Posts

Showing posts from May, 2017

கன்னியாகுமரி பகவதி தேவியலங்காரம்

Image
1 இருநூறு வருட ஜமீன் வீடு சாலையில் பத்தடிக்கு தாழ்ந்து கிடக்கிறது ஆனால் ஜமீன் வீட்டு மாடுகளுக்கு ஆயிரம் வயது அவை சமவெளியில்தான் மேய்கின்றன தாழவில்லை ஒவ்வோர் ஆண்டும் மணல் அள்ளிப் போட்டு ஜல்லியடித்து உயரும் தார்ச்சாலைகளை பள்ளத்துக்குள்ளிருந்து தலைநீட்டி எம்மாம் பெரிய ரோடு என வியக்கும் சின்ன ஜமீனுக்கு இன்றைய தேதியில் துணை பக்கத்தில் வாழும் பொய்முலை இசக்கி 2 காந்திமதியம்மன் இரட்டைச் சடை பின்னல் போட்டு நகரப்பேருந்தின் ஜன்னலோரம் தூங்கிக் கொண்டிருக்கிறாள் தலையசைந்து மோதி மீட்டும் துயில் பிறைவடிவ மல்லித் தொடர் கூந்தல் திரையிசைப் பாடல்களுக்கு ஏன் பாடிக் கொண்டிருக்கிறோம் ? என்னும் திசைக் குழப்பம் உச்சி வெயிலில் நெல்லையப்பர் நடையடைத்திருக்கிறது 3 அபிராமி துவைத்துக் போட்ட ஆடைகள் மேல்மாடிக் கொடியில் ஆடுவது பார்த்து திரும்பிக் கொண்டிருக்கும் தம்பி நேற்றே குளியலறையில் யாருக்கும் தெரியாமல் சோப் திருடிய திருடருடன் சென்றிருக்கிறாள் திரும்பி வர நாளாகும் அபிராமிக்கு மட்டும் பின்புறம் எப்படி கச்சிதமாய் அமைந்திருக்கிறது என்று வியக்கும் பேய்முலைகள் கண

பா.ஜ.க அடுத்த முறை ஆட்சிக்கு வரக்கூடாது.

Image
பா.ஜ.க அடுத்த முறை ஆட்சிக்கு வரக்கூடாது. கொஞ்சம்  கொஞ்சமாக அவர்களின் அதனை வேஷங்களும் கலைந்து கொண்டிருக்கின்றன .மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகாரத்தின் உச்சநிலையை அடைவார்கள் என்பதில் சின்ன சந்தேகங்களும் வேண்டியதில்லை.அறிஞர்கள் ,பன்முகப் பார்வை கொண்டோர்கள் ஒருவர் கூட அக்கட்சியில் இல்லாதது ,அல்லது அவர்களால் இவர்களை பாதிக்க இயலாது என்பது நிரூபணம் ஆகிறது . இது  அவர்களுடைய மாபெரும் துரதிர்ஷ்டம் .வாய்ப்பு கிடைத்தால் பேன் பார்க்க தொடங்கி விடுவார்கள் என்கிற ஐயம் உண்மையாகி கொண்டிருக்கிறது பழமைவாதம் மட்டுமே  நிறைந்த ஒரு வீட்டிற்குள் இருந்து கொண்டு,நான்கு பேர் என்ன முடிவுகள் எடுப்பார்களா ,அது போலவே மொத்த நாட்டிற்கும் அனைத்து விதமான,  இந்திய துணைக் கலாச்சாரங்கள்  அத்தனைக்கும் சேர்த்து அவர்கள் முடிவெடுக்கிறார்கள்.இதனை அவர்களுக்கு புரிய வைப்பதற்கோ ,அப்படியில்லை விஷயங்கள் என்பதனை படிப்பித்து கொடுப்பதற்கோ வாய்ப்புகள் இல்லை .காரணம் அறிவுலகத்தின் மீதும் ,பிற கலாச்சாரங்கள் மீதும் அவநம்பிக்கை மட்டுமே கொண்டவர்கள் அவர்கள் . ஒற்றைக் கலாச்சாரம் தவிர்த்து பிற எவற்றின் பேரிலும் அவர்களுக்கு நம்

பால்ய கால நண்பன் தேடி வந்திருந்தான்

Image
பால்ய கால நண்பன் தேடி வந்திருந்தான் நீ இன்னும் பால்ய காலங்களையே தேடித் கொண்டே இருக்கிறாயா ? எனக் கேட்டேன்.அவனுக்குள் இருந்த சிறுவனுக்கு நான் என்ன கேட்கிறேன் என்பது விளங்கவில்லை.பால்ய காலங்களை மீண்டும் தேடித் செல்வது நரக ஒத்திகையில் நன்றாக  ஈடுபடுவது.அந்த காலம் எங்குமே கிடைக்காது.நினைவில் வாழுகிற மிருகம் அது.பழைய காதலியை தேடித் செல்வதை ஒத்தது இந்த பயணம் .அப்படியே கண்டு பிடித்து விட்டால் இவள் ஏன் இப்படியிருக்கிறாள் என்று தோன்றும்.எல்லாமே மாறிவிட்டது என்று சொன்னான்  ஜவகர்.ஒன்றுமே மாறவில்லை நாம்தான் மாறியிருக்கிறோம் என்று சொன்னேன் நான்.காலமும் வாழ்வும் சதா நம்மைப் புரட்டிப் போட்டுக் கொண்டே இருக்கிறது. பால்யம் நினைவில் நின்றெரிதலே சுகம். ஏராளமான வடுக்கள்,முகம் களைத்துப் போயிருக்கிறது.வாழ்க்கை எத்தனை முறை அவனைப் புரட்டியடித்திருக்கும் ? ஆனாலும் அவனுள் வசிக்கும் சிறுவன் அப்படியே உளம் வாடாமல் இருக்கிறான்.அந்த சிறுவன் வா... நாம் சென்று பழைய விளையாட்டுகளை விளையாடுவோம் என்று அழைக்கவில்லை  .அழைக்கும் தைரியம் இப்போது அவனிடம் இல்லை.அந்த கொதிகலன் அவனுள் உடைந்து விட்டது. ஜவகர் என்னுடைய ஆரம்ப

கேட்பவரே

Image
கேட்பவரே ஒரு கவிஞனோடு ,எழுத்தாளனோடு அறிமுகம் கிடைத்த மாத்திரத்திலேயே என்ன தொழில் செய்கிறீர்கள் எனக் கேட்காதீர்கள் .நீங்கள் புதிதாக அறிமுகம் ஆகிற ஒரு நபரின் பிறந்த சாதியை அறிய எந்த ஊர் ? என கேட்பதைப் போன்ற அநாகரீகம் இது.நான் ஒரு நடிகன் என வைத்துக் கொள்வோம் ,நீங்கள் எடுத்த மாத்திரத்திலேயே என்ன தொழில் செய்கிறீர்கள் என கேட்பீர்களா ? ஓவியன்,இசைக் கலைஞன் ,நடனக் கலைஞன் என்றால் இந்த கேள்வியைக் கேட்பீர்களா ? ஒரு விஞ்ஞானியை இந்த கேள்வியால் எதிர் கொண்டிருக்கிறீர்களா ? எழுதுகிறவனை என்ன தொழில் செய்கிறீர்கள் ? என கேட்கிற சமூகம் ,இனம் கேடு தெளிய இன்னும் வெகுகாலம் ஆகும்.இதில் என்ன விளக்கெண்ணெய் தமிழ் தேசியம் வேண்டிக் கிடக்கிறது ? .கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் தமிழில் என்ன நடந்திருக்கிறது என்பதை அறியத் தெரியாத  ஒருவன் , தான் ராஜராஜ சோழனின் தந்தை ,கொள்ளு பேரன் என்றெல்லாம் கூவித் திரிதல் மனகுரங்கின் சிரங்கை சொரிந்து திரிதல் போல. அறிமுகம் தொடங்கிய மாத்திரத்திலேயே உளவறியத் தொடங்குவது ஆகாத மனநிலை.கொஞ்சம் பழக்கம் கூடிய பின்னர் உளவறியத் தொடங்குதல் அதனினும் ஆகாத மனநிலை.தமிழர்கள் பொதுவாக பெரும்பாலும் த

ரஜினி அரசியலுக்கு வருவதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது

Image
ரஜினி அரசியலுக்கு வருவதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக ரஜினி காந்த் மக்களால் தேர்வு செய்யப்படுவார் எனில் ; தமிழ்நாட்டின் அடுத்த முப்பதாண்டு காலம் தொடங்கி விடும்.தமிழ் நாட்டு மக்களால் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட பிரபலமும் ,புகழும் ,மக்கள் சக்தியும் அவசியம்.வெற்று தொழில் அதிபர்கள்,வியாபாரிகள் ,கல்வியாளர்கள் அதிகாரத்தில் துணையாக பங்கு பெற முடியுமே தவிர , தானைத் தலைவனாகவோ தலைவியாகவோ ஆக முடியாது.வெற்று தொழில் அதிபர்களையும் ,வியாபாரத்தின் பின்னணியிலிருந்தும் மேலதிக அரசாங்கம் பந்தாடுவதை நாம் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.மக்கள் சக்தி அவர்களிடம் இல்லை என்பதே அதற்குக் காரணம். ப.சிதம்பரம் வரையில் வேட்டையாடப்படுகிறார் என்றால் நிலை என்ன என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.ப.சிதம்பரம் சாதாரணப்பட்ட ஆளில்லை.ஆனால் சுயசாதிப் பின்னணி கூட சரியாக அமைய பெறாதவர். மக்கள் சக்தியற்றவர்.பீட்டர் அல்போன்ஸ் மட்டும்தான் அங்கே பொய் நிற்க முடிகிறது. ஆனால் அவரை வேட்டையாடுபவர்களுக்குத் தெரியும், அவருக்கும் தங்களை மீண்டும் வேட்டையாடுவதற்காக வாய்ப்புகள் மீண்டும்  வரக் கூடும் என்பது. மட

இரண்டு கவிகள் இரண்டு விதம் - தேன்மொழி தாஸ் - சூர்யா

Image
இரண்டு கவிகள் இரண்டு விதம் - தேன்மொழி தாஸ் - சூர்யா ஒரு கவிதையை ஏன் உங்களுக்கு பிடிக்காமற் போயிற்று ? எனக் கேட்டு வாசகனை வற்புறுத்த இயலாது.பிரம்பு கொண்டு அடிக்கவும் முடியாது. சிறந்த கவிதைகள் வாசகனுக்கு இயலாமற் போய் விடக்கூடிய சாத்தியங்கள் உண்டு.அதனால் சிறந்த கவிதைகள் அத்தனையும் வாசகனுக்கு அந்நியமானவை என்று முடிவு செய்ய இயலாது.பொதுவாக நல்ல கவிதைகளுக்கு தானாக வாசகனைச் சென்றடையும் கரிசனம் உண்டு கால தாமதம் ஏற்பட்டாலும் கூட.. கவிதையின் நடிப்பு காத்திருப்பது அதனையும் நோக்கித்தான்.அது சில வரைபடங்களை வரைந்து வரைந்து சமர்ப்பிப்பது அதன் வினோத நடிப்பை ஏதேனும் ஜீவி அறிந்து கொள்ளும் என்கிற தவிப்பின் அடிப்படையிலேயே.எனவே கவிதையை பொறுத்தமட்டில் உதாசீனமாக கடந்து செல்வது ஆகாத பழக்கம்.வாழ்க்கையின் எந்த துருவத்தில் இருந்தாலும் கூட கவிதை நளினம் செய்வது ,வரைந்து தன்னை வெளிப்படுத்துவது  தொடர்பின் அடிப்படையிலேயே எண்பதுகளின் கவிஞர்கள் தங்களை மனித குலத்திற்கு விளங்காத அரூபிகளாக  நடித்துக் காட்டினார்கள் .அப்படியவர்கள் நடித்துக் காட்டியமைக்குப் பொருள் கிடையாது என்று சொல்ல முடியாது.சிவாஜி,எம்.ஜி.ஆர்.காலம் அ

தீவிரவாதி என்பார்கள் - கவிதைகள்

Image
 தீவிரவாதி என்பார்கள் - கவிதைகள் ----------------------------------------------------------- அவள் சிரிக்கும் போது இப்பொழுதிலிருந்துதான் சிரிக்கிறாள் ஒரு பூ விரிவதைப் போல ஒரு சூரிய அஸ்தமனத்தை ஒப்ப ஒரு நதியில் மூழ்கி எழுவது பயின்று அழும்போதுதான் எந்த நூற்றாண்டிலிருந்து கொண்டு அழுகிறாள் என்று தெரியவில்லை பயமாக இருக்கிறது ஏழுகடல் தாண்டும் சித்தன் எந்த நூற்றாண்டிற்குச் சென்று சமாதானம் சொல்வது ? 2 எனது குயில்கள் கூவத் தொடங்கும் போது மாலை இப்போது ஆறு மணி இந்த மொத்த நாளிலிருந்து எனக்கு கிடைத்த பிரபஞ்சத் துண்டு. நாளின் அசதி நீரில் கழிய போருக்குச் சென்று திரும்பியது போலும் காணாதிருந்த கண்களில் ஒரு பச்சைக் கிளி கொண்டு நிரப்புகிறது காட்சிகளின் பெரும் ஊற்றை 3 கைப்பிடியளவு கடல்தான் இந்த உடல் என்ற ஒருவனை கடலில் கரைத்து விட்டுத் திரும்பினோம் அப்படியானால் எத்தனை கைப்பிடியளவு கடலாக இருக்கும் இந்த கடல் ? ஒவ்வொரு கைப்பிடியிலும் கடலளவு நிறைந்திருக்கும் காமம் என்றால் கைப்பிடியளவும் தீராக் கடல்தானோ ? கரைந்து சென்றவன் விட்டுச் சென்ற அனுபவ எச்சம் மௌனம் பேசா மணல

கமலாம்மா

Image
கமலாம்மா அரிதாகச் சிலரே தங்களுடைய தேவதைத்தன்மையைத்  தவிர்த்து பிறவற்றை பிறருக்கு வெளிப்படுத்தாத தன்மையைப் பெறுகிறார்கள்.அதற்கு மிகவும் மனத் துணிச்சலும் ,வாழ்க்கை மீதான நிதானமான பார்வையும் தேவை.ஆழ்  சமுத்திரம் போலும் சலனமின்மை அவசியம்.  நான் அவ்வாறாக உணர்ந்த ஒருசிலரில் கமலாம்மா ஒருவர்.அவர் நிச்சயமாக தேவ பிரகாசம். அவரை கடைசியாக ஒரு பொது நிகழ்ச்சியொன்றில் பார்த்தேன்.பல வருடங்கள் இருக்கும் .இப்போது நண்பர் ஒருவர் அவருடைய புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.ஸ்ரீனிவாசன் நடராசன்.அவரின் தன்மையை வெளிப்படுத்தும் புகைப்படங்கள். எவ்வளவோ நினைவலைகள். சுராவின் மறுபக்கம் கமலாம்மா. அவருடைய மன அலைவரிசையில் அவ்வளவு தூரத்திற்கு நெருங்கிக் கைகோர்த்திருந்தவர் கமலாம்மா.பெரிய ஆளுமைகளின் துணையாக அமைவது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சிரமங்கள் நிறைந்ததுதான்.நான்கு தலைமுறை எழுத்தாளர்கள் வந்து தங்கி உரையாடி மீண்டும் கூடும் வண்ணம்  வேகமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு வீட்டை நிர்வாகம் செய்தவர் அவர்.எட்டு வருடங்கள் அந்த வீட்டோடு நெருங்கிய உறவு கொண்டிருந்த நான் ஒருபோதும் முகமலர்ச்சியற்றோ ,நிதானமற்றோ கமலாம்மாவை  

சாதியுணர்ச்சி என்னும் உள்வட்ட சக்தி

Image
சாதியுணர்ச்சி என்னும் உள்வட்ட சக்தி சாதியுணர்ச்சி என்பது அதன் உள்வட்டத்தில் தேங்கி நிற்கிற வினோதமானதொரு காமம்.நமது கூட்டுப் பெருக்கில் நமக்கு கிடக்கிற சில்லிப்பு இருக்கிறதே அதுதான் சாதியுணர்ச்சிக்கு அடிப்படை.தனியே இருக்கும் போது , நாம் ஒரு மனிதனாகவும் நாலுபேர் தொங்கிப் பிடிக்கக் கிடைத்தால் நாம் வேறொரு மனிதனாகவும் இருக்கிறோம்.சாதிகளில் மட்டும் என்றில்லை அமைப்புகளில் ,நிறுவனங்களில் ,கட்சிகளில் ,சாதியெதிர்ப்புக் கூட்டங்களில் கூட இதன் தன்மை உண்டு.ஒருமித்த கொள்கை கொண்டோர் பிறரை கூட்டு சேர்ந்திருக்கும் போது தாக்குவதற்குத் துணை நிற்பதும் இதே உணர்ச்சிதான்.தனியே இருக்கும் போது ஒருவன் எவ்வாறு நடந்து கொள்வானோ அது போலவே கூட்டமாக  இருக்கும் போதும் நடந்து கொள்வானோ அப்போது முதற்கொண்டுதான் நாகரீக மனிதனாகிறான்.அது தான் சார்ந்த கூட்டமாகவும் கூட இருக்கலாம். இல்லாமல் இருப்பதெல்லாம் பொய்யுருக்கள் . முதலில் தனி மனிதன் தனியாக வாழ்வது எப்படி என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  சாய்வு கொண்ட கூட்டத்தில் மட்டும்தான் உனக்கு ஜொலிப்பு இருக்கிறதென்றால் உனக்கின்னும் அருகதை கூடவில்லை என்று பொருள்.தனியே வாழ்வ

கொஞ்சம் கொஞ்சமாக நல்ல பிராமணன் ஆகிவிட வேண்டும்

Image
கொஞ்சம் கொஞ்சமாக நல்ல பிராமணன் ஆகிவிட வேண்டும் பிராமணன் ஆதல் என்பது பிராமணன் என்னும் சாதியாக ஆவது அல்ல.நல்ல முஸ்லீம் ஒரு பிராமணன்தான்.நல்ல பவுத்தன் ஒரு பிராமணனே .பிராமணன் ஆதல் என்பது ஒரு விசேஷமான இடத்திற்கு வாழுமிடத்திலிருந்தே சென்று சேருவதைக் குறிப்பது.உடல் கொண்டு அனுபவம் கொண்டு வாழாமல் அந்த இடத்திற்கு வந்து சேர இயலாது. உடலும் அனுபவமும் கொண்டு சேர்க்கும் பாதைகள்.   இசை ஞானி இளையராஜாவை பலரும் அவருடைய ஆன்மீக நகர்தலை குறித்து விமர்சனங்கள் எழுப்பும் போது உண்மையாகவே சங்கடப்பட்டிருக்கிறேன்.ஒருகாலகட்டத்தின் இசையை முழுவதுமாக தன்வயப்படுத்திய ஒரு மேதை அனுபவம் கொண்டு அடைந்த இடம் ; தவறாக இருக்கும் என்று எந்த கருத்தின் ,கொள்கையின் ,அறிவின் அடிப்படையில் கருதுகிறார்கள் ?.அவர் இன்றிருக்கும் இடத்திற்கு நாளை நீங்களும் வந்து சேருவதுதான் நல்லது என்பதை அனுபவத்தால் கண்ட பின்னர்தான் விளங்க இயலும். இசையையும் ,மொழியையும் தன்வசப்படுத்தும் ஒருவன் பிராமணன் ஆகாமல் இருக்க இயலுமா என்ன ? ஜேசுதாஸ் சபரிமலையில் மடியுருகி நிற்கிறாரே அந்த பரவசமான இடத்திற்கு இன்றில்லையாயினும் என்றேனும் ஒருவன் வாழ்க்கையில் வந்து சேர

நீட் தேர்வு வெளிப்படையான அரசியல் மோசடி

Image
நீட் தேர்வு வெளிப்படையான அரசியல் மோசடி ஒரு சமூகத்தின் கல்வி என்பது படிப்பது ,வேலை பார்ப்பது ,தொழில் புரிவது என்பவற்றோடு மட்டும் தொடர்புடைய ஒரு காரியம் அல்ல.எந்த சமூகம் கல்வியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறதோ அப்போது முதற்கொண்டு அது தனது அரசியல் உரிமைகளை நிலைநாட்டத் தொடங்குகிறது என்று பொருள்.நமது நவீன சமூகத்தில் மருத்துவம் நேரடியான அரசியல் தொடர்பை வெளிப்படுத்தாத போதும் ,அல்லது வெளிப்படுத்தும் போதும் அரசியல் உரிமைகளை மீட்கும் சக்தி கொண்டதொரு படிப்பு .மருத்துவர்கள் அதிகம் உள்ள ஒரு சமூகம் அதிகபட்ச பாதுகாப்பையும் பெறுகிறது ,அரசியல் அதிகாரம் பெறுகிறது  என்பது கடந்த காலங்களில் நிகழ்ந்த அரசியல் எழுச்சிகளின் உண்மை.தகவல் தொழில் நுட்பம் போன்ற துறைகளுக்கு கூட நமது சமூகத்தில் இல்லாத மறைமுக அதிகாரம் இது.அரசியல் அதிகாரத்தை அடைவதில் மருத்துவம் முதற்படி.இந்த அதிகாரத்தை  மாநில அரசியலில் நிலை கொள்ளுதலில் இருந்து பிடுங்கி மத்திய அதிகாரத்தோடு இணைக்கும் முயற்சியே நீட் நுழைவுத் தேர்வு என்னும் அரசியல் மோசடி. பெரும்பாலும் தமிழ்நாட்டில் உருவான மருத்துவர்கள் முத்துக் கருப்பனும்,பேச்சி முத்துவும்

கிராமத்து பிராமணர்களின் உணவுப் பழக்கம் தவறு

Image
கிராமத்து பிராமணர்களின் உணவுப் பழக்கம் தவறு கிராமத்து பிராமணர்கள் தவறாக சைவ உணவுப் பழக்கத்தைக் கடைபிடிக்கிறார்கள்.அசைவத்தை ஏற்றுக் கொண்டுள்ள பிராமணர்களின் அளவிற்கு சைவ உணவுப் பழக்கம் கொண்ட பிராமணர்களுக்கு அறிவும் குறைவு ,உடல் ஆற்றலும் குறைவு .உள்ளத்தாலும் உடலாலும் கிராமத்து பிராமணர்கள் வீரியம் குன்றியிருப்பதற்கு சைவ உணவுப் பழக்கம் ஒரு முக்கியமான காரணம்.உண்மையாகவே மனிதனுக்கு சைவ உணவுப் பழக்கம் விஞ்ஞான ரீதியானது கிடையாது.மட்டுமல்ல .சைவ உணவுப் பழக்கத்திற்கும் ஆன்மீகத்திற்கும் ஒரு தொடர்பும் கிடையாது.சைவம் உயர்வானது என்கிற நம்பிக்கை ஒரு மாயை. வாயுத் தொல்லைகள்,புரதக் குறைவு போன்ற வியாதிகளும் அதனால் ஏற்படுகிற பழுப்பு ,துர்நாற்றம் போன்றவை சைவ உணவால் ஏற்படக்கூடியவை.கிராமத்து பிராமணர்களில் இரண்டு கிலோமீற்றர் அளவிற்கு நீளமாக குசு விடுபவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.பிறரில் குறைவு இது  .  அவர்கள் தவறாக பல காலமாகப் பின்பற்றி வருகிற சைவ உணவுப் பழக்கமே இதற்கு காரணம்.பிராமணர்களின் உடலில் இருந்து வீசுகிற தவறான வாடைக்கும் அவர்கள் மேற்கொண்டு வருகிற உணவுப் பழக்கத்திற்கும் தொடர்பு உண்டு.என்னுடைய பிரா

சுஜாதா பேரில் எனக்குப் பகையொன்றும் இல்லை

Image
சுஜாதா பேரில் எனக்குப் பகையொன்றும் இல்லை அது போலவே கிளியோ பாட்ரா பேரிலும் எனக்கு விரோதம் கிடையாது.ஒவ்வொரு காலத்திலும் எவ்வளவோ பிரபலங்கள் பிறக்கிறார்கள்.ஒரு காலத்தில் இருந்து மறு காலத்திற்குள் நுழைய முடியாத எவ்வளவோ பிரயாசைகள் இருக்கின்றன.அதனால் அவையெல்லாம் தவறென்றும் இல்லை.கோவி மணிசேகரனும் ,சாண்டில்யனும் ,ராஜேஷ் குமாரும் புதுமைப்பித்தனைக் காட்டிலும் ,மௌனியைக் காட்டிலும் ,சுந்தர ராமசாமியைக் காட்டிலும் தலை சிறந்தவர்களாகக் கூட இருக்கலாம்.ஆனால் இரண்டும் வேறு வேறே .அதுதான் முக்கியமானது.அமிதாப்பச்சன் பிரபலம்தான் அதனால் ரே க்கு என்ன வந்தது ? ஒரு காலத்தில் மஞ்சு வாரியார் மலையாளத்தில் பிரபலம் .அதன் பொருட்டு அரவிந்தனுக்கு என்ன ? பாலகுமாரனின் ஒரு பத்தியின் அளவிற்கு கூட எழுத வக்கற்ற பலர் தமிழின் தீவிர எழுத்தில் கிடந்தது கத்துவது உண்டு.உண்மை.ஆனால் பாலகுமாரன் அடைய நினைக்கும் இடத்திற்கும்  ,இந்த எழுத முடியாதவன் கொண்டு நடக்கும் இடத்திற்கும் வேறுபாடு அதிகம். கனவும் ஒன்று அல்ல. ஒரே தரத்திலானதும் அல்ல.ஒருமுறை தொண்ணுறுகளில் என்று நினைக்கிறேன்.எதோ ஒரு விருதை நிராகரிக்கும் போது ஜெயமோகன் ஒரு விஷயத்தை வெக