Posts

Showing posts from September, 2020

கடலொருபக்கம் வீடொருபக்கம்

Image
  அச்சுஅசல் ஒரு நாய்க்குட்டி குழந்தையைப் போலவே இருக்கிறது குழந்தையைப் போலவே விளையாடுகிறது குழந்தையைப் போலவே குதிக்கிறது ஆர்ப்பரிக்கிறது குழந்தையைப் போல கனவு காண்கிறது ஏதோ ஒரிடத்தில் இருந்து குழந்தை நாயாகிறது குழந்தை பூனையாகிறது நரியாகிறது எலியாகிறது மனிதனாகிறது பல ஊர்களுக்கும் பிரியும் முச்சந்தி போலொரு இடம் அதனதன் ஊர்களுக்கு அதிலிருந்து திரும்பிச் செல்கின்றன பல ஊர்களுக்கு பல கிளைகளுக்கு குழந்தை தன்னில் நீங்கியதும் உரியவை வந்து எடுத்துச் செல்கின்றன தங்கள் தங்கள் மிருகங்களை 2 போலீஸ் சாலையில் காவல் நிற்கிறாள் போலீஸ்காரி நளினம் வற்றா உடல் அதிகாரம் ஏறாத அவயங்கள் குதிரை இடுப்பு சுற்றி வெட்கம் சுழலும் கண்கள் நெரித்து ஏறும் கூட்டத்தை நெறிப்படுத்தவேண்டும் இப்படி வாங்க அங்க போகாதீங்க என சத்தமாகச் சொல்லும் அவள் உதடு மெதுவாக அப்படி போகாத இப்படியா போ என ஒருமுறை தயக்கத்துடன் பேசிப் பார்க்கிறது இப்படி போடே அப்படி போகாதடே என்பது நோக்கி அவள் சொற்கள் இழுபடுகின்றன ஆசையாசையாய் இழுபடும் வார்த்தைகளைக் கண்டு ரசிக்கிறாள் போலீஸ்காரி முதல் தயக்கத்தின் தலைமீது ஏறிக்கடக்கிறது புத்தம்புதிய வாகனம் சாலையின் குறுக்கே

சித்திரக்கூடம் [ கதை ]

Image
சித்திரக்கூடம் கட்டிடம் வெளித்தோற்றத்திற்கு நேராக அடுக்கடுக்காக அமைந்திருப்பது போல தோன்றியது. ஆனால் எப்போதும் அது பாலித்தீன்பை போல வளைந்திருக்கிறது என்பதையே பார்த்தேன். அது உருவத்தை மாற்றியமைத்தபடியிருந்தது. ஒவ்வொருவருக்கும் அது ஒவ்வொரு விதமாக அமைந்திருந்தது என்றாலும் புலப்பட்ட தோற்றங்களை மட்டுமே ஒவ்வொருவரும் அதன் நிரந்தரத் தோற்றமாகக் கற்பனை செய்து கொண்டார்க்ள். கற்பனைக்கு மாறாக அவற்றின் தரைப்பகுதி சாய்வாக இருந்தது. சாய்வாக இருந்தது யாருக்கும் பொருட்டாகவும் இருக்கவில்லை. ஒரு வகையில் அது சாய்வாக இல்லாமல் சமதளத்தில் இருப்பதாகவே கற்பனை செய்து கொண்டார்கள். ஒவ்வொருவரும் உள் நுழைந்ததும் அது ஒவ்வொரு விதமாக வளைவதைப் பார்த்தேன். பெரிய எந்திர உருவங்களில் அசைந்து கொண்டிருந்தது எனக்கு பயத்தை ஏற்படுத்தியது. கட்டிடத்தின் அபாயத்தை யாரும் உணராமல் இருந்தது குறித்துக் கவலைப்பட்டேன். அறைகள் வளைவதை அவர்களிடம் தெரிவித்தால் எனக்கு மனநிலை சரி இல்லாமல் போய்விட்டதாக அவர்கள் கருதக்கூடும். ஏன்றாலும் அந்தக் கட்டிடம் வளைந்திருப்பதைத் தெளிவாகப் பார்த்தேன். இது சம்பந்தமாக புகாரை எழுப்ப வேண்டும் என்றும், அது எனது ம