தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்

தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் தமிழ் எழுத்தாளன் பிறரிடம் உபகாரங்கள் பெறாமல் தன்னிச்சையாக வாழ்தல் என்பது இயலாத காரியம்.அந்த உபகாரம் பொருள் சார்ந்ததாகவோ , இல்லை அதிகாரம் சம்பத்தப்பட்டதாகவோ இருக்கலாம்.ஏராளமான சமூக உதவிகளை இலவசமாகப் பெற்றுக் கொழித்தவர்கள் ; உதவிகளின் பொருட்டு எளிய எழுத்தாளர்கள் மீது அவதூறுகளை பகிரங்கமாக்குவது சுய பரிசீலனை அற்றது.புறம்போக்கு நிலம் அத்தனையையும் பட்டாமாற்றி வைத்திருப்பவன் ;எள்ளுருண்டை வாங்கித் தின்றவன் மேல் குற்றச்சாட்டுகளை நீதிமான் தோரணையில் சொல்வதற்கு ஈடானது.வெட்கக்கேடானது.இதுபோன்ற விஷயங்களை ஒருபோதும் எழுதக் கூடாது என்பதே என்னுடைய பொதுவான எண்ணம்.ஆனால் எழுத வேண்டிய சூழ்நிலையை சூழல் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.ஏனெனில் ஏராளமான பேர்களின் உதவிகளால் உருக்கொண்டது எனது வாழ்க்கை. தமிழ்ச் சமூகம் ஒருபோதும் எழுத்தாளனுக்கும் ,கலைஞர்களுக்கும் செய்கிற உதவிகளை கணக்கில் கொண்டிருப்பதில்லை.கணக்கு பார்ப்பதில்லை.செய்த உதவியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என அவனுக்கு கட்டளைகள் இடுவதுமில்லை.வெளியில் தம்பட்டம் அடிப்பதில்...