தீவிரம் வேடிக்கை வேறுபாடு - 14

1 சமூகத்தை எதிர்கொள்ளுதல் சமூகத்தை எதிர்கொள்வது எப்படி என்று யாரும் நமக்கு கற்றுத் தருவதில்லை.அப்படி சரியாகக் கற்றுக் கொள்ளவும் இயலாது.நாமே கற்றுக் கற்று தெளிய வேண்டிய பாடம் இது.கடைசிவரையில் கற்றுக்கொண்டே இருக்க வேண்டிய பாடமும் கூட .கோட்பாடுகள் வழியே ,கொள்கைகள் வழியே ,அரசியல் சார்புநிலைகளின் வழியே இதன் பாதை துலங்குவதில்லை.வாழ்வதன் மூலமாக மட்டுமே இதன் புகைமூட்டங்கள் அகலும் . இளைஞர்கள் பலர் சமூகத்தை எதிர்கொள்வதில் ஏற்படுகிற இடர்பாடுகளை தாங்கள் நம்பும் கோட்பாடுகளோடு தொடர்பு படுத்திவிடுகிறார்கள்.அவர்களுக்கு கோட்பாடுகளின் உள்ளடக்கமும் விளங்குவதில்லை.சமூகத்தை எதிர்கொள்ளும் வாய்ப்பும் கிடைப்பதில்லை.கோட்பாடுகளில் சமூகத்தை எதிர்கொள்ளும் பிரச்னையை ஒப்படைக்கும்போது சமூகத்தை ஒருபோதும் எதிர்கொள்ள இயலாத இடத்தை நோக்கி அவர்கள் விரைவாக முன்னகர்ந்து விடுகிறார்கள். தாங்கள் தேர்வு செய்யும் கோட்பாடுகளுக்குத் தக்கவாறு " நான் பெண்ணாக இருப்பதால் இந்த சமூகத்தை எதிர்கொள்ள முடியாமல் இருக்கிறேன்.இந்த சாதியில் பிறந்ததால் என்னால் இந்த சமூகத்தை எதிர்கொள்ள முடியவில்லை "என்று ஏதோ ஒருவிதத்தில் பிரச்னையை...