Posts

Showing posts from July, 2018

அப்பச்சி காமராஜர் ...

Image
அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வரவில்லை என்று கூறினேன்.அதற்கு இரண்டு க ாரணங்கள் இருந்தன.காமராஜர் பற்றி இன்று பொதுவாகப் பேசப்படும் பொதுமனநிலையிலிருந்து, அதற்கு உட்பட்டு எதையும் பேச இயலாது.மாறாகப் பேசும்போது அவை தவறாக எடுத்துக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் . பிறந்த சாதியைச் சேர்ந்த சாதியவாதிகள் காமராஜரை எப்படி இப்படி பேசலாம் எனவும் பிற சாதியவாதிகள் காமராஜர் என்பதால் பேசுகிறேன் என்று வேறுவிதமாகவும் அணுகுவதற்கான வாய்ப்புகளே இன்றைய தினத்தில் அதிகம். ஆன்டனி எனது நண்பர்.புரிந்து கொண்டார் என்று நினைக்கிறேன்.ஏற்கனவே அவரது அழைப்பை ஏற்று சென்னை சென்று ஒருமுறை அந்த ஷோவில் பங்கேற்றிருக்கிறேன் . மற்றொரு முறை சென்றபின் ஏற்பாடு செய்த அரங்கில் பங்கேற்க முடியாது என மறுத்துத் திரும்பவும் செய்திருக்கிறேன்.அன்டனி ஊடகக்காரர்களில் சற்று விதிவிலக்கானவர்.புரிந்து கொள்ளக் கூடியவர்.அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் குட்டிரேவதி,பிரபஞ்சன் உட்பட காமராஜரின் பிறந்த சாதியை சேர்ந்த மூவரும் அழைப்பை மறுத்து வ

அரசே திவ்யபாரதியை கைது செய்யாதே

Image
திவ்யபாரதியை கைது செய்யும் முயற்சிக்கு என்னுடைய வன்மையான கண்டனங்கள் ஆவணப்பட இயக்குனரும் ,வழக்கறிஞரும் ,சமூக செயல்பாட்டாளருமாகிய திவ்யபாரதியை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதாக அறிகிறேன்.அரசு தொடர்ந்து அவருக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதை உண்மையாகவே என்னால் விளங்கி கொள்ள இயலவில்லை.குற்றவாளிகள் , குற்றப் பின்னணி கொண்டோரை முன்பெல்லாம் உளவுத் துறையும் போலீசும் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.இப்பொது முழு வேலையாக சமூக அக்கறை கொண்டோரை ஒடுக்குவதில் இந்த அரசாங்கம் குறியாக இருக்கிறது.இதுவொரு அசாதாரணமான நிலை என்பதில் சந்தேகமே இல்லை.எனது அனுபவத்தில் கண்டிராத ஒடுக்குமுறைகள் இப்போது நடந்து வருபவை.அரசிற்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே திவ்யபாரத்தின் "கக்கூஸ்" ஆவணப்பட திரையிடல் தமிழ்நாட்டில் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டது.இத்தனையும் மீறி அந்த ஆவணப்படம் மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது.மட்டுமல்லாமல் கேரளா ,தில்லி என பல இடங்களிலும் பாராட்டப்பட்டதோடு நிறைய விருதுகளையும் பெற்றது .கேரளா அரசின் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதினையும் பெற்றது என நினைக்கிறேன்.இங்கே ஏன்