எனக்கு சொல் உயரத்தில் இருந்து கிடைக்கிறது

எனக்கு சொல் உயரத்தில் இருந்து கிடைக்கிறது 1 இந்த சாலையிலிருந்து அடுத்த சாலைக்கு அனைத்தையும் மாற்றிக் கொண்டேன் விதி விலகி வழிவிட்டது 2 வாழ்க்கையை மாற்றிக் கொள்ளாமல் வெறுமனே பேசிக் கொண்டிருப்பவன் பீடை 3 ஐந்தடி தூரத்தில் இருக்கலாம் உனக்கான சுனை 4 ஊழ் நிரந்தரமாக பற்றிக் கொண்டிருப்பதில்லை தொட்டு எடுத்து விடத் தெரிய வேண்டும் அவ்வளவே 5 ஒவ்வொன்றையும் மாற்ற வேண்டும் ஒன்றை விட்டு வைத்தாலும் அது வந்து மற்றதை பிடித்துக் கொள்ளும் 6 மாற்றிக் கொண்டிருப்பவனுக்கு மட்டுமே ஒவ்வொன்றும் அமுதென தோன்றும் விட்டதும் அமுதம் பட்டதும் அமுதம் இன்று நின்று பார்ப்பதும் அமுதமே 7 உன்னை மாற்றி கொள்ள முடியவில்லையெனில் எதற்காக சித்தாந்தம் பேசித் திரிகிறாய் ? 8 எனக்கு சொல் உயரத்தில் இருந்து...