கொலையாளி விட்டுச்சென்ற சட்டை - சிறுகதை

கொலையாளி விட்டுச்சென்ற சட்டை - லக்ஷ்மி மணிவண்ணன் அன்று எதற்காக அந்தச் சட்டையை முடிவு செய்தேன் என்பது சரியாக விளங்கவில்லை.எனது உடல்வாகுக்கு அது ஏற்றதாகவும் இல்லை .சற்று பெரியது .பச்சை வண்ணத்தில் தங்க நிறக் கோடுகள் குறுக்கு நெடுக்காக பதிக்கப்பட்ட சட்டை அது .தோளின் இருபுறமும் பட்டைகள் தைக்கப்பட்டிருந்தன .அதுபோல முழுக்கையை மடக்கி பொத்தான்களில் இணைத்துக்கொள்ளும் வண்ணம் ஒரு சிறப்பு அமைப்பும் இருந்தது .பச்சை வண்ணத்தில் தங்கக் கோடுகளின் பளபளப்பு அந்த சட்டைக்கு ஒரு வசீகரத்தை வீசிற்று .எப்படிப் பார்த்தாலும் அது வழக்கமான சட்டையாக இல்லை .தையல்காரர் அச்சட்டையில் தனது செயலை ஏற்றியிருந்தார் .தனது காதலியைப் பழிவாங்கும் நோக்கம் ;அவர் இந்த சட்டையை உருவாக்கும்போது ;அவரது மனதில் ஓடிற்று என்பதை சட்டை வெளிப்படுத்திற்று .பேரலன்காரம் என்றெல்லாம் சொல்ல முடியாது .எனினும் சட்டைக்கு தனிச்சிறப்பு இருந்தது .ஆனால் நீங்கள் நினைத்துக்கொள்வதைப் போன்று சட்டை தோல் போன்று விறைப்புத் தன்மை கொண்டதில்லை .மாறாக மிருதுவானது . சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு நள்ளிரவில் இளம் கொலையாளியொருவன் என்னிடம் இந்த சட்டையை வ...