத்தனைக்கும் இடம் அளித்திருக்கிறார்.அவர் அனைவரையும் பிரதி நிதித்துவம் செய்கிறார்.இந்த ஒவ்வொரு தேவதைகளின் பின்பும் பெரும் மக்கள் இருக்கிறார்கள்.இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மக்களைக் கொண்டவர்கள்.ஒரு சாதிக்குள்ளாகவே பல பிரிவினரை,பல குணாதிசயங்களைக் கொண்டவர்கள்.வெளியில் இருந்து காண்கையில் எல்லாமே ஒன்று போல தோன்றும்.கருப்பாகத்தானே இருக்கிறது.காகங்கள் மட்டுமாகத்த

அய்யா வைகுண்டர் இதிகாசம் 12 கன்னிக்கு வைத்துக் கொடுத்தல்

Image
அய்யா வைகுண்டர் இதிகாசம் 12 கன்னிக்கு வைத்துக் கொடுத்தல் இதுதான் இந்த சடங்கின் பெயரே.வைத்துக் கொடுப்பது எதற்காக ? பொதுவாக இங்கே மூதாதையர் சடங்கு , முன்னோர் சடங்கு போன்றவை தனித்து இல்லை.குழிவாசலுக்குச் சென்று படைப்பதும் குறைவே.குழிவாசல் என்பது அமர மேடை.ஒன்றிரண்டு ஆண்டுகள் செய்வார்கள் பிறகு விட்டு விடுவார்கள்.பொதுவாகவே நீத்தார் நினைவு முதல் வருடத்தில் முள்முனை போல நின்று அறுத்துக் கொண்டிருக்கும்.அடுத்த வருடம் கடமை என்று ஆகும்.மூன்றாவது ஆண்டும் களித்தால், போதும் என்று தோன்றிவிடும்.அதன் பிறகு ஆள்சேரமாட்டார்கள்.அண்ணன்,தம்பிகளாக இருந்தால் கூட.அக்கா ,தங்கைகளாக இருந்தால் கூட.வலிந்து ஆள் சேர்க்க முயற்சித்தால் வழக்குண்டாகும். ஒரு சராசரி மறைவிற்கு மூன்று ஆண்டுகள் என்பதே அதிகம். இடைமரணங்கள் அப்படியில்லை.நீடிக்கும்.மறைந்தவருக்கு சின்ன வயதுக் குழந்தைகள் இருந்தால் கசக்கும் போதெல்லாம் மறைந்தவர்கள் கண்ணீராய் திரண்டு நிற்பார்கள்.அவர்கள் பெரியவர்களாவது வரையில் நீடிப்பார்கள்.சுற்றி வருவார்கள்.ஆனால் அதனை நாமாகவே தடுத்து நிறுத்திக் கொள்வதே நல்லது.சிலர் பெரிய புகைப்படங்களாக வீட்டில் வைத்து நெய்யூற்றிக் கொண்ட