வண்ணதாசன் என்ற கல்யாண்ஜி

வண்ணதாசன் என்ற கல்யாண்ஜி ; மனதால் எழுந்து வந்த பாதை பெரும்பாலானவர்களை பாதித்தவர் கல்யாண்ஜி . கவிதை எழுத விரும்பும் ஒருவர் அவரால் பாதிப்படையவில்லையெனின் இனி பாதிப்படைவார் .இரண்டு வகையினர் இங்கே இருக்க முடியும் .ஒன்று அவரால் ஏற்கனவே பாதிப்படைந்தவர் இல்லையெனில் இனி பாதிப்படையவிருக்கிறவர்.அன்றாடத்தின் பல நுட்பங்களை அவர் வாசகனுக்கும் கடத்திவிடக் கூடியவர்.சீண்டும் பண்பும் கொண்டவர்தான் என்றாலும் அது அவரில் மிகவும் சிறிய பகுதி.அன்பால் மூடியிருக்கும் பகுதி அது.தமிழில் வாசகர்கள் அதிகம் உள்ள கவிஞரும் அவரே. கவிஞர்களில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படையாகப் பேசியவர்கள் மிகவும் குறைவு.நவீனத்துவ விமர்சகர்கள் அவரை பொருட்படுத்தி பலமாக நிராகரித்தார்கள்.அதற்கு அது ஒரு காரணமாக இருக்கலாம்.இந்த நிராகரிப்பையும் மீறி அவர் ,தான் என்ன செய்ய வேண்டுமோ அதனை தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தார். தமிழ் சூழலில் இதழியல்,விமர்சனம் கலையிலக்கியம் எல்லாவற்றிலுமே ஏராளமான பாரபட்சங்கள் உண்டு.அவற்றில் பல கண்களுக்கு புலப்படாதவை.சாதி,மதம் ,கருத்தியல்,கொள்கை ,கட்சி என நிறைய . இவற்றையெல்லாம் ஒருவர் எதனால் எதனால் ? என்...