எவ்வளவு செலவு ?

கேட்கவே மாட்டான் கவிதைகள் - 18 1 என்னைப் போலிருப்பவனை பிடிக்கமாட்டேன் என்கிறது பயந்து முகம் திருப்பி விடைபெற்று விரைகிறேன் என்னைப் போலிருப்பவனிடம் இருந்து என்னைப் போலிருப்பவனிடமிருந்து எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறேன் அவ்வளவு இடைவெளி இருக்கிறது பராபரமே இருவருக்கும் என்னைப் போலிருப்பவன் என்னைப் போலவே இருக்கிறான் இன்னும் எவ்வளவு தூரம் கடந்து கல்லும் முள்ளும் சவுட்டி என்னிடம் வந்து சேர வேண்டும் இந்த என்னைப் போலிருப்பவன் ? 2 என்னையே எவ்வளவு நேரம் உள்ளேயிருந்து பார்த்துக் கொண்டிருப்பது ? அதனால்தான் வெளியே வந்து ஒருமுறை வானத்தைப் பார்த்தேன் ஆச்சரியம் வானம் நான் ஆனது இப்போது 3 ஒரு ரயில் நிலையம் ஒரு போதும் ஒரு ரயில் நிலையமாக இருப்பதில்லை அதற்கு ஆயிரம் முகங்கள் அதில் ஒன்று அனாதை பையனுடையது 4 கண்டு வெறுக்கும் தன்மையில் இங்கே தெருவில் நடக்கிறார்கள் பாருங்கள் சாலையில் திரிகிறார்கள் பாருங்கள் கண்டு வியக்கும் அத்தனைபேரும் இப்படித்தான் இருந்தார்கள் 5 பேராசை அவனுக்கில்லை இரண்டு பிடி சோறு தேவை ஒன்றை எடுத்து அவனுக்கு கொடு பேராசைய...