நான்கு கவிதைகள்

நான்கு கவிதைகள் 1 தனக்கு ஒவ்வாதவர்களைப் பார்த்து தெருவில் இறங்கி மனம் குரைக்கத் தொடங்கியது திருப்பி அழைத்து வந்து அதன் நாற்காலியில் அமர வைத்தேன் தனக்கு இசைவானவர்களை நோக்கி இளிக்கத் தொடங்கியது திருப்பி அழைத்து வந்து அதன் நாற்காலியில் அமர வைத்தேன் இச்சை இனாமென்று ஓடும் அதனை திருப்பித் திருப்பி அழைத்து வந்து அதன் நாற்காலியில் அமர வைத்தேன் ஒருபோதும் நாற்காலியில் நானிருந்தேனில்லை. 2 என்னுடைய அப்பைய்யா என் வழியாகத்தான் பறவைக்குரல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார் எதன் குரல் எதுவென அவர் பிரித்துக் கொள்வார் அவருக்கு அது தெரியும் என்னுடைய அப்பம்மை பொங்கி எழும் கடல் நாதம் காண்பது என் வழியாகவே... அறிந்து கொண்டிருக்கிறாள் அது கேட்பதல்ல காண்பது என்னுடைய தெய்வங்கள் என்னுடைய நாவிலிருந்து பதனீரின் கருப்பட்டியின் ருசியை எடுத்துக் கொள்கின்றன என்னுடைய மூச்சை இழுத்து எடுத்து அமரர் மேடைக்குள் அனுப்பிக் கொண்டிருக்கிறேன் என்னுடைய அன்னை சுவாசித்துக் கொண்டிருக்கிறாள் ஒரு காலத்திற்குள்ளிருந்து வேறொரு காலத்திற்குள் தானியங்களை நீட்டும் நீள் அலகு என்னுடையது 3 தந்த தானியத்தை அங்கு கொண்டுபோய் நட்டீர்கள் அப்போதும் நீங்...