ஜனநாயகத்தில் இடம் கிடையாது எடப்பாடி...

ஜனநாயகத்தில் இடம் கிடையாது எடப்பாடி... கொஞ்சம் பேர் எட்டு வழிச் சாலையை எதிர்ப்பதாக சட்டமன்றத்தில் ஒத்துக் கொண்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி .கொஞ்சம் பேர் அரசின் ஒரு திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்றால் அரசு அதனைக் கைவிடத்தான் வேண்டும்.அதுதான் உலகெமெங்கும் உள்ள நாகரிக அரசுகள் பின்பற்றுகிற நடைமுறை.ஊர் முழுதும் கூடியெல்லாம் எங்கேயும் எதையும் எதிர்ப்பதில்லை. நாங்கள் ஒரு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் வாயிலாக குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல் ஏற்படுத்தும் சில ஆசிரியர்களை விசாரிக்கும் பொறுப்பில் ஒருசமயம் இருந்தோம்.இரண்டே இரண்டு பெண்குழந்தைகளும் அவர் தம் பெற்றோர் மட்டுமே புகார் அளிக்க முன்வந்தவர்கள்.அதற்கு அர்த்தம் அவர்கள் மட்டுமே சீண்டலுக்கு உள்ளானவர்கள் என்பதல்ல.இரண்டு பேர் இத்தகைய காரியங்களில் துணிந்தால் பிரச்சனை முற்றி சீழ் வடிகிறது என்பதே அதற்கு அர்த்தம். புகாருக்குள்ளான ஆசிரியர்களில் ஒருவர் தந்து உறவினரான காவல் ஆய்வாளர் ஒருவரை பயன்படுத்தி ஒரு குழந்தையின் மீது போலியான வழக்கொன்றை பதியவும் செய்தார். இத்தனைக்கும் யோசித்துப் பாருங்கள் ...ஆசிரியர் சமூகம் அளவற்ற அதிகாரம் கொண்ட சமூ...