மற்றது தின்றது போக

1 மற்றது தின்றது போக ஆமைக் குஞ்சில் ஆயிரத்தில் ஒன்று தேறும் மற்றது தின்றது போக பறவைக் குஞ்சில் நூற்றில் பத்து தேறும் விலங்கில் பத்தில் ஒன்று வாழ்வது வீடெனில் விதிவசம் தானே தின்றது போக மனிதனுக்கு லட்சத்தில் ஒன்று தேறும் மீதம் நீறும் 2 ஆடுகடித்து காயம் பட்ட சரக்கொன்றையை மிசுறு எறும்புகள் கூடி காப்பாற்றுகின்றன ஒரு காரணத்திற்குள் ஒன்று ஒன்று மற்றொன்று என நீள்கிறது யாத்திரை யாருடைய காரணத்திற்காகவோ நீங்கள் என்னுடைய காரணத்திற்காக அவர் அவருடைய காரணத்திற்காக மற்றொருவர் என ஒரே பொதிதான் பிரிக்க பிரிக்க பொதி பொதியாக வருவது 3 உடல் விடர்த்து தளிர்க்கும் அரசமரம் மரத்தின் எலும்புக்கூடென நிற்கிறது அதன் மேல் அமர்ந்திருக்கும் காகங்கள் கிளிகள் கொக்குகள் அரசின் கனிகள் போல தொங்குகின்றன அடுத்த பருவம்இவை உதிர்த்து பச்சயம் பூக்கும் எல்லாமே வெட்ட வெளியில் நடக்கின்றன ஒளிவு மறைவு என்று ஒன்றுகூட இல்லை பிரதான சாலையோரம் இது 4 இருக்கும் போதே இறந்தவன் இறந்து போனான் உதிர்ந்த மாலைகள் கொண்டு அவனுடைய தேர் அலங்கரிக்கப்படுகிறது. புதிய புதிய மாலைகள்தாம் ஏனிப்படி உடனுக்குடன் உதிர்கின்றன ? விழாக்களுக்கு அவன் வந்து செல்லு...