பசி கவிதைகள்

பசி கவிதைகள் 1 தாலத்தை எடுத்து வையுங்கள் அம்மா பசிக்கிறது தாலத்தில் சோறினை போடுங்கள் அம்மா பசிக்கிறது பிறக்கும் முன்பிருந்தே பசிக்கும் பசி 2 ஹெல்மெற்றுக்குள் இருக்கும் நண்பனுக்கு பல சௌகரியங்கள் முகம் தெரியாது என நினைத்துக் கடந்துவிடலாம் இந்த சனியனா வருகிறான் என ஒதுங்கி விரைந்து விடலாம் தெரியவா போகிறது தெரிந்தால் தெரியட்டுமே காறியுமிழ்ந்து கடக்கலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஹெல்மற்றுக்குள் நண்பனின் தலை வேறொன்றாக இருக்கிறது நாம் பொதுவாக அறியாத வேறொரு தலை அது எல்லா வசதியும் இருந்தும் நெளிந்து வளைந்து இறங்கி நான்தான் என்று ஹெல்மற்றை இறக்கி நின்று கொண்டிருக்கிறான் பாருங்கள் ஒரு நண்பன் அவன்முகத்தில் அவனிங்கே பிழைக்க வந்ததன் ரேகையே இல்லை ### கணநேர வித்தியாசம் 1 சிலையாக இருந்தால் கற்பனை செய்யமுடியும் நீயோ சிலையிலிருந்து வெளிவந்து ஆளாக நிற்கிறாய் கற்பனைகளை முழுவதுமாக இழந்து இழந்து முற்றிலும் கைவிடச் சொல்லிய இடத்தில் நீயாக இருக்கிறாய் இதற்கு சிலையாகவே இருந்திருக்கலாம் இந்த கற்சிலை 2 நானும் சிலையாக இருந்தேன் கற்சிலையாக ...