Posts

Showing posts from December, 2016

எழுத்தாளன் என்பவன் வெற்றுக்கதை சொல்லியில்லை.

Image
                    எழுத்தாளன் என்பவன் வெற்றுக்கதை சொல்லியில்லை. உள்ளடக்கமும் , கதை சொல்லுதலும் வேறு வேறு காரியங்கள்.கதையடைகிற உருமாற்றமே உள்ளடக்கம். எழுத்தாளனைக் கதை சொல்லியென இங்கே பலரும் கருதுகிறார்கள்.நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளன் உங்களிடம் கதை சொல்வது ,கதைக்கு அப்பால் உள்ள ஒரு உள்ளடக்கத்தைப் பற்றி உங்களோடு தொடர்பு கொள்வதற்குத்தானே அன்றி கதையை மட்டும் சொல்லிவிட்டு கடந்து செல்வதற்காக அல்ல.இந்த உள்ளடக்கம் ஒரு எழுத்தாளனிலிருந்து மற்றொருவருக்கு மாறுபட்டது.சில சமயங்களில் முற்றிலும் ம ாறுபட்டது.எதிரெதிர் நிலைகளிலும் கூட உள்ளடக்கம் அமைய முடியும்.எழுத்தாளனை content writer என்று புரிந்து கொண்டால் அதிக சிக்கல் ஏற்படாது.கதை சொல்ல எல்லா கிழவிகளுக்கும் தெரியும்.ஊர் கிழவி சொல்லுகிற கதைகளும் ஒரு எழுத்தாளன் முயலுகிற உள்ளடக்கப் பாய்ச்சலும் வேறு வேறானவை.தமிழில் உருவான அதிமுக்கியமான எல்லா எழுத்தாளர்களும் content writer தானே அன்றி வெற்றுக் கதைசொல்லிகள் இல்லை. புதுமைப்பித்தன்,மௌனி ,சுந்தர ராமசாமி,எம்.வி .வெங்கட்ராம் ,வண்ணநிலவன் ,அழகிரிசாமி ,ஜானகி ராமன் யாரை வேண்டுமானாலும் நோக்கிப

"ஓம் சக்தி ஓம் பராசக்தி "- வேலாயுதம் பொன்னுசாமி

Image
"ஓம் சக்தி ஓம் பராசக்தி "கட்டுரை நூல் பற்றிய வேலாயுதம் பொன்னுசாமி எழுதியிருக்கும் பீம ராஜா விருதிற்கான  குறிப்பு : ஓம் சக்தி ஓம் பராசக்தி - லக்ஷ்மி மணிவண்ணன் அங்கதத்தின் துடிகொண்டாடும் எழுத்து தமிழ் இலக்கியப்பரப்பில்  கவிஞராக கால் பதித்த லக்ஷ்மி மணிவண்ணன் சிறுகதை ,கவிதை,நாவல் ஆசிரியர் ,விமர்சகர் , உரைநடை எழுத்து , "சிலேட் " இதழ்  ஆசிரியர் ,எழுத்தாளர்கள் தங்கி எழுத்துப் பணியை மேற்கொள்ள "நிழற்தாங்கல்" அமைப்பு என பல தளங்களின் செயல்பாட்டாளர் . இலக்கியத்தை யந்திரத்தனமான பிரதிபலிப்பாக பார்க்காது ,பண்பாட்டு விளைச்சலாகப் பார்க்கக் கூடியவராகவும் ,பண்பாட்டு உருவாக்கத்துக்கு காரணமான தெய்வம் ,பொருளாதாரம்,அரசியல்,உளவியல் போன்ற கருப்பொருட்களுடன் கருத்துநிலை கூறுகளின் வலிமையையும் நன்குணர்ந்தவராக எழுத்தின் மூலம் அறிய முடிகிறது. தன கருத்து நிலையில் இருந்து சமூகத்தை ,இலக்கியத்தை பார்ப்பது ,விமர்சிப்பது ,படைப்பது என்ற இவரின் பதிவுகளில் தற்போதைய உரைநடை எழுத்தாக வந்துள்ளது."ஓம் சக்தி ஓம் பராசக்தி " இப்புத்தகத்தின் தடமறியும் பிரயத்தனத்தில் உள்நுழையும் போ

கலை சோறு போடுமா ?

Image
கலை சோறு போடுமா ? கலைஞர்களை நோக்கி தமிழ்ச் சமூகம் திரும்பத்திரும்ப கேட்கும் கேள்வி  கலை சோறு போடுமா ? என்ன செய்கிறீர்கள்  நீங்கள் ? என்கிற கேள்வி தொடர்பானது அது .இந்த வயது வரையில் இந்த கேள்விக்கு விடைகாண முடியவில்லை . என்னதான் செய்து கொண்டிருக்கிறோம் நாம் ? நாம் செய்பவற்றின் அர்த்தம் எப்போதேனும் விளங்குமா? தெரியவில்லை .ஒரு நல்ல சட்டையை போட்டு விட்டு வந்தால் யார் எடுத்துத் தந்தார்கள் ? என கேட்கும் நண்பர்கள் கூடவே இருக்கிறார்கள்.தமிழ்ச் சமூகம் பிற செயல்களைச் செய்யாமல் கலையின் வேலையை மட்டும் செய்து கொண்டு வாழ்பவர்களை சந்தேகிக்கிறது.அப்படி இருப்பதைக் காண அச்சப்படுகிறது . எப்படி முடியும்? அப்படி வாழமுடியாது என்கிற பாடத்தை தானே உறுதியாக நம்பிக் கொண்டிருக்கிறோம்? இளைஞர்களுக்கு உறுதியாக நான் சொல்லிக் கொள்வது ,நீங்கள் பிடிவாதமாக கலையின் மனம் கொண்டு தீவிரப்படுவீர்களேயானால் வாழமுடியும் . நம்பிக்கையை மட்டும் விடாமலிருக்கவேண்டும் . விக்கிரமாத்தியன் நம்பி ,கோணங்கி ,நான் உட்பட சிலர் உதாரணங்கள் தமிழ் சூழலில் உண்டு. நான் நாளிதழ்களில் செய்தி ஆசிரியரிலிருந்து , கட்டிட வேலையில் கையாள்,கழிவறை துப்

"ஓம் சக்தி ஓம் பராசக்தி "கட்டுரை நூலுக்கு பீமராஜா விருது

Image
"ஓம் சக்தி ஓம் பராசக்தி "கட்டுரை நூலுக்கு பீமராஜா விருது 24  - 12  -2016  வருகிற சனிக்கிழமை மாலை 5  மணிக்கு ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள ஆனந்தா மண்டபத்தில்  நடைபெறுகிற விழாவில் வைத்துத் தருகிறார்கள்.ஒட்டியுள்ள நண்பர்கள் வந்து சேருங்கள்.விருதினை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் வழங்குகிறார். M .V .பீம ராஜா - ஜானகியம்மாள் அறக்கட்டளையின் ஆனந்தாஸ் பீம ராஜா இலக்கிய விருது இந்த ஆண்டில் என்னுடைய "ஓம் சக்தி ஓம் பராசக்தி "கட்டுரை நூலுக்கும் ,நண்பர் ராமாநுஜத்தின் "சந்நியாசமும் தீண்டாமையும் " கட்டுரை நூலுக்கும் கிடைத்திருக்கிறது. ராமானுஜம் டி.ஆர் .நாகராஜின் " THE  FLAMING  FEET " என்னும் ஆங்கிலத்தில் எழுத்தப்பட்ட நூலை  தமிழில் மொழிபெயர்த்தவர்.இவர் எழுதிய தற்கொலையைக் கொண்டாடுவோம் என்கிற கட்டுரை நூலும் மிகவும் முக்கியமானதொரு அரசியல் நூல்.மௌன வதம் என்கிற நாவலையும் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.சிறந்த அறிஞர். "ஓம் சக்தி ஓம் பராசக்தி "கட்டுரை நூல் பத்தியாக "அம்ருதா " மாத இதழில் எழுதத்

மார்கழித் தொகுப்பு ஏழு கவிதைகள்

Image
மார்கழித் தொகுப்பு ஏழு கவிதைகள் 1 அந்தச் சிறுவன் நேற்று முன்தினம் இரவை தூக்கமின்மையில் கடந்து கனரக லாரியில் இங்கு வந்து கொட்டப்பட்டவன் துரத்தப்பட்ட இரவு முகமெங்கும் அப்பியிருக்கிறது. கொண்டைவாழையிலையை உங்கள் முன்னால் போட்டு நீர் தெளிகிறான் பாம்பு கொத்தியது போலே துடித்து "தண்ணியை இப்படியா ஊற்றுவார்கள் ?" எனக் கேட்டு அவன் அம்மையைத் திட்டுகிறீர்கள் சாம்பாருக்கு நேரமாகிவிட்டதென அவன் அப்பனைக் கேள்விகேட்கிறீர்கள் சாப்பிட்டு முடிவதற்குள் சகோதர சகோதரிகள் அத்தனைபேரையும் சாகடித்து விட்டுத்தான் எழும்புகிறீர்கள் நீங்கள் உண்ட சோறு அவனுக்கு வழங்கிய முதல் ஆயுதப் பயிற்சிக்கு நன்றி கூற உங்களை இப்போது பின்தொடரத் தொடங்குகிறது துரத்தப்பட்ட அவனது இரவு. 2 மழைமுடிந்த நகரம் சொட்டுகள் வடிய தனது இரவைத் தொடங்குகிறது புத்தொளிர்வை அது இருள் வானத்தின் உச்சியிலே கொண்டு எட்டுகிறது. வாடகைப் பாடசாலையிலிருந்து குழந்தையை அழைத்து வரும் தகப்பன் காய்ச்சல் மீண்டு எழுந்தவனின் மனத்தால் வாகனத்தை ஒட்டிச் செல்கிறான் பள்ளங்களை வேகத்தால் நிரப்பித் தடுமாறும் வாகனத்தில் அச்சத்தின் தோ

ஏற்பாடு செய்த திருமணங்கள் மோடியால் நிறுத்தி வைக்கப்படவில்லை

Image
ஏற்பாடு செய்த  திருமணங்கள் மோடியால் நிறுத்தி வைக்கப்படவில்லை [ அம்பலம் இணைய இதழுக்கு என்று நண்பர் எழிலன் மோடியின் பணமதிப்பிழப்பு பற்றி என்னிடம் அவசரமாக ஒரு கட்டுரை வேண்டுமென இரு வாரங்களுக்கு முன்னர் கேட்டார்.கட்டுரை எழுதி அனுப்பிய பின்னர் என்னைப்பற்றிய குறிப்புகளும் வேண்டும் அனுப்புங்கள் என்றார் .அதன் பின்னர் புகைப்படங்கள் அனுப்பப் சொன்னார்.அனுப்பிவைத்தேன். இப்போது அதனை வெளியிட இயலாது மன்னித்துக்கொள்ளுங்கள் என்று பதில் அனுப்பியிருக்கிறார்.வெளியிட இயலாததால் எனக்கொன்றும் இல்லை.சுமார் இருபதினாயிரம் பேர் என்னுடைய பதிவுகளை படிப்பதாக இணையம் சொல்கிறது பிளாக் ,முகநூல் உட்பட.எனவே  வெளியிடப்படாததில் எனக்கு இடர்பாடு ஏதுமில்லை.வாசகர்கள் அதனை வேறு வழிகளில் படித்து விடுவார்கள். ஆனால் இவர்கள் ,எழிலன் போன்ற ஊடக  நண்பர்கள்  தங்களை ஜனநாயகவாதிகளாகவும் ,மாற்று கருத்துக்களை ஆராதிப்பவர்களாகவும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பவர்கள்.தாங்கள் கொண்டிருக்கும் கருத்துகளுக்குத் துணையான கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளைத்தான் இவர்கள் பிறரிடம் கேட்கிறார்கள்.பிறவற்றிற்கு இவர்களிடத்தே இடம் கிடையாது. அப்படி மேலும் மே

படைப்பின் அர்த்தம் - படைப்பென்பது மூன்றாம் மொழி

Image
படைப்பின் அர்த்தம் - படைப்பென்பது மூன்றாம் மொழி ஒவ்வொரு மனிதனின் முன்னரும் மூன்று வகையான மொழி முன்னின்று கொண்டிருக்கிறது.சமூக மொழி இதில் பிரதானமானது.அதனை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் சிறுவயது முதலே கற்கத் தொடங்குகிறோம்.இதனை ஒருவிதத்தில் மக்கள் மொழி எனலாம்.இதுவும் பல்வேறு வகைப்பட்டவைதான் எனினும் சிறுவயதுமுதலே நாமெல்லோரும் கற்றுத் தேறுவது இந்த மொழியைத்தான்.இதற்கு முற்போக்கு பிற்போக்கு என்கிற உடல்பாகங்கள் கிடையாது.அன்றாடத் தேவைகளுக்கு என்னென்ன அவசியங்கள் எல்லாம் உண்டோ அவற்றை நோக்கி அது முன்னேற முயற்சித்த வண்ணம் தயங்கிக் கிடக்கும்.அந்நியமான அனைத்தையும் சந்தேகித்தல் அதன் பொதுக்குணம்.அந்நியமானவையென்றால் அது தனக்குப் புறம்பான பிற அனைத்து உருப்படிகளையும்  சந்தேகிக்கும் .பிற சாதியை,மதத்தை ,மொழியை ,பிற பண்பாட்டை என அனைத்தையும் சந்தேகிக்கும்.இப்படியில்லாத சமூக மன அமைப்பு கொண்ட சமூகங்கள் உலகின் எந்த பாகத்திலும் கிடையாது.தான் சார்ந்துள்ளவை மட்டுமே உயர்வானவை என்று நிரூபிக்க விரும்பாத சமூகங்களே கிடையாது.ஆனால் அன்றாடத் தேவைகளுக்கு ஏற்ப இது தன்னிலையை மேம்படுத்திக்   கொண்டுமிருக்கும

"நிழற்தாங்கல்" - அழைப்பு

Image
"நிழற்தாங்கல்" புறக்கணிக்கப்படும் படைப்பாளிகளுக்கான வெளி   -   அழைப்பு புறக்கணிப்பிற்குள்ளாகும் கவிஞர்கள் ,எழுத்தாளர்கள் ,கலைஞர்களுக்கான உறைவிடம் நிழற்தாங்கல்.சமூகத்தாலும் குடும்பத்தாலும் புறக்கணிப்பிற்குள்ளாகும் கவிஞர்கள் தங்குவதற்கும் செயலாற்றுவதற்கும் உரிய ஏற்பாட்டை ஏற்படுத்துவதற்கான நிழற்தாங்கல் அறக்கட்டளையின் முதல் ஆலோசனைக்கு கூட்டம் திருநெல்வேலியில் வருகின்ற 11  - 12  - 2016  ஞாயிறு அன்று நடைபெற உள்ளது. திருநெல்வேலி டவுணில் உள்ள சக்தி கலைக்களத்தில் வைத்து இந்த கூட்டம் காலை மணி பத்து முதல் இரண்டு வரையில் நடைபெறும். அருட்பணி ராஜன் கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். கவிஞர்கள்  லக்ஷ்மி மணிவண்ணன் , விக்ரமாதித்யன் ஆகியோர் உரையாற்றுகிறார்கள். கூட்டத்தின் நிறைவாக எழுத்தாளர் ஷோபா சக்தி நடித்து கென்ஸ் திரைப்படவிழாவில் விருது பெற்ற தீபன் திரைப்படம் திரையிடப்பட உள்ளது.அதனைத் தொடர்ந்து எழுத்தாளர் ஷோபா சக்தியுடன் திரைப்படம் குறித்த கலந்துரையாடல் நடைபெறும்.

நிழற்தாங்கல்

Image
அன்புடன் அழைக்கிறோம். நிழற்தாங்கல் அறக்கட்டளையின் முதல் ஆலோசனைக் கூட்டம் தீபன் திரையிடலுடன்... நண்பர்கள் ,ஈடுபாடு கொண்டோர் திருநெல்வேலிக்கு  11- 12 - 2016 ஞாயிற்றுக்கிழமை வாருங்கள் தலைமை : Fr . ராஜன் வாழ்த்துரை : கவிஞர் விக்ரமாதித்யன் இடம் - சக்தி கலைக்களம் ,ராமையா ஆர்கேட்,54 - A வடக்கு மவுண்ட் ரோட் ,[போத்திஸ் பின்புறம் ] நயினார் குளம் சாலை ,திருநெல்வேலி டவுன் தொடர்பு எண் - 9362682373 தீபன் திரையிடலுக்குப் பின்னர் ஷோபா சக்தியோடு திரைப்படம் குறித்த உரையாடல்

ஒரு அன்னையின் மரணம்

Image
                                                   ஒரு அன்னையின் மரணம் அன்னையாக தன்னை உருவாக்கப்படுத்திக் கொள்ளவே ஜெயலலிதா விரும்பினார்.மக்களும் அவ்வாறே அவரை உருவகம் செய்து கொண்டனர்.கடுமையான தனிப்பட்ட தாக்குதல்கள் ,அவதூறுகள் ,பாலியல் வசைகள் ,அவமானங்கள் இவற்றைக் கடந்து மக்கள் அவரை அன்னையாகவே பாவித்தனர்.பிறர் அளவிற்கு அவர் வஞ்சகம் செய்யமாட்டார் என்கிற எண்ணம் கொண்டிருந்தனர்.கழிந்த தேர்தலில் அவர் கொண்ட வெற்றி என்பது கடவுளின்  விதியை மீறிய வெற்றியாகவே இருந்தது. அவரைப்பற்றிய வசைகளை மக்கள் கேட்டார்கள் ஆனால் சொன்னவர்களைப் புறந்தள்ளி அவர்கள் அன்னையின் பக்கமாக நிற்கவே விரும்பினார்கள். ஜெயலலிதாவை முன்னிட்டு ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கிறேன்.இந்தியாவின் மத்திய அரசாங்கம் அது காங்கிரஸாக இருப்பினும் சரி தற்போதைய பா.ஜ.கவாக இருப்பினும் தமிழ்நாட்டில் இடையூறாக அவர்கள்  கருதுகிற  தலைவர் ஜெயலலிதா மட்டுமே.பிறர் அனைவரையும் அதிகாரத்தால் ,பிறவற்றால் எளிதில் அடிமைப்படுத்தி விடமுடியும் என்பது அவர்களுக்குத் தெரியும் .ஜெயலலிதாவிடம் அவர்களுக்கு  இருந்த இந்த அச்ச உணர்வு பிற தமிழ்நாட்டுத் தலைவர்கள் எவரிடமும்

"நோ நோ NO No ... நேநோ " சாரு

Image
"நோ நோ NO No ... நேநோ " சாரு என்ற வேடிக்கை மனிதர் "அவர் பரிதாபத்துக்குரியவர். தெருவில் மட்டுமே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பவனுக்கு அந்தத் தெருவில் விளையாடுபவர்கள்தான் நாயகர்கள். உலக அளவில் ஆடுபவன் பற்றி அவனுக்குத் தெரிய நியாயமில்லை. என்னுடைய கர்னாடக முரசு, நேநோ, the joker was here, நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்கள் போன்ற சிறுகதைகளின் வாசலைக் கூட அவரால் திறக்க முடியாது. தமிழில் எழுதிய முன்னோடிகளைத் தொடர்ந்து வாசிப்பதன் பயனாக இங்கே உள்ள எல்கேஜி வாண்டுகளுக்குக் கூட அபாரமான தமிழை வெகு எளிதாக எழுதி விட முடிகிறது. அப்படி எழுதத் தெரிந்தவர் அந்த நண்பர். மற்றபடி தமிழின் பத்தாம்பசலித்தனத்தைத் தாண்டி அவரால் யோசிக்கக் கூட முடியுமா என்பது சந்தேகமே. உதாரணமாக, சிங்கப்பூர் இளங்கோவன் பேசும் ஒரு வார்த்தையின் அர்த்தத்தைக் கூட அந்த அன்பரால் புரிந்து கொள்வது கடினம். சினிமா தியேட்டரில் தேசிய கீதம் பாடுவது பற்றிய இளங்கோவனின் காமெண்ட்டைப் பார்க்கவும். இது போன்ற நண்பர்களெல்லாம் நம்மோடு ரெண்டாம் வகுப்பு படித்த பையன்களோடும் பெண் பிள்ளைகளோடும் ஒப்பிடப்பட வேண்டியவர்கள். பா

வைதீகமான பெருநகரத்து அந்நியனின் கதைகள்,நேநோ ...

Image
தமிழ் கலகக்காரனின் கதைகள் லக்ஷ்மி மணிவண்ணன் ( சென்னை புக் பாயிண்ட் அரங்கில் 03-07-99 அன்று நடைபெற்ற சாரு நிவேதிதாவின்  "நேநோ" சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் படிக்கப்பட்ட கட்டுரை) சாரு நிவேதிதா பற்றி தமிழில் பல்வேறுபட்ட புனைவுகள் உள்ளன. கலகக்காரன் ,எதிர் கலாச்சாரவாதி ,வன்முறைக்கு எதிரான தந்தை என்றும் : ஆபாசமான எழுத்தாளன் , கலை இலக்கியம் என்ற பெயரில் ஆபாசமான பாலியல் கதைகள் எழுதக் கூடியவர் என்றும் அவரைப் பற்றிய பிம்பங்கள் வளர்கின்றன .பொதுவாகவே தமிழில் எழுத்தாளர்கள் பற்றி வளரும் புனைவுகளுக்கும் அவர்களது எழுத்துக்களுக்கும் உள்ள தொடர்பு பலகீனமானது ,தெளிவற்றது .பிம்பங்கள் பெரும்பாலும் குடும்ப அரசியல் மொழியின் உதவியுடன் மிருகத்தைப் போல வளர்க்கப்படுகின்றன . வெகுஜன குடும்ப அரசியல் மொழி தனது புனைவுகளைக் கட்டமைத்து வருகிறது . இத்தகைய புனைவுகளுக்குள்ளிருந்து எழுத்தாளன் தொடர்ந்து தப்பித்துக் கொள்ளவேண்டியது அவனது செயல்பாட்டில் முக்கியமானது . தொடர்ந்து மனதை விழிப்புடன் வைத்துக் கொள்வதன் மூலம் அவன் தன்னைப் பற்றிய புனைவுகளைத் தாண்டிச் செல்ல முடியும் . தமிழில் கலைஞர்களும்