தீவிரம் வேடிக்கை வேறுபாடு - 12

கமலாம்மா அரிதாகச் சிலரே தங்களுடைய தேவதைத்தன்மையைத் தவிர்த்து பிறவற்றை பிறருக்கு வெளிப்படுத்தாத தன்மையைப் பெறுகிறார்கள்.அதற்கு மிகவும் மனத் துணிச்சலும் ,வாழ்க்கை மீதான நிதானமான பார்வையும் தேவை.ஆழ் சமுத்திரம் போலும் சலனமின்மை அவசியம். நான் அவ்வாறாக உணர்ந்த ஒருசிலரில் கமலாம்மா ஒருவர்.அவர் நிச்சயமாக தேவ பிரகாசம். அவரை கடைசியாக ஒரு பொது நிகழ்ச்சியொன்றில் பார்த்தேன்.பல வருடங்கள் இருக்கும் .இப்போது நண்பர் ஒருவர் அவருடைய புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.ஸ்ரீனிவாசன் நடராசன்.அவரின் தன்மையை வெளிப்படுத்தும் புகைப்படங்கள். எவ்வளவோ நினைவலைகள். சுராவின் மறுபக்கம் கமலாம்மா. அவருடைய மன அலைவரிசையில் அவ்வளவு தூரத்திற்கு நெருங்கிக் கைகோர்த்திருந்தவர் கமலாம்மா.பெரிய ஆளுமைகளின் துணையாக அமைவது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சிரமங்கள் நிறைந்ததுதான்.நான்கு தலைமுறை எழுத்தாளர்கள் வந்து தங்கி உரையாடி மீண்டும் கூடும் வண்ணம் வேகமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு வீட்டை நிர்வாகம் செய்தவர் அவர்.எட்டு வருடங்கள் அந்த வீட்டோடு நெருங்கிய உறவு கொண்டிருந்த நான் ஒருபோதும் முகமலர்ச்சியற்றோ ,நிதா...