கந்துவட்டி பலரோடும் தொடர்புடையது

கந்துவட்டி பலரோடும் தொடர்புடையது கந்து வட்டி என்பது பணத்தைக் கொடுத்து வசூலிப்பவரோடு மட்டும் தொடர்புடைய ஒன்று அல்ல. பணத்தைக் கொடுத்து வாங்குகிறவர்கள் ஆயிரம் ரூபாய்க்கு ஐம்பது ரூபாய் என்கிற வட்டியில் கல்லூரிப் பேராசிரியர்கள்,வங்கி மேலாளர்கள் ஆகியோரிடமிருந்து பணத்தைப் பெறுகிறார்கள்.இவர்கள் மட்டும் என்றில்லை இவர்கள் எங்கள் ஊரில் அதிகம்.மேலும் பல தரப்பினரும் உண்டு. வசூலித்தாலும் இல்லையென்றாலும் ,வசூலிக்க இயலவில்லை என்றாலும் ஐம்பது ரூபாய் வட்டியை இவர்கள் கொடுத்தே ஆகவேண்டும்.இல்லையெனில் இவர்கள் தொழிலே செய்ய முடியாது.இரண்டாவது காரியம் சமூகத்தின் உள்ள பண தேவையின் இடத்தை கந்து வட்டி பிடித்து வைத்திருக்கிறது.நமது அனைத்து வங்கிகளும் ஏழைகள் விஷயத்தில் அடைந்துள்ள படுதோல்வியின் இடத்திலேயே இது வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு கல்லூரிப் பேராசிரியர் கந்து வட்டியில் பத்து லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள்.மாதம் அவர் அதன் மூலம் ஐம்பதினாயிரத்திற்கும் அதிகமாக வருமானம் பெறுகிறார் என்று பொருள்.யோசித்துப் பார்த்தால் வசூலிப்பவன் இவ்விஷயத்தில் வெறும் கூலியாள் மட்டுமே என்பது ப...