Posts

Showing posts from December, 2018

நினைத்தார்கள் நினைத்திருந்தேன் - 62

Image
நினைத்தார்கள் நினைத்திருந்தேன் 1 இடையில் இறந்து விடுவேன் என்றே எல்லோரும் நினைத்தார்கள் நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன் 2 போலியான அன்பில் வலிந்து வழியனுப்ப வாகனத்தில் என்னை ஏற்றிக் கொண்ட நண்பன் வழியில் வருவோர் போவோரையெல்லாம் திட்டி கொண்டே வந்தான் ஏன் இந்த அளவிற்கு என்னைத் திட்டிக் கொண்டே வருகிறாய் ? இறக்கி விடச் சொல்லிவிட்டேன் 3 அவன் என்னைத் திட்ட அது என்னுள் வந்தமர்கிறது நான் மற்றொருவனை திட்ட அவன் மற்றொருவரிடம் கொண்டு சேர்கிறான் யாரின் அகத்தளம் இது என்றே தெரியவில்லை நடந்து முடிந்த விபத்திற்கு 4 நல்லபடியாகப் பேசினால் நல்லபடியாக நினைத்துக் கொள்கிறார்கள் மற்றபடி நடத்தையில் ஒன்றுமில்லை 5 கூப்பிடும் தூரத்திலே எல்லாமே இருக்கின்றன துயரத்தை அழைப்பவனிடம் துயர் வந்து சேருகிறது என்னை எப்படி நீ அடையாளம் கொண்டு கொண்டாய் என அவன் கேட்கிறான் நீதானப்பா அழைத்தாய் என அது திருப்பிக் கேட்கிறது 6 தூய அன்பு நரபலி கேட்கும் பலியானவன் மீதே அன்பெனக் கதறும் 7 மதிக்கத் தெரியாதவனுக்கு செயல் இல்லை 8 ஒரு வயல் உருவாவதற்குத் தேவையான சோறு ...

எவ்வளவு ஆச்சரியமானவை

Image
எவ்வளவு ஆச்சரியமானவை 1 அவளைத் தொடுவது ஒன்றும் பெரிய காரியமல்ல அவள் வளர்க்கும் அத்தனை பேய்களுக்கும் சேர்த்து நீ பொறுப்பெடுக்க வேண்டும் 2 ஆதியிலே தொடங்கி அவள் மீது ஏறி அமர்ந்து வருகிற பேய்கள் அவை சுலபத்தில் அடங்காது 3 கண்கள் ஆயிரம் ஒளியாண்டுகளை அறியும் 4 அவளுடைய வயிறு ஆதி நட்சத்திரமும் ஆதி மிருகமும் இணைந்தது 5 சாந்தமாயிரு அது ஒன்றே உனக்கு அருளப்பட்டது 6 நான் இருக்கிறேன் எனது குழந்தைகள் இருக்கிறார்கள் உறவுகள் நட்புகள் இருக்கிறார்கள் காகங்கள் இருக்கின்றன எல்லாவற்றையும் காண கண்கள் இருக்கின்றன இவையெல்லாம் எவ்வளவு ஆச்சரியமானவை 7 கிடந்து துயிலும் நாய் பதட்டத்தின் திசைகளில் எல்லாம் கண்களைத் திருப்புகிறது 8 இப்பொழுதில் வாழ்பவனை இறந்த காலத்தில் வாழ்பவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் எதிர்காலத்தில் இருப்பவன் பொறாமைப்படுகிறான் 9 எதையும் சரிப்படுத்த இயலாது வேண்டுமானால் நீ சரியாக இரு 10 தேங்கிய நீர் ஓடும் நீரை விஷமாக்கும் 11 ஏன் மாயா அவனை அறிந்து கொண்டேன் என இவனை அறிந்து கொண்டேன் என தன்னை அறிந்து கொண்டானா இந்த தான...

பெரியாரியர்களின் தேவை

Image
பெரியாரியர்களின்  தேவை கௌசல்யா ,சக்தி திருமணத்தை முன்வைத்து பல்வேறு விதங்களில் யோசித்துப் பார்த்தேன்.ஒவ்வொரு திருமணத்திற்கும் பின்னால் ஒரு சமூகம் இந்திய வாழ்வில் அவசியப்படுகிறது.கௌசல்யா போல பெருந்துயருள் நுழைந்து விடும் குழந்தைகளுக்கு ஆதரவாக நிற்கும் பொதுச் சமூகங்கள் எவையேனும் நம்மிடத்தில் இருக்கிறதா ? இந்த திருமணத்தில் பல்வேறு தரப்பினர் நின்று கொண்டிருந்தாலும் கூட பெரியாரியர்களே சூழ்ந்து நின்று காக்கிறார்கள் என்பது வெளிப்படை .பெரியாரியர்களின் தேவை இன்னும் முடிவடையவில்லை என்பதனையே இது காட்டுகிறது. பெரியாரியர்களின் சித்தாந்தங்கள்,கொள்கைகள் ,பிரகடனங்கள் எவற்றின் பேரிலும் எனக்கு நம்பிக்கையில்லை.அதற்கு காரணம் அவர்களை திட்டமிட்டு மறுப்பதும் அல்ல.அதற்கான ஒரு அவசியமும் எனக்கு இல்லை.அவர்களின் முழக்கங்கள் பலதும் தட்டையான புரிதல்களில் இருந்து வெளிவரக்கூடியவை .வாழ்வைப் பற்றிய மிகவும் எளிமையான முன்முடிவுகளை ஏற்படுத்துபவை என்பதனால் தான்.ஆனால் அவர்களுக்கும் இங்கே ஒரு சமுகமிருக்கிறது,அறவுணர்ச்சியிருக்கிறது.கலாச்சாரம் இருக்கிறது.பிறருடைய போலியான நீதியுணர்ச்சியைக் காட்டிலும் செயல்பாடுகளில் ...

நடக்க வராத குழந்தைக்கு நீந்த வரும்

Image
நடக்க வராத குழந்தைக்கு நீந்த வரும் 1 நீங்கள் கருணையுள்ளம் கொண்டவராக இருக்கலாம் அதற்காக இந்த வாழ்வை கருணையோடு வாழ்ந்து விடுவீர்கள் என்று சொல்ல முடியாது 2 எதை சம்பாதித்தீர்களோ அதுவே கடைசியில் எஞ்சி நிற்கிறது 3 பொறாமையால் ஒருவனைத் தாக்கும் போது இதற்காகவே காத்திருந்தவனைப் போல அவன் ஒருபடி மேலேறிச் செல்கிறான் இல்லையானால் இந்த காரியம் நடந்திருக்காது 4 நீங்கள் வைத்திருக்கும் 15தையும் இழந்து பெற்றதந்த 16 . 16 அவன் கைலிருக்கிறது என்று ஆதங்கப்படுகிறீர்கள் 15தையும் அவன் பாதத்தில் கொண்டு போய் வைத்து விடுங்கள் 16றை அவனிடமிருந்து திருடியேனும் உங்களிடம் ஒப்படைத்து விடுகிறேன் 5 நடக்க வராத குழந்தைக்கு நீந்த வரும் 6 வாழ்க்கை எதை செய்யச் சொல்கிறதோ அதை மட்டும் செய் உன் இஷ்டப்படி எதையாவது செய்து வைக்காதே அது வாழ்கைக்குப் பிடிப்பதில்லை 7 எல்லோரும் வெளிச்சத்தில் இருந்தால் இருட்டில் வேலை தேடு 8 சுத்தமாக துடைக்கப்பட்ட தரையில் படித்த புத்தகங்களில் சில பயன்முடிந்த பொருட்களில் சில சிந்திக் கிடக்கட்டும் சரிப்படுத்தாதே 9 தீக்குளிக்க விரும்...