தூய்மைவாதத்தின் மீதான மக்கள் கவர்ச்சி

பாசிசத்தின்,தூய்மைவாதத்தின் மீதான மக்கள் கவர்ச்சி ஓராண்டோ ஒன்றரை ஆண்டோ இருக்கும் இந்த கட்டுரையை எழுதி.தி இந்து நாளிதழில் வேறொரு தலைப்பில் இது வெளி வந்தது .நிறு வனங்களின் இறுக்கத்தின் காரணமாகவோ அல்லது அரசின் செவி கேளாத்தன்மை காரணமாகவோ மக்களிடம் பாசிசத்தின் மீதான கவர்ச்சி ஏற்பட்டிருப்பதை உணர்கிறேன் .அமர்த்தியா சென்னும் இது போன்ற தன்மை கொண்ட ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.ஏகதேசம் அவரும் இந்த கட்டுரையிலிருப்பதைப் போன்ற கருத்தையே முன்வைக்கிறார். அரசின் செவிகேளா தன்மை காரணமாக தூய்மையை இலக்காகக் கொண்ட தனிமனித ஆளுமைகள் அவதார புருஷர்களைப் போன்று தோன்றி தங்களின் தரப்பில் நீதியை நிலை நிறுத்த வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள்.ஆனால் இத்தகைய நீதியை நிலை நாட்டவருகிற தனிமனித ஆளுமைகளும்,தூய்மைவாதிகளும் தான் சகலத்தையும் சுதந்திரத்தையும் முடக்கக் கூடிய பாசிசத்தை நோக்கி மக்களை நகர்த்தக் கூடிவர்கள் என்பதை அவர்கள் அறிவதில்லை.அறிய வைக்கவேண்டிய அறிவுஜீவிகளும் இங்கே தொழில் படவில்லை என்பதே வேதனைக்குரியது.இன்றைய தினத்திலும் இதற்கு இருக்கும் பொருத்தப்பாடை முன்னிட்டு இந்த கட்டுரையைப் பதிகிறேன் .அரசின் செயல்ப...