அமைதி தனித்திருக்கிறது

அமைதி தனித்திருக்கிறது 1 போற்றப்படுவதெல்லாம் வளர்வதை போலவே தூற்றப்படுவதெல்லாமும் வளர்கிறது தனக்குள் தானாக 2 புறத்தில் இருந்து காரணங்கள் வந்தால் உள்ளம் சிதைகிறது உள்ளத்தின் காரணம் புறத்தை அழிக்கிறது புறத்தை அழிக்கும் அகம் அகோரம் 3 எல்லாம் ஒரே வகை விதவையர் ஒரே வகையாக இருக்கிறார்கள் விடோவர் ஒரே வகையாக இருக்கிறார்கள் விவாகரத்து பெறுவோர் ஒரே வகையாக இருக்கிறார்கள் திருமணம் ஆனவர்கள் ஒரு வகை ஆகாதவரெல்லாம் ஒரே வகை ஆகவே முடியாதவர்கள் ஒரு வகை முரண்படுவோர் ஒரே வகையாக இருக்கிறார்கள் நிம்மதியற்றோர் ஒரே வகையாக இருக்கிறார்கள் எதிர்வாது செய்வோர் ஒரே வகையாக இருக்கிறார்கள் சகிப்பற்றோர் ஒரே வகையாக இருக்கிறார்கள் சண்டையிடுவோர் ஒரே வகையாக இருக்கிறார்கள் சண்டையிடத் தூண்டுவோர் ஒரே வகையாக இருக்கிறார்கள் சச்சரவிடுவோர் ஒரே வகையாக இருக்கிறார்கள் பொது மண்டபம் இடிப்போர் ஒரே வகையாக இருக்கிறார்கள் ஏன் ஒரே வகையாக இருக்கிறார்கள் என்பது தெரியாததால் ஒரே வகையாக இருக்கிறார்கள் ### அமைதி தனித்திருக்கிறது 4 அமைதிக்கும் நமக்குமிடையில் தான் எவ்வளவு பெரிய பேருந்து நெரிசல...