நண்பர் ,திரைப்பட இயக்குனர் அய்யப்பன் தவறினார்

நண்பர் ,திரைப்பட இயக்குனர் அய்யப்பன் தவறினார் அவருடைய ஆன்மா சாந்தியடைய என்னுடைய பிரார்த்தனைகள். சமீப காலங்களில் பழகி என்னுடன் மிகவும் நெருக்கமாகவும்,அன்பாகவும் ,மதிப்புடனும் இருந்த நண்பர் அவர்.பார்ப்பதற்காக அடிக்கடி வந்து கொண்டேயிருந்தார்.குடிக்காதீர்கள் என்று பலமுறை அவரிடம் உரிமையுடன் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.ஏதேனும் காரணங்கள் சொல்வார்.அவர் சொல்லும் காரணங்கள் ஏற்கனவே நானும் சொல்லித் திரிந்த காரணங்களாகவே இருந்தன.ஒருவேளை ஒரு பெண் துணை அவருக்கு இருக்குமாயின் இதில் விடுதலை பெற ுவாரோ என்கிற எண்ணமும் எனக்கிருந்தது.அதற்காக தெரிந்த இலக்கிய வட்டத்தில் அவருக்கு பெண் பார்த்தோம் .சிலர் வேண்டாம் என்றார்கள்,ஒத்துக் கொண்டவர்களை இவர் மறுதலித்து விட்டார்.ஏற்பவர்களை மறுப்பது தாழ்வுணர்ச்சியின் நோய்.நமது சமூக நோய்களில் ஒன்று இது.நிராகரிப்பவர்களை காதலிக்கும் நோய் . அவர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் "நிலம் நீர் காற்று " படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது என்று சொன்னேன்.மதுபானக்கடை படம் எனக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. தமிழ்நாட்டில் எண்பதுகளில் இரு...