ஆர்.கே நகர் தேர்தலை தி.மு.க பின்னடைவாகக் கருத வேண்டியதில்லை

ஆர்.கே நகர் தேர்தலை தி.மு.க பின்னடைவாகக் கருத வேண்டியதில்லை.

ஆனால்  நிலைப்பாடுகளை உறுதியாக எடுக்க முடியாதவர் ஸ்டாலின் என்கிற மக்கள் கருத்தை தி.மு.க மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்.போராட்டங்கள்,கொள்கை நிலைப்பாடுகள் என்று அனைத்தையுமே தி.மு.க சடங்காக மாற்றி வைத்திருக்கிறது என்று மக்கள் கருதுகிறார்கள்.இரட்டை நிலைப்பாடுகள் மூலம் மக்களை ஏமாற்றுவதை தி,மு.க மாற்றியமைத்துக் கொள்ளவில்லையானால் வருகிற சட்ட மன்ற தேர்தலிலும் ,அனைத்தும் சாதகமாக இருந்தாலும் கூட தி.மு.க தோல்வியடையப்போவது உறுதி.கழிந்த  தேர்தலில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் மீண்டும் அவர்களுக்கு ஏற்படும்.

நீங்கள் என்ன கொள்கையைக் கொண்டிருக்கிறீர்கள் ,நீங்கள் யார் என்பது எதனையும் மக்கள் இப்போது  கணக்கில் கொள்வதில்லை  .நீங்கள் எப்படி செயல்படுவீர்கள் ,என்ன செய்வீர்கள் என்பதை மட்டுமே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.தி.மு.க சமீபகாலங்களில் மக்களுக்காக பொய்யான ஒரு நிலைப்பாடும் ,மத்தியில் ஏற்பட வேண்டிய சமரசத்திற்காக மாற்று நிலைப்பாடும் என இரட்டை நிலைப்பாடுகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.இதனை மக்கள் அறியமாட்டார்கள் என அவர்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் ஆழப் புதைந்துள்ள புதைகுழி இதுதான்.மக்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாக அறியும் திறன் பெற்றவர்கள்.

நீட் எதிர்ப்பிலிருந்து பலவற்றையும் தி,மு.க சடங்காக பாவிக்கிறது என்னும் எண்ணம் மக்களிடம் ஆழமாக வலுப்பட்டிருக்கிறது.ஒரு பிரச்சனையில் ஒரு நிலைப்பாடு எடுத்து போராடும் போது,அதில் சிறந்த முடிவினை எட்டும் வரையில் பிரச்சனையைக் கைவிடக் கூடாது.இதையெல்லாம் விட்டு விட்டாலும் கூட தி,மு.க உண்மையாக இருதய சுத்தியுடன் மக்களின் பக்கம் நிற்க வேண்டும்.இல்லையெனில் நிற்கிறாரோ ,இல்லையோ நிற்பார் என எதிர்பார்ப்பவர்களை மக்கள் தேர்ந்து எடுத்து விடக் கூடும்.வரும் தேர்தலிலும் தி.மு.க வாய்ப்பை இழக்குமெனில் பின்னர் கொடி பிடித்து கோயில் வைத்து மீண்டு வர வெகுகாலம் ஆகும்.

காலம் ,மனம் என எல்லாமே மாறிக் கொண்டிருக்கின்றன.அறிந்து கொண்டால் சரிதான்.

No comments:

Post a Comment

நினைத்தார்கள் நினைத்திருந்தேன் - 62

நினைத்தார்கள் நினைத்திருந்தேன் 1 இடையில் இறந்து விடுவேன் என்றே எல்லோரும் நினைத்தார்கள் நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன் 2 ...