நினைத்தார்கள் நினைத்திருந்தேன் - 62

நினைத்தார்கள் நினைத்திருந்தேன் 1 இடையில் இறந்து விடுவேன் என்றே எல்லோரும் நினைத்தார்கள் நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன் 2 போலியான அன்பில் வலிந்து வழியனுப்ப வாகனத்தில் என்னை ஏற்றிக் கொண்ட நண்பன் வழியில் வருவோர் போவோரையெல்லாம் திட்டி கொண்டே வந்தான் ஏன் இந்த அளவிற்கு என்னைத் திட்டிக் கொண்டே வருகிறாய் ? இறக்கி விடச் சொல்லிவிட்டேன் 3 அவன் என்னைத் திட்ட அது என்னுள் வந்தமர்கிறது நான் மற்றொருவனை திட்ட அவன் மற்றொருவரிடம் கொண்டு சேர்கிறான் யாரின் அகத்தளம் இது என்றே தெரியவில்லை நடந்து முடிந்த விபத்திற்கு 4 நல்லபடியாகப் பேசினால் நல்லபடியாக நினைத்துக் கொள்கிறார்கள் மற்றபடி நடத்தையில் ஒன்றுமில்லை 5 கூப்பிடும் தூரத்திலே எல்லாமே இருக்கின்றன துயரத்தை அழைப்பவனிடம் துயர் வந்து சேருகிறது என்னை எப்படி நீ அடையாளம் கொண்டு கொண்டாய் என அவன் கேட்கிறான் நீதானப்பா அழைத்தாய் என அது திருப்பிக் கேட்கிறது 6 தூய அன்பு நரபலி கேட்கும் பலியானவன் மீதே அன்பெனக் கதறும் 7 மதிக்கத் தெரியாதவனுக்கு செயல் இல்லை 8 ஒரு வயல் உருவாவதற்குத் தேவையான சோறு ...