கல்குதிரை- 26,27

தமிழ் கலாச்சாரத்தின் மெய்யான முகம் "கல்குதிரை".

தமிழ் கலாச்சாரத்தின் மெய்யான முகம் கல்குதிரை.கழிந்த முப்பதாண்டு காலமாக கல்குதிரை தொடர்ந்து சூழலில் தாக்கம் ஏற்படுத்தி வருகிற இதழ்.அதன் உச்சபட்ச சாத்தியத்தை இப்போது வந்திருக்கும் இரு இதழ்களும் கொண்டிருக்கின்றன.இன்னும் இருபது ஆண்டுகளுக்கு தமிழில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிற இதழ்கள் இவை. இதற்கு மேலாகவும் இங்கொன்றும் இல்லை . இதற்கு குறைவானதும் இங்கில்லை.கல்குதிரையே மேம்பட்ட தமிழின் தரம்.குறைந்திருப்போர் இதன் உயரத்திற்கு மேலெழும்பி வரவேண்டும்.இதனினும் மேலென்போர் இதழின் புதிய முயற்சிகளுக்கு திருவருட்கொடை செய்யலாம்.

கல்குதிரையின் தற்போதைய இரண்டு இதழ்களும் தமிழின் அத்தனை பொய் முகங்கள் பேரிலும் சூடு வைத்திருக்கிறது.தடம் , படம்,பாம்படம்,காலச்சுவடு ஓலை சுவடு , உயிர்மை மறுபிறப்பு , தீராநதி வைகை போன்ற இடைநிலைப் பரிவாரங்கள் , அத்தனை பொய் முகங்கள் பேரிலும் எடுக்கப்பட்டிருக்கும் மாயா நடவடிக்கை இது.
தனி மனிதனாக நின்று ,நிறுவனங்கள் எதனுடனும் கைகோர்க்காது கோணங்கி ஆற்றிவரும் பணி வியத்தலுக்குரியது.பிறராலோ,நிறுவனங்களாலோ,பல்கலை புலங்களாலோ சாத்தியமற்றது.

கல்குதிரையின் அளவிற்கு தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளாத நிறுவனங்களானாலும் சரி ,தனி நபரானாலும் சரி தமிழ் பண்பாடு , கலை,இலக்கியம் பற்றி முடிவான அபிப்ராயங்கள் கொண்டிருத்தல் குறைபாடுடையதே.வாய்ப்பேச்சில் வீரரடி என்பது போலே...



கல்குதிரை
ஆசிரியர் - கோணங்கி
6/1700 இந்திரா நகர் .கோவில்பட்டி -628502
தோலை பேசி - 9952546806
கல்குதிரை இரண்டு இதழ்களும் சேர்த்து விலை - 285
பக்கம் - 374

Comments

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"