விருதுகளைப் பொறுத்தவரையில் ...

விருதுகளைப் பொறுத்தவரையில் ... பெறுவதைப் பற்றியோ , தவிர்ப்பதைப் பற்றியோ யாருக்கும் பரிந்துரை செய்ய இயலாது.அது நிச்சயமாக பெறுபவரின் சுயமரியாதையுடனும் ,வாழ்வியல் கண்ணோட்டத்துடனும் தொடர்பு கொண்டது.அதே சமயத்தில் பொதுவான மதிப்பீடுகளை அது புறக்கணிக்காமல் இருப்பதே நல்லது.உதாரணமாக வைரமுத்து விருதை விக்ரமாதித்யன் பெற்றால் அதில் குறை சொல்ல ஏதுமில்லை.பசிக்கும் குழந்தை வழிப்பறி செய்து உண்பதற்கு இணையானது அந்த செயல் . முற்றிலுமாக புறக்கணிப்பிற்குள்ளாகி வருகிற அவருக்கு இதைச் செய்யாதீர்கள் என்று அறிவுரை சொல்லும் தார்மீகம் இங்கே எவருக்குமே கிடையாது.அதே சமயத்தில் கல்யாண்ஜி,கலா ப்ரியா போன்றோர் பெறும்போது இவர்களில் ஒரு சாக்கடைத் தன்மை தோன்றுவதைத் தவிர்க்க இயலாது.ஒருவேளை வைரமுத்து விருதை அசோகமித்திரனோ ,ஞானக்கூத்தனோ பெற்றிருப்பார்களேயாயினும் கூட ஒருகுறையும் ஏற்படாது.இந்த வேறுபாடு என்ன என்பது பற்றி ஒருவர் அறிந்திருப்பாரேயாயின் அவரே விருது பெறுவதில் பொறுப்பேற்பவர் ஆகிறார்.இது முதல் விஷயம். இரண்டாவதாக அந்த விருது நமது முன்னோர்களில் எவர் எவரையெல்லாம் சென்று சேர்ந்திருக்கிறது என்பது முக்கியம்.அதையேன் நான...