பெருந்தேவியின் இரண்டாம் தரிசனம்

பெருந்தேவியின் இரண்டாம் தரிசனம் வாழ்வின் மீது அபத்தத்தின் ரசம் எந்த பதுங்கு குழியிலிருந்து வந்து தெறிக்கிறது என்பதை கணிக்க முடியவில்லை.அபத்தத்தின் கசந்த ருசியை அல்லது வெளிறிய அதன் தோற்றத்தை கவிஞன் கண்டடையும் விதம் ஒரு பொது நெருக்கடியாக மாறும் தன்மை கொண்டிருக்கிறது.பெருந்தேவியின் "பெண் மனசு ஆழம் என 99 .99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள் "என்னும் புதிய கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகள் அபத்தத்தின் நிறம் கொண்டவையாக இருக்கின்றன. மொத்த வாழ்வும் அபத்தமாக மாறியிருப்பதை அதன் நுண் தளத்தில் வைத்து பெருந்தேவி இந்த கவிதைகள் மூலம் கண்டடைந்துள்ளார்.அபத்தத்தின் நடனத்தில் பெண் உடலும் சக்கையாகி வெளிறி மிதப்பதை இந்த கவிதைகளில் காண்கிறோம்.காமம் அனைத்து பொருட்களிலிருந்து தன்னை நீங்க எத்தனிக்கும் கவிதைகளாக இத்தொகுப்பின் கவிதைகள் உள்ளன.கடைசி கையறு நிலையாக அது வாழ்வின் மீது ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய விமர்சனத்தில் இருந்தும் தன்னை விலக்கிக் கொள்கிறது ."இறந்து விட்ட என் பெற்றோர் நானும் இறந்து விட்டதாகவே...