முற்போக்கர்கள் பிளவுஸ் அணிந்த வரலாறு

முற்போக்கர்கள் பிளவுஸ் அணிந்த வரலாறு கிறிஸ்தவ மதம் வேறு கிறிஸ்தவக் கருத்தாக்கம் என்பது வேறு .கிறிஸ்தவ மதம் என்பது கிறிஸ்தவராக மதம் மாறியவர்களை பராமரிக்கும் வேலையை மட்டுமே செய்யக் கூடியது.கிறிஸ்தவக் கருத்தாக்கம் என்பது அனைத்து துறைகளையும் தன்னுடைய கருவிகளால் மேலாண்மை செய்யவும் ,மூழ்கடிக்கவும் திறன் கொண்டது.இந்திய முற்போக்குகள் பெரும்பாலும் அருந்ததி ராய் உட்பட ,ரொமீலா தாப்பர் உட்பட கிறிஸ்தவக் கருத்தாக்கங்களை தங்களுடைய உள்ளடக்கமாகக் கொண்டவர்கள்.இந்திய இடதுசாரிகள்,பகுத்தறிவுவாதிகள் அனைவரும் இந்த கருத்தாக்கத்திற்குள் சிக்கியிருப்பவர்களே.அதிலும் குறைந்த பட்ச விசாரணை கூட இல்லாமல் சிக்கியிருப்பவர்கள் என்று கூறுவதே சரியானதாக இருக்கும்.இங்குள்ள அதிரடி முற்போக்குகள் பலருக்கும் இப்படித்தான் சிக்கியிருக்கிறோம் என்பது கூட விளங்குவதில்லை. பிராங்பர்ட் மார்க்சியர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை.உதாரணமாக இந்தியாவில் அஜீஸ் நந்தி , டி.ஆர் .நாகராஜ் போன்றோரைக் குறிப்பிடலாம்.துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இங்கே மார்க்சியர்களாகவே கருதப்படுவதில்லை.அஜீஸ் நந்தி ஓரிடத்தில் வெளிப்படையாகவே இந்த குறையை சுட்டிக் க...