Posts

Showing posts from January, 2020

கோழிக்குஞ்சுகளாக பொரித்து நிற்கிறாள்

Image
கோழிக்குஞ்சுகளாக பொரித்து நிற்கிறாள் 1 இசக்கியம்மையே கோழிக்குஞ்சுகளாக பொரித்து நிற்கிறாள் அடைகாக்கிறாள் காபந்து செய்கிறாள் கோழிகளை மேய்க்கவும் செய்கிறாள் 2 விஷ வேட்டாளிகள் நான்கைந்து கூடி எனது படுக்கையறையில் கூடுகள் அமைத்திருக்கின்றன பகலிரவு பாராத வேலைகள் அவர்களுக்கு நான் எப்போதேனும் வருகிறேன் தூங்குகிறேன் போய்விடுகிறேன் முதலில் எல்லோரும் பயமுறுத்தினார்கள் அவர்கள் உன்னை கொன்றுவிடுவார்கள் குடைந்து விடுவார்கள் என்றெல்லாம் சொன்னார்கள் எரித்துவிடவேண்டும் என்றார்கள் இந்த அறையில் அவர்கள் வேலைகளை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் எனது வேலைகளை நான் செய்து கொண்டிருக்கிறேன் காலையில் புலரி எழுப்புகையில் முதுகை சடவு வளைத்து குட் மார்னிங் சொல்கிறார்கள் அனைத்து களைப்பினையும் நீரில் வடித்து இரவில் அவர்களுக்கு குட் நைட் சொல்கிறேன் 3  ### மனிதர்கள் மிகவும் சுவாரஸ்யமாக தெரிகிறார்கள் 1 ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமான லௌகீகம் சிறந்த பெண் சிறந்த லௌகீகம் கடினமான பெண் கடினமான லௌகீகம் அவளுடைய விலங்கு அவளுடைய புன்சிரியில் இல்லை அழகில் இல்லை இடைவளைவில

இஸ்லாமிய இசக்கி

Image
இஸ்லாமிய இசக்கி எங்களூரில் ஒருசிறிய இசக்கி உண்டு.தேவகுளத்தில் இருந்து இங்கே வந்து அமர்ந்து கொண்டாள் என்று சொல்வார்கள்.சிறுவயது தொடங்கி இப்போதுவரையில் அவளை  பார்த்துக் கொண்டிருக்கிறேன்.சன்னதம் துளிர்த்து ஆடுகையில் படையலில் இட்ட பிச்சுவெள்ளைகளில் நறுமணம் போதவில்லை என்கிறாள்.ஆரம்பத்தில் அவள் இருந்தது சிறிய குடில் .ரொம்பவும் அழகான குடில் அது.மர அளிகள் கொண்ட தணுப்பான குடில்.இந்த குடிலில் நீ இருப்பாயா ? உன் பிள்ளைகள் இருக்குமா ? என ஊர் பெரியவர்களைக் கேவலமாகக் கேட்பாள்.பிறகு கோட்டை அமைத்து இருத்தினார்கள்.இப்போது குடில் போல வருமா ? கூட்டாளி தெய்வங்கள் பலரும் இன்னும் குடில் விட்டு இங்கே கோட்டைக்கு வந்து சேரவில்லை என்று அடுத்த தலைமுறையினரை கலவரப்படுத்துகிறாள்.ஏராளம் மின்விளக்குகள் வந்தாயிற்று ,புதிய புதிய பெருஞ்சாலைகள் அதனால் என்ன அவளுக்கு பிச்சி வெள்ளையில் மணம் குறைவு.என் இடை ஒடிந்து விழும் மலர் அலங்காரம் எப்போது வைப்பாய் ? என்னும் கேள்வி . இப்படி இப்படி அவளுடைய பிரச்சனைகள்.ஒருவிதத்தில் இசக்கி என்பவள் பெண்ணின் ஆழ்மனதிற்கு அசல் சான்று.அதனாலேயே அவளை ஒருபோதும் புறக்கணிக்கவே இயலா