அழிக்கவே இயலாதவன்

அழிக்கவே இயலாதவன் 1 எந்த ஒருவனை அழித்துவிட்டால் அதன்பிறகு நிம்மதியாக இருந்துவிடலாம் என மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறீர்கள் பாருங்கள் அந்த ஒருவன்தான் உங்களால் அழிக்கவே இயலாதவன் 2 அவற்றில் இல்லாதது 1 அத்தனை பொருட்களையும் எனது அறையில் வந்து விசாரித்துக் கொண்டிருக்கும் வயோதிகர் அதன் வழியே அவையல்லாத வேறொன்றை அறிய விரும்புகிறார் ஏதேனும் தடயம் அவற்றில் இருக்கிறதா என நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அவற்றில் இல்லை அவற்றின் தடயம் 2 கடுமையான சுய நலம் கடுமையான பொது நலம் போல பாவனை செய்தபடி இருக்கிறது 3 வீட்டில் ஏற்பட்ட வடுக்கள் வெளியே இறங்கியதும் சாலை விதிகளை தாறுமாறாகக் கடக்கின்றன 4 ஒத்தையடிப்பாதையில் தென்படும் கடைக்கு பலபக்க வாசல் 3 அதனதன் நிழல் 1 வீட்டிற்குள்ளேயே பதுங்கியிருப்பவனுக்கு முன்கோபம் அதிகம் நாயிடமென்றாலும் வள் எனக் குரைப்பான் அடங்கியே இருப்பவனுக்கு ஆத்திரம் அதிகம் 2 கடற்கரை விகாசம் கடலம்மை மனம் போல 3 பூர்வ குடிப்பெண் ஆண் விலங்கு கேட்பாள் ஆண் விலங்கு கிடைத்தால் பெண் விலங்கால் மோதுவாள் 4 ...