10 கவிதைகள்
10 கவிதைகள் 1 எல்லா சராசரியும் ஒன்றில் சராசரி மற்றொன்றில் மேதை எல்லா மேதையும் ஒன்றில் மேதை மற்றெல்லாவற்றிலும் சராசரி 2 இன்று பொறிக்குள்ளிருந்து வெளியே வந்து பொறிக்கான பொறியொன்றை வாங்கி பொறிக்குள் திரும்பினேன் அதனை மேஜையாக்கி அதன் மீது சில வார்த்தைகளை வைத்தேன் வெளியில் நின்றொருவன் மதுக்குவளையுடன் பொறிக்குள்ளிருக்கிறாய் தெரியவில்லையா உனக்கு என கத்திக் கொண்டிருந்தான் மேஜையிலிருந்த வார்த்தைகள் இதுவொரு கனவென்பது உனக்கு விளங்கவில்லையா? என்று கேள்வி கேட்கின்றன அவனை நோக்கி 3 காய்ச்சலில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் எப்படி மறைக்க முயன்றாலும் காய்ச்சல் தனக்கு வெளியே தெரிகிறது 4 இன்றைய காலை இளவெயிலுக்கு மிதமான காய்ச்சல்,உடல் வேதனை மங்கலாக கண்கள் கூசுகின்றன தென்னைவோலைகளில் ஒளி வைர மின்னல் பாராசிட்டமால் 650 தந்திருக்கிறேன் மதியத்திற்குள் என் மதியம் திரும்பிவிடும் என் வெயில் எவ்வளவு என சரியாகக் காண்பேன் அல்லது காணாமலும் இருப்பேன் எப்படியாயினும் அதுவே வெயிலின் என்னுடைய சரியான அளவு இந்த இளவெயிலொரு மிகை 5 யாரும் பார்க்காத ஒரு பாம்பு சட்டையை தடயமென விட்டுச் சென்றது மீட்டர் பெட்டிக்குள் கிட...