14 Poems
1 நான் யாருக்கும் போட்டியில்லை என்னிடம் போட்டியிட்டால் நீங்கள் விறுதேதான் போகவேண்டி இருக்கும் ஒன்றுமே நடைபெறாது 2 அவற்றில் இல்லாதது 1 அத்தனை பொருட்களையும் எனது அறையில் வந்து விசாரித்துக் கொண்டிருக்கும் வயோதிகர் அதன் வழியே அவையல்லாத வேறொன்றை அறிய விரும்புகிறார் ஏதேனும் தடயம் அவற்றில் இருக்கிறதா என நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அவற்றில் இல்லை அவற்றின் தடயம் 2 கடுமையான சுய நலம் கடுமையான பொது நலம் போல பாவனை செய்தபடி இருக்கிறது 3 வீட்டின் புண்கள் வெளியே இறங்கியதும் சாலை விதிகளை மீறி நின்று கனைக்கின்றன 4 ஒத்தையடிப்பாதையில் தென்படும் கடைக்கு பலபக்க வாசல் ### 3 ஒருவர் இறப்பதற்கு ஒத்துழைத்துத்தான் ஆகவேண்டும் எவ்வளவு தூரத்திற்கு தீவிரமாக அதை எதிர்ப்பதற்கு ஒத்துழைத்தாரோ அதே அளவுக்கு தீவிரத்துடன் இறப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் அப்போதுதான் மருந்துகளை குறைப்பார்கள் அறுவை சிகிழ்ச்சைக்கு தயாராக மாட்டார்கள் எப்படியும் வேறு வார்த்தைகளில் என்றாலும் ஒருவரிடம்தான் கேட்பார்கள் எதற்கு ஒத்துழைக்கப் போகிறீர்கள் என்று. இறப்பிற்கா ? இறப்பை எதிர்ப்பதற்கா ? பதில்படியே நடந்து கொள்வார்கள் ஒரு மாற்றமும் இல்...