மத மாற்றங்களும் இந்தியாவில் பெருமரபுதான்

மத மாற்றங்களும் இந்தியாவில் பெருமரபுதான் மத மாற்றங்கள் குறித்து இந்தியாவில் இந்து அடிப்படைவாதிகளிடம் சகிப்பற்ற கண்ணோட்டம் நிலவுகிறது.மத மாற்றங்களையும் அவர்கள் ஏற்கவில்லை.அதேசமயத்தில் ஏற்றத்தாழ்வுகளையும் அவர்கள் பழைய முறைப்படி பராமரிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.அதிசயமான முரண் இது.இந்த குரலை முன்னெடுப்பு செய்கிறவர்கள் இன்னும் பெருவாரியான மக்களை ஏற்கவும் முன்வரவில்லை.மத மாற்றங்களை பொறுத்தவரையில் இரண்டு மூன்று தலைமுறைகள் வரையில் மதம் மாறுகிறவர்கள்தான் நெருக்கடிக்குள்ளாகிறார்கள்.எனவே இது மாறுகிறவர்களின் பிரச்சனையே அன்றி பிறருடைய ஆதங்கங்கள் பொறுத்தமற்றவை.ஆதாயத்திற்காக மாறுகிறார்கள் ,திருமணத்திற்காக மாறுகிறார்கள்,ஏற்ற தாழ்வுகளை சகிக்க இயலாமல் மாறுகிறார்கள் எப்படியிருந்தாலும் அதில் எந்தவிதமான பிரச்சனைகளும் கிடையாது.ஆதாயத்திற்காகத் தான் மாறுவார்கள் .ஒரு விஷயத்தில் ஒரு ஆதாயமும் கிடையாது ; அவமானம் மட்டுமே மிஞ்சுகிறது என்றால் மாறுவதுதானே சிறந்த விஷயம் ?.மாறாமல் இருந்து இருந்த இடத்திலேயே புழுத்து சாவதற்கா மனித வாழ்க்கை ? ஒரு கலாச்சாரம் ஒத்துவரவில்லை என நினைத்தால் பிறிதொன்றைத் தேர்வு...