அளத்தங்கரை "கோயில் வீடு" இந்து நாடார் குடும்பம்

அளத்தங்கரை "கோயில் வீடு" இந்து நாடார் குடும்பம் எட்டு தலைமுறைக் குடும்பம். எட்டாவது தலைமுறையில் பேரன் பேத்திகளுடன் மரகதம்மாள்.நிறைந்த தேஜஸ் .எட்டு தலைமுறை கடந் து செல்வதென்பது சாதாரணமான காரியமில்லை.மூன்றாவது தலைமுறையே பெரும்பாலும் கசந்து விடும்.நாலில் ஷீணம் உண்டாகும் .முரண்படும்.மன சஞ்சலங்கள் தோன்றும். அதனையெல்லாம் ஒரு குடும்பம் கடந்து செல்வதென்பது தெய்வ காரியமின்றி வேறில்லை.ஐந்து தலைமுறை கடந்தாலே அரசியல் அதிகாரம் ஏற்பட்டு விடும்.முதல் தலைமுறையிலேயே ஏற்படுகிற அரசியல் அதிகாரத்திற்கும் இதற்கும் அநேக வித்தியாசங்கள் உண்டும்.மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த குடும்பத்தைச் சார்ந்தவர். எட்டு தலைமுறை என்பது கிளைகிளையாக மொத்த சமூகத்திலும் ஊடுருவி இருக்கக் கூடியது . அளத்தங்கரை குடும்பம் இதற்கு உதாரணம்.இந்த குடும்பத்திற்கு கிழக்கு வடக்காக ஏராளமான கிளைகள்.முகிலன் குடியிருப்பு,ஈச்சன் விளை,மணிகெட்டிப்பொட்டல் என்றும் அதிகமாகவும்.இன்று இந்தியா முழுவதிலும் இருக்கிறார்கள்.உள்ளூரிலும் மருத்துவர்கள் , வழக்கறிஞர்கள் ,பொறியாளர்கள் என்று பலவாறாக.அளத்தங்கரை குடும்பம் என்றால் இன்றும் பெரியவர்...