அவர் வீடுதிரும்பியது உண்மைதான்
அவர் வீடுதிரும்பியது உண்மைதான் என்னுடைய நண்பர் ஒருவர் கொலைவழக்கு ஒன்றில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சட்டம்சாரா காவலில் காணாமல் ஆக்கப்பட்டார்.மனைவியின் உறுதியான போராட்டத்திற்குப் பின்னரும் அவர் எங்கே வைக்கப்பட்டார் என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை.எங்களிடம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.காரணம் தெளிவாக இருந்தது.கொலையுண்ட நபரின் மனைவி இவர் பெயரை மனுவிலேயே சந்தேகத்தின் பெயரில் இணைத்திருந்தார். இத்தனைக்கும் வீட்டில் வந்து இவரது மனைவியின் முன்னிலையில் அவரைப் போலீஸார் பிடித்துச் சென்றிருந்தார்கள்.அந்த வழக்கில் காணாமலாக்கப்படும் காவலில் ஆறுபேர் கைது செய்யப்பட்டிருந்தார்கள் உடனிருந்த ஆறுபேரும் ஏற்கனவே ஒன்டென் வழக்கு பதியப்பட்டிருப்பவர்கள்.பதினைந்து நாட்களுக்குப் பிறகு : காணாமலாக்கப்படும் காவலின் விருந்திற்கு எவ்வளவு நாட்கள் எந்த எந்த வைத்தியர்களிடம் வர்மம் எடுக்கவேண்டும் என்கிற அறிவுரையும் வழங்கப்பட்டு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.விடுவிக்கப்பட்டமைக்குக் உண்மையான குற்றவாளி பதினான்காவது நாளில் சரணடைந்திருந்ததே காரணம் .அவர் சரணடையவில்லை எனில் இந்த அறுவரில் பின்னணி குறைந்...