Posts

Showing posts from January, 2021

எனது மியூஸியத்தின் தொடுவுடல்

Image
இந்திர வெளிச்சம் 1 யாரையும் வெறுக்காமல் ஒரு தர்மம் கையிலெடுக்கப்படல் வேண்டும் அதனால் எல்லோரும் வெறுப்பார்கள் நீ யார் என்பார்கள் சைத்தான் என்பார்கள் பின்னரும் தர்மம் கைவிடப்படல் ஆகாது வெறுத்தல் தகாது இகழ்வோனை ஒதுக்குதல் தகாது எப்போதும் தர்மம் கைக்கொண்டிருக்கும் கரம் ஈஸ்வரப் பட்டத்திற்குரியது 2 தேடிய வழியில் நடந்து செல்கிறான் ஒருவன் வந்து சேர்கிறார்கள் வழி கேட்கிறார்கள் விடைபெறுகிறார்கள் இந்திரப்பாதையில் நடந்து செல்கிறான் தனியன் தனித்து நடப்பவனுக்கே இந்திரப்பாதையின் வெளிச்சம் ###   வாழாத வீடு கசக்கும் வாழாத ஊர் கசக்கும் கெட்ட ஊர் நரகம் தப்பிச் சென்ற இடம் சொர்க்கம் சொர்க்கத்தில் மழை பார்க்கலாம் மழைக்கு நம்மைப் பார்க்கலாம் சொர்க்கத்தின் குடிநீருக்கு அவ்வளவு ருசி ஒரு அடிக்கு அந்தப்பக்கம் அது ஒரு அடிக்கு இந்தப்பக்கம் இது அடியெடுத்து வைப்பதுதான் கடினம் ### சிற்றெறும்புக்கு எல்லாமே பண்டம் விஷத்தேள் கொடுக்கு பண்டம் சிலந்திவலை பண்டம் ஜீவநீர் பண்டம் பண்டமிலாத ஒன்றில சிற்றெறும்பின் நாவுக்கே கொடுந்தேள் ஒன்றிற்கிரை கொடும்பாம்பு ஒன்றிற்கிரை கொடும்பாபி பெண்டிற்கிரை பாபத்தின் புனுகு பொன்னாபரணம் பொன்னாப