ஜெயமோகனிடம் ஒரு நோக்கியா போன் இருந்தது

ஜெயமோகனிடம் ஒரு நோக்கியா போன் இருந்தது பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முந்தைய மாடல் அது.பலரும் புதிது புதிதாக மாற்றிக் கொண்டிருக்கையில் அவர் மாற்றி கொள்ளவில்லை.எனக்கு அவர் அதனைக் கையில் கொண்டிருக்கக் காண மிகவும் கவர்ச்சியாக இருக்கும்.ஊரே ஒரு விஷயத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறது என்றே கருதுவோம்.நாம் அதற்கு மாறுவதற்கு என்ன அவசியம் இருக்கிறது என்பதில் தெளிவு இருக்குமேயானால் வாழ்வின் முதல் பாடத்தில் தேர்ச்சி பெற்று விட்டதாகக் கருதலாம்.பிரபலத்தில் ஒதுங்கியிருந்து ஒரு நாடார் தேநீர் கடையில் நின்று சுவைக்கத் தெரிந்து விடும்.இது தெரியாதவர்கள் ஆயுள் முழுக்க ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்.பிறர் எப்படி நிம்மதியாக இருக்கிறார்கள் என்று திகைக்கிறார்கள்.பேஷனை நோக்கி நீங்கள் விரட்டிப் பிடிக்காமல் உங்கள் தேர்வை செலுத்த தெரிந்தவராயின் கொஞ்சம் கொஞ்சமாக நீங்களே பிறருக்கு பேஷன் ஆகிவிடுவீர்கள். ஒருமுறை அவரை நான் பார்க்க சென்றிருந்த சமயம் டி சர்ட்டை மாற்றி அணிந்திருந்தார்.நெடுநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பினேன்.இன்று யாரும் அதனை அவரிடம் சுட்டிக் காட்டி அவர் சரியாக திருத்தாதிருக்கட்டும் என மனத...