குடும்ப தெய்வங்கள், குல தெய்வங்கள், கிராம தெய்வங்கள் ?

குடும்ப தெய்வங்கள், குல தெய்வங்கள், கிராம தெய்வங்கள் ,காவல் தெய்வங்கள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குடும்பத்தை அளத்தங்கரை குடும்பம் என்பார்கள்.பொன்னார் குடும்பம் பெண் வழி உறவின் நிமித்தம் இங்கே வந்தவர்கள்.ராஜாக்கமங்கலம் உப்பளத்தை திருவிதாங்கூர் ராஜாக்கள் காலத்தில் உரிமையாளராக வைத்து நடத்தியவர்களின் குடும்பம் அது .பெரிய குடும்பம் .இன்றும் பெரிய குடும்பமே. எங்களுடைய குடும்பத்திற்கும் அவர்களுக்கும் உறவு உண்டு.அவர்களுடைய குடும்ப தெய்வத்தின் பெயர் மனோன்மணி .இன்று வரையில் அவர்கள் குடும்பத்தின் ரகசிய தெய்வமாக மனோன்மணி திகழ்கிறாள்.குடும்பத்தினர் எங்கெங்கோ பரந்து விரிந்து பரவியிருந்தாலும் ஆண்டின் எல்லா நாட்களிலும் மனோன்மணிக்கு விளக்கு போட வேண்டும்.ஒவ்வொரு நாளும் குடும்ப அங்கத்தினர் யாரேனும் ஒருவர் எங்கிருந்தாலும் வந்து செய்ய வேணும்.ஒவ்வொரு நாளுமென ஆண்டு முழுவதற்கும் யார்யார் செய்ய வேண்டும் என்பதனை அவர்கள் பகுத்து வைத்திருக்கிறார்கள்.தவறாமல் செய்து வருகிறார்கள். உங்கள் உயிருக்கும் உடமைக்கும் இந்த குடும்ப தெய்வங்களே அரண் .உடலுக்கோ உடமைக்கோ இடர்பாடு ஏற்படுகிறதெனில் மனோன்மணி முன்னி...