அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வரவில்லை என்று கூறினேன்.அதற்கு இரண்டு க ாரணங்கள் இருந்தன.காமராஜர் பற்றி இன்று பொதுவாகப் பேசப்படும் பொதுமனநிலையிலிருந்து, அதற்கு உட்பட்டு எதையும் பேச இயலாது.மாறாகப் பேசும்போது அவை தவறாக எடுத்துக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் . பிறந்த சாதியைச் சேர்ந்த சாதியவாதிகள் காமராஜரை எப்படி இப்படி பேசலாம் எனவும் பிற சாதியவாதிகள் காமராஜர் என்பதால் பேசுகிறேன் என்று வேறுவிதமாகவும் அணுகுவதற்கான வாய்ப்புகளே இன்றைய தினத்தில் அதிகம். ஆன்டனி எனது நண்பர்.புரிந்து கொண்டார் என்று நினைக்கிறேன்.ஏற்கனவே அவரது அழைப்பை ஏற்று சென்னை சென்று ஒருமுறை அந்த ஷோவில் பங்கேற்றிருக்கிறேன் . மற்றொரு முறை சென்றபின் ஏற்பாடு செய்த அரங்கில் பங்கேற்க முடியாது என மறுத்துத் திரும்பவும் செய்திருக்கிறேன்.அன்டனி ஊடகக்காரர்களில் சற்று விதிவிலக்கானவர்.புரிந்து கொள்ளக் கூடியவர்.அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் குட்டிரேவதி,பிரபஞ்சன் உட்பட காமராஜரின் பிறந்த சாதியை சேர்ந்த மூவரும் அழைப்பை மறுத்து வ...