கண்டடைதலின் கவிதை

கண்டடைதலின் கவிதை


லக்ஷ்மி மணிவண்ணனின் இக்கவிதைகள் புதுக்கவிதையின் பழகிப்போன தேடல் ,சலிப்பு ஆகியவற்றுக்குப் பதிலாக கண்டடைதலை, அதில் உளம் அமைதலை காட்டுகின்றன. அதற்குரிய ஒரு ‘ நெஞ்சோடு கிளத்தல்’ மொழி அமைந்துள்ளது. இது இக்கவிதைகளை வீரசைவ வசன கவிதைகளை நினைவூட்டுவதாக ஆக்குகிறது. அக்கமாதேவியின் குகேஸ்வரன் நெஞ்சக்குகையில் வாழ்பவன்
தானே ?
கண்டடைதலின் கவிதை இக்கவிதைகளை வகுப்பேன். இவற்றை கருத்துக்கள், அறிவுறுத்தல்கள் என்று கொள்வது கவிதை வாசிப்பாகாது. அவ்வெளிப்பாடுகளினூடாக அவை நிகழ்ந்த அந்தத் தருணத்து உளநிலையை, அகஎழுச்சியை சென்றடைய முடியும் என்றால் வாசகனும் அக் கவிதையைப் பெற்றுக் கொள்கிறான்
###
வெவ்வேறு தனிவெளிப்பாடுகள். ஒவ்வொன்றும் தனித்தவை. ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையும்கூட. அவை இணைந்து உருவாகும் அந்த உளநிலையின் உச்சம் அச்சருகு. ஒரு காலால் விண்ணுக்கு எற்றப்பட்டு பறவையாகும் தருணத்தை அடைந்தது. அது காலனின், தருமனின் கால்.
- ஜெயமோகன்
[ ஜெயமோகன் நமது படைப்புகள் பற்றி சொல்லும் போது பிறர் எவர் சொன்னாலும் ஏற்படாத மகிழ்ச்சி மனதிற்கு கிடைக்கிறது.தொடர்ந்து எழுதும் உத்வேகத்தை பெறுகிறோம் .இக்கவிதைகள் பற்றிய சரியான வாசிப்பு இது.அவருக்கு என்னுடைய நன்றிகள் ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"