நீங்கள் என்னிடம் வேறு எதையோ எதிர்பார்க்கிறீர்கள்

நீங்கள் என்னிடம் வேறு எதையோ எதிர்பார்க்கிறீர்கள் -கவிதைகள் 1 பாதி ஆயுள் முடிந்தது மூன்று கழுதை வயதும் ஆகிறது நீ கொல்லப்படுவதற்கான எத்தனை தகுதியை வளர்த்து வைத்திருக்கிறாய் இதுகாறும் ? நான் கொல்லப்படுவதற்கான அனைத்து தகுதிகளையும் கைக்கருகிலேயே வளர்த்து வைத்திருக்கிறேன் உனது தகுதியைச் சொல்லி விரைந்து வந்து எனது அறைக் கதவைத் தட்டு தேவைப்படும் ஆயுதங்கள் அனைத்தையும் உனக்கு நானே பரிசளிக்கிறேன் 2 படித்துறையில் சாயங்காலம் இறங்கிக் குளிக்கும் செல்ல மகளை இடுப்பில் எடுத்து கொஞ்சிக் கொண்டிருக்கிறது இந்த புனிதக்குளம் அவள் மூழ்க ஆடைகள் எழும்பி தாமரை வட்டம் குதூகலம் பக்கத்து படித்துறையில் இறங்கி கொண்டிருக்கும் பையனை ஏனென்று கூட கேட்க தயாராயில்லை 3 தள்ளாடி ஆட்டோவில் வந்திறங்கும் தந்தையின் கையில் பால் பாக்கட் கைக்குழந்தையை ஒரு கையால் தூக்கிச் செல்வது போல செல்கிறான் தள்ளாடுகிறது குழந்தை அத்தனைத் தள்ளாட்டத்திலும் அவன் கை குழந்தையை கைவிடவில்லை பால்பாக்கட் முனையை சுருட்டிப் பிடித்திருக்கிறான் பால்பாக்கட்டை எடுத்து கொண்டு தருகிறேன் என்று சொன்னவனை ...