கடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன.

கடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன. இன்று காலையிலேயே வழக்கத்திற்கு மாறாக கன்னியாகுமரி மாவட்டம் விடிந்தது.கடற்கரைகளில் இருந்து வர வேண்டிய பேருந்துகள் வரவில்லை.பின்னர் இடைகிராமங்கள் வரை சென்று கடற்கரைகளைத் தொட்டு விடாமல் திரும்பும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளது.காவல் வளையங்கள். மீறி பேருந்துகளில் ஏறுகிற கடற்கரை மக்கள் காவலர்களால் இறக்கி விடப்படுகிறார்கள்.இது என்ன வகையான ஒடுக்குமுறை என்பதே விளங்கவில்லை.ஊடகங்கள் இதனை பொருட்படுத்தாமல் இருக்கின்றன. மணக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சரக்கு பெட்டக துறைமுக வேலைகளுக்கு எதிராக மக்கள் இன்று; மாவட்டத்து தலைநகரான நாகர்கோயிலுக்கு சென்று மனு கொடுக்கவிருக்கிறார்கள் என்பதனை முன்னிட்டு இந்த நடவடிக்கை.கடலோர கிராமங்களை சிறை வைக்கும் நடவடிக்கை.பொய் வழக்குகள்,தனி மனிதர்களை சிறை வைத்தல் போன்ற நடவடிக்கைகளை மிஞ்சும் விதத்தில் இந்த அரசின் கடலோர கிராமங்கள் சிறை வைப்பு நடவடிக்கை .அரசின் அடக்குமுறைகள் நாள்தோறும் புதுப்புது வடிவங்களை அடைந்து வருவதற்கு சான்று இந்த நடவடிக்கை.இது அப்பட்டமான மக்கள் விரோதம் என்பதில் யாத...