எழுத்தாளனுக்கு வாசகனே உறவு

எழுத்தாளனுக்கு வாசகனே உறவு எழுத்தாளனுக்கு வாசகனே உறவு தென்காசியில் சில கோயில்களை பார்த்து விட்டு திரும்பும் வழியில் விக்ரமாதித்தன் அண்ணாச்சி "நானோ நீயோ பத்துப் பதினைந்து வாசகர்களேனும் அமையாமற் போயிருந்தால் இந்நேரம் இருந்திருக்க முடியாது இல்லையா ? என்று கேட்டார்.பெருந்துர்க்கையை கண்டு திரும்பும் வழி அது.அவருடன் செல்கையில் வினோதமான கடவுள்களையெல்லாம் கண்டிருக்கிறேன்.பிறர் கண்டிருக்கிறார்களா தெரியாது.ஒருவேளையில் நானும் அவரும் இணைகையில் காணும் தெய்வங்கள் தாமோ அவை ! வெறி கொண்ட கோலம் .விஸ்வரூபம்.பெண் சாதாரணமாக இருக்கையிலும் விஸ்வரூபமே.இதில் விஸ்வரூபத்தில் நின்று கொண்டிருந்தால் எப்படியிருக்கும்? தமிழின் பெருங்கவிஞன் ஒருவன் ,தனது வாழ்வின் அநேக காலத்தை தெருவிலேயே முடித்தவன்,பெருந்துர்க்கை கண்ணிலேயே நின்று கொண்டிருக்கும் போதே கேட்ட கேள்வி இது.ஒரு சில வாசகர்கள் தான்.இந்த பிறவிப் பெருங்கடலை கடக்க உடன் வந்து கொண்டேயிருக்கிறார்கள்.ஒருவன் அலுக்கும் வேளையில் மற்றொருவன் பிறந்து விடுகிறான்.செய்ய நினைப்பவை எதுவாயினும் எந்த தடங்கலும் ஏற்பட்டதில்லை.குறையில்லை. எப்படி தமிழில் எழுதுகிற கலைஞன் ஒ...