தீவிரம் வேடிக்கை வேறுபாடு

வாக்காளர்கள் வாக்களிக்க பணம் வாங்குகிறார்கள் என்னும் ஊடகமாயை கழிந்த இருபது வருடங்களில் தமிழ்நாட்டில் நடந்த தேர்தல்களின் களப்பணியில் நேரடியாக இருந்த அனுபவம் எனக்குண்டு. தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., என பல கட்சிகளுக்கும் கடைசி நேர பரப்புரை உட்பட பூத் முகவர்களை நியமிப்பது வரையில் உள்ள பணிகளை நன்கறிவேன். முன் நின்று செய்திருக்கிறேன். கட்சிகளின் நிமித்தம் செய்கிற வேலையில்லை இது. வேட்பாளர்களின் நிமித்தம். அவர்கள் நண்பர்களாகவோ தெரிந்தவர்களாகவோ இருந்து அழைக்கும் போது மறுக்க இயலாமல் செய்கிற பணி இது. எனவே, எந்த கட்சியும் எனது அடையாளமல்ல. கழிந்த தேர்தலில் சுப. உதயகுமாருக்காக நின்றது அணுவுலை எதிர்ப்பின் பொருட்டு. தி.மு.க. நண்பர்கள், “நீங்கள் ஆம் ஆத்மியாக மாறியாச்சா?” எனக் கேட்டு துளைத்து எடுத்தார்கள். காரணம் உதயகுமாருக்காக களத்தில் பணியாற்றிய போது நான் தி.மு.க.வின் எங்கள் பகுதியின் வட்டச் செயலாளர். அதுவும் ஊரிலுள்ள நண்பர் ஒருவரின் வற்புறுத்தலுக்காகத் இருப்பதுதானே தானே ஒளிய வேறு காரணங்களுக்காக இல்லை. நாங்கள் ஆம் ஆத்மியின் உறுப்பினராகவோ பொறுப்பாளர்களாகவோ இணையாமல்தான் உதயகுமாருக்கும் வ...