கோழிக்குஞ்சுகளாக பொரித்து நிற்கிறாள்

கோழிக்குஞ்சுகளாக பொரித்து நிற்கிறாள் 1 இசக்கியம்மையே கோழிக்குஞ்சுகளாக பொரித்து நிற்கிறாள் அடைகாக்கிறாள் காபந்து செய்கிறாள் கோழிகளை மேய்க்கவும் செய்கிறாள் 2 விஷ வேட்டாளிகள் நான்கைந்து கூடி எனது படுக்கையறையில் கூடுகள் அமைத்திருக்கின்றன பகலிரவு பாராத வேலைகள் அவர்களுக்கு நான் எப்போதேனும் வருகிறேன் தூங்குகிறேன் போய்விடுகிறேன் முதலில் எல்லோரும் பயமுறுத்தினார்கள் அவர்கள் உன்னை கொன்றுவிடுவார்கள் குடைந்து விடுவார்கள் என்றெல்லாம் சொன்னார்கள் எரித்துவிடவேண்டும் என்றார்கள் இந்த அறையில் அவர்கள் வேலைகளை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் எனது வேலைகளை நான் செய்து கொண்டிருக்கிறேன் காலையில் புலரி எழுப்புகையில் முதுகை சடவு வளைத்து குட் மார்னிங் சொல்கிறார்கள் அனைத்து களைப்பினையும் நீரில் வடித்து இரவில் அவர்களுக்கு குட் நைட் சொல்கிறேன் 3 ### மனிதர்கள் மிகவும் சுவாரஸ்யமாக தெரிகிறார்கள் 1 ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமான லௌகீகம் சிறந்த பெண் சிறந்த லௌகீகம் கடினமான பெண் கடினமான லௌகீகம் அவளுடைய விலங்கு அவளுடைய புன்சிரியில் இல்லை அழகில் இல்லை இடைவள...