நீங்கள் வாழ்க்கையிலிருந்து பேசுகிறீர்களா ?

நீங்கள் வாழ்க்கையிலிருந்து பேசுகிறீர்களா ? நீங்கள் எதைப்பற்றி பேசினாலும் வாழ்க்கையிலிருந்து பேசுகிறீர்களா ? என்பதனை கவனிப்பேன்.நீங்கள் பேசுகிற விஷயங்களோடு வாழ்க்கையும் வாழ்வனுபவமும் அது சார்ந்த தரிசனங்களும் பொருத்தப்பாடு கொண்டிருக்குமெனில் இமைய மலையைச் சரிப்பது பற்றி பேசினாலும் சம்மதமே .இல்லையெனில் புறக்கணித்து விடுவேன்.படைப்பு வாழ்க்கையின் சலனம் , தரிசனம் இரண்டும் ஒன்று குவிந்த இடம் தமிழில் பொதுவாக அறிவுத்தளங்களில் வாழ்க்கையோடு சம்பந்தமே, தொடர்பே இல்லாத பாசாங்கான ஒரு மொழியை தொடர்ந்து பின்பற்றுகிறோம்.நமது அத்தனை விதமான அடிப்படைச் சிக்கல்களும் இங்கிருந்தே தொடங்குகின்றன.பொது மக்களிடம் இந்த பாசாங்கு இல்லை.நமது போலி அறிவுத் தளங்கள் இதன் மீதே பெரும்பாலும் சவாரி மேற்கொள்கின்றன.நாம் பின்பற்றாதவற்றை பொதுவில் பேசுவதில் சிறிய கூச்சமும் நம்மிடமில்லை ஒவ்வொரு காலகட்டத்திலும் இதற்காக சக்கைகள் நம்மிடம் வந்து குவிகின்றன.உடைப்பது ,நொறுக்குவது ,தந்தையரைக் கொல்வது இதுபோல இன்னும் ஏராளம்.இதில் எதனையேனும் உடைத்தவன் ஒருவன் பேசுகிறான் எனில் எனக்கு அதில் கேட்பதற்கு ஒரு விஷயம் இருக்கிறது.அவன...